வலைப்பதிவில் தேட..

Wednesday, May 14, 2008

ஸ்பிரே சென்ட்

நாம் உபயோகிக்கும் வாசனைத் திரவியங்களில் குறிப்பாக ஸ்பிரே சென்ட் போன்றவற்றிலும் சமையலில் உபயோகப்படும் வினிகர் போன்றவற்றிலும் ஆல்கஹால் கலந்திருப்பதாக சொல்கிறார்கள் எனவே இவற்றை நாம் உபயோகப்படுத்தலாமா?

Name: அப்துஸ்ஸலாம்
email: masdooka@.....
Location: சவூதி அரேபியா
Subject: Kelvi

........................

ஆல்கஹால் என்பது இரண்டு வகையானது. எத்தில் ஆல்கஹால், மெத்தில் ஆல்கஹால் என்று அவற்றை வகைப்படுத்துகின்றனர். இதில் மெத்தில் ஆல்கஹால் போதைத் தரக்கூடியது. இந்த ஆல்கஹாலைத்தான் ஸ்ப்ரே சென்ட் உட்பட பல்வேறு மருந்து மாத்திரைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல், குறைவாக பயன்படுத்துகிறார்கள்.

சிலர் ஸ்பிரே சென்ட் பயன்படுத்தும் போது தும்மல் போன்ற அலர்ஜிக்கு ஆட்படுவதற்கு அதில் கலக்கப்பட்டுள்ள ஆல்கஹாலே காரணமாகும். வீடுகளில் வாசனைக்காக உபயோகிக்கப்படும் ஸ்பிரேக்களிலும் இந்தக் கலவை உள்ளது.

ஆல்கஹால் என்ற போதைப் பொருள் கலக்கப்பட்டுள்ளது என்று தெரிந்த நிலையில் அத்தகைய ஸ்பிரேக்களை பயன்படுத்தலாமா என்பது நமக்கு எழும் கேள்வி.

'போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4343,பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4344,பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5586.

நபி(ஸல்) காலத்தில் வாசனைத் திரவியமாக இத்தகைய போதைப் பொருள்கள் கலக்கப்பட்ட எதுவொன்றும் இருந்ததில்லை. எனவே உபயோகித்தால் போதைத் தரக் கூடிய - போதைத் தர வாய்ப்பிருக்கும் பொருட்களை பயன்படுத்துவதையே நேரடியாக அந்த ஹதீஸ்கள் தடுக்கின்றன. எந்த ஒரு பொருளும் அதன் தன்மையை இழந்து விடும் போது நேரடியானத் தடைகளை அந்த பொருளுக்கு பொருத்திப் பார்க்க முடியாது.

ஆண்களுக்கு தங்கம் ஹராம் என்பது நமக்கு தெரியும். ஆனால் தங்கம் பிற உலோகங்களோடு கலந்து தங்கத்தின் அளவு குறைந்து பிற உலோகங்களில் அளவு அதில் அதிகமாக இருந்தால் தங்கம் தடை என்ற குறிப்பிட்ட செய்தியை எடுத்துக்காட்டி மற்ற உலோகங்களின் கலவையையும் நாம் தடுக்க முடியாது.

அதேபோன்று, ஸ்பிரே சென்ட்களில் ஆல்கஹாலை விட பிற திவரங்கள் அதிகமிருக்கின்றன. மருந்துகளில் பிற மருத்துவ குணங்களோடு ஒப்பிடும் போது ஆல்கஹால் குறைவாக இருக்கும். போதையே ஏற்படாத அளவிற்கு பிற கலவிகள் இருந்தால் அதை பயன்படுத்துவதை தடுக்க முடியாது. அந்த வகையில் ஸ்பிரே சென்ட்களை உபயோகிக்கலாம்.

இதை பயன்படுத்தும் போதும் அலர்ஜி போதை போன்ற நிலையை உணர்ந்தால் அவர்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் மிக்க அறிந்தவன்.

இஸ்லாமிய திருமணம் எப்படி?

இஸ்லாமிய திருமணத்தைப்பற்றி தெளிவாக விளக்கவும். இன்று நடக்கக்கூடிய திருமணங்கள் இஸ்லாமிய சிந்தனையற்றதாகவே இருக்கின்றது. பிரமாண்டமாக நடக்கின்றது. மணமக்களை வாயில் சீனி (சர்க்கரை) கொட்டும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தங்களது தெளிவான விளக்கம் தேவை.

Name: Deen
email: rilvan0030@.....
Location: Malaysia
Subject: Question
.............................

இஸ்லாமிய திருமணம் பற்றி விரிவான தகவல் அறிய செல்லுங்கள்.

Sunday, May 4, 2008

பிஜெ

சகோதரர் பிஜே அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். அவர் சொல்லும் சில கருத்துக்களை சில காலங்களுக்குப் பிறகு வாபஸ் வாங்கி்க் கொள்கிறார். அப்படி இருக்கும் போது தற்போது அவர் கூறும் கருத்துக்களை எவ்வாறு நம்புவது?

Name: Mohamed Yaseer
email: awm.yaseer@....
Location: Doha Qatar
Subject: kelvi

தாம் செய்யும் அல்லது தாம் கூறும் ஒரு கருத்து தவறு என்று தெளிவாகும் போது தனது முந்தையக் கருத்தை மாற்றிக் கொள்வது தான் நல்லப் பண்பு. அப்படிப்பட்டவர்களிடம் தான் நியாயமிருக்க முடியும். முதலில் ஒன்றைச் சொல்லி விட்டு பிறகு அதை மாற்றிச் சொல்வது என்பது இன்றைக்கல்ல இஸ்லாமிய அறிஞர்களின் வரலாற்றில் காலந்தோரும் நடக்கக் கூடிய ஒன்றாகும். இதில் மிக பிரபல்யமானது அறிஞர் ஷாஃபி இமாம் அவர்களின் 'கவ்ல் கதீம்' 'கவ்ல்ஜதீத்' என்றத் தொகுப்பாகும்.

தமக்கு முன்னர் கிடைத்தவற்றை வைத்து அவர்கள் வெளியிட்ட, மக்களிடம் சொன்ன கருத்துக்கள் பிறகு அதற்கு மாற்றமான ஆதாரம் கிடைக்கும் போது ஆதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது முந்தையக் கருத்தை வாபஸ் வாங்கியது என்று அவர்கள் குறிப்பிடுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

நாம் ஒரு கருத்தை வெளியிடுகிறோம், அதற்கு மாற்றமான ஒரு தெளிவான ஆதாரம் கிடைக்கின்றது என்றால் ஆதாரத்துக்கே முதலுரிமைக் கொடுத்து நம் கருத்தை பின்னுக்குத் தள்ளி விட வேண்டும். ஆனால் சில முரட்டு அறிஞர்களிடம் இந்தப் பண்பு இருப்பதில்லை. தாம் வெளியிட்ட கருத்தை எப்படியாவது சுற்றி வளைத்து நியாயப்படுத்தத்தான் முயல்கிறார்களேத் தவிர இறைவனின் மார்க்கத்தில் நம் சுய கருத்துக்கு இடமிருக்கக் முடியாது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

தர்கா வழிபாடு, தரீக்கா வழிபாடு, தனிமனித வழிபாடு, இயக்க வழிபாடு என்று எல்லா வழிபாடுகளுக்கும் இந்த மனநிலையே காரணமாகும்.

முந்தைய கருத்தை மாற்றும் போது அக்கருத்தை நம்பியவர்களின் நிலை என்னவென்ற சிந்தனை என்றக் கேள்விக்கு பதில் மிகவும் எளிது.

முந்தையக் கருத்தும் ஒரு ஆதாரத்தின் மீதே அமைந்ததாக இருந்தால் அக்கருத்தை அன்றைக்கு ஏற்றுக் கொண்டவர்கள் சரியானதையே செய்துள்ளார்கள் என்று பொருள். அதற்கு மாற்றமான வேறொரு ஆதாரம் கிடைக்கும் போது முந்தைய ஆதாரம் தளர்த்தப்பட வேண்டும். பிடிவாதம் பிடிப்பது நம்மை வேறு திசையில் திருப்பி விடும்.

பிஜே தன் கருத்தை மாற்றிக் கொள்கிறாரா...!

சந்தோஷம் தான்

மோதிரம் அணியும் விரல்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)மோதிரத்தை நடுவிரல் மற்றும் ஆள் காட்டி விரலில் அணியக்கூடாது என்று சமீபத்தில் ஒர் இதழில் படித்ததாக நண்பர் எங்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது கூறினார்.இதற்கு ஆதாரம் உள்ளதா? மோதிரத்தை எப்படி அணிய வேண்டும் தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

Name: Jageer
email: jageer.ali@.......
Location: UAE S
ubject: Kelvi
.......................

அடிக்கடி சிறுநீர் தொந்தரவு

அடிக்கடி சிறுநீர் ஒழுகும் நபர் என்ன செய்ய வேண்டும். திரும்ப திரும்ப ஒளு செய்ய வேண்டுமா..?

Name: mussafireen
email: mussafireen@......
Location: sri lanka
Subject: Kelvi
........................

இத்தகைய பிரச்சனையுள்ள ஒருவரும் நபி(ஸல்) காலத்தில் இருந்ததில்லை என்பதால் இதற்கு நேரடியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த பிரச்சனையுள்ளவர்கள் எப்படி அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு நெருக்கமான ஆதாரம் கிடைப்பதால் அதை வைத்து இதை புரிந்துக் கொள்ளலாம்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 228
'அபூ ஹுபைஷ் என்பவரின் மகள் ஃபாத்திமா என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அதிகம் உதிரப்போக்குள்ள ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?' எனக் கேட்டதற்கு, 'இல்லை! அது ஒருவித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையைவிட்டு விடு; அது நின்றுவிட்டால் இரத்தம் பட்டு இடத்தைக் கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்' என்றும் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அவ்வப்போது சிறுநீர் சொட்டுகள் வெளியேறுவது போன்ற ஒரு நிலையில் அன்றைக்கு தொடர் இரத்தப் போக்குக்கு ஆட்பட்டப் பெண் 'தொழுகையை விட்டு விடலாமா..' என்று கேட்கும் போது, 'தொழுகையை விட அனுமதியில்லை' என்று நபி(ஸல்) விளக்கியுள்ளார்கள். இதிலிருந்து சிறுநீர் சொட்டுகள் வெளியேறுபவர்கள் தொழுகையிலிருந்து விடுபட முடியாது என்பதை விளங்கலாம்.

சிறுநீரை விட அதிக துன்பமளிக்கக் கூடிய இரத்தப்போக்குள்ளவர்கள் கூட தொழுகையை விட அனுமதியில்லை என்பதை நாம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடர் இரத்தப் போக்கைப் பற்றி குறிப்பிடும் போது 'அது நரம்பு நோய்' என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

இயற்கைக்கு மாற்றமாக உடம்பில் நிகழும் எதுவோன்றும் நோயின் அடையாளமாகவே இருக்கும் என்பதால் அடிக்கடி சிறுநீர் சொட்டுகள் வெளியேறுவதையும் நாம் அதே அடிப்படையில் எடு்த்துக் கொள்ளலாம். மருத்துவம் செய்யும் அதே வேளையில் ஒவ்வொரு தொழுகைக்கும் அவர்கள் ஒளு செய்துக் கொள்ள வேண்டும்.

தொழுகையில் நிற்கும் போது அந்த நிலையை உணர்ந்தால் அவர்கள் தொழுகையை முறிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏனெனில் தீர்வே இந்த பிரச்சனைக்கு சொல்லப்பட்டதுதான்.
நமது கட்டுப்பாடுகளை கடந்து நடக்கும் காரியங்களுக்கு இறைவன் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான்.

கோவிலுக்கு போகும் இமாம்

ஓர் இமாம் கோவிலுக்கு சென்று விட்டு இமாமத்தும் செய்தால் அவர் பின்னால் தொழலாமா?

Name: முஹ்யித்தீன்
email: beekayemm@....
Location: U A E
Subject: Kelvi

அதீதக் கற்பனைகளுக்கெல்லாம் விடைத்தேடிக் கொண்டிருக்கக் கூடாது. 'முஸ்லிம் சகோதரர்களைப் பற்றி தவறான சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அவை பாவமாகி விடும்' என்பது குர்ஆன் நமக்கு சொல்லும் அறிவுரை.

நம்பிக்கையாளர்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள் (அல்குர்ஆன்)

பொதுவாகவே எந்த விஷயத்திலும் சந்தேகத்திற்கு இடங்கொடுக்கக் கூடாது என்றிருக்கும் போது இமாம்கள் கோவில்களுக்கு செல்வார்கள் என்ற சந்தேகம் ஏன் வருகின்றது?

கோவிலுக்கு சென்று சிலை வணக்கம் செய்யும் எவரும் பள்ளிவாசலுக்கு வந்து இமாமத் செய்ய மாட்டார்கள்.

ஒருவேளை அப்படி செய்தாலும் அவரைப் பின்பற்றித் தொழுவதால் நம்முடைய தொழுகை பாழ்பட்டுப் போகாது. இதற்கான வலுவான ஆதாரங்களை 'இணைவைக்கும் இமாமைப் பின்பற்றலாமா... என்ற கருத்துக்களத்தில் விரிவாக வைத்துள்ளோம்.

இணைவைக்கும் இமாம் கருத்துக்களம் செல்க.

பைஅத் - உடன்படிக்கை

நான் உங்கள் இணையத்தளத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக பார்த்து படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ள இணையமாக இருக்கின்றது.
எனக்கொரு கேள்வி.

பைஅத் பற்றியது பிறருடைய கைகளைப் பிடித்து நான் தினமும் ஐந்து முறைத் தொழுகிறேன்.. ஜக்காத் கொடுக்கிறேன் என்று சொல்வதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரம் உள்ளதா..

யார் இதற்கு பணம் கொடுத்து யார் இயக்குகிறார்கள்?
Name: M.Mohamed Ali
Location: Abu Dhabi
Subject: Question

இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்கங்கள் -வழிபாடுகள் ஆகியவற்றிர்க்கு "அவற்றை தவறாமல் செய்கின்றேன்" நம்மைப் போன்ற மனிதர்களிடம் பைஅத் செய்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத - முட்டாள்தனமான ஒன்றாகும்.

நாம் யாரிடம் பைஅத் செய்கின்றமோ அவரும் நம்மைப் போன்று நாம் செய்யும் கடமைகளை செய்யக் கடமைப்பட்டவராவார். நாம் அவரிடம் பைஅத் செய்ய வேண்டும் என்றால் அவர் யாரிடம் போய் பைஅத் செய்வார் என்ற கேள்வியை முன் வைத்தால் இந்த ஆன்மீக பைஅத் மோசடி விளங்கி விடும்.

'பைஅத்' என்றால் 'உடன்படிக்கை' என்று பொருள். உலகக் காரியங்களில் நமக்குள் நாம் பைஅத் செய்துக் கொள்ளலாம், செய்தும் கொள்கிறோம். இதுமட்டும் தான் அனுமதிக்கப்பட்டது. இதை கடந்த ஆன்மீக பைஅத் ஏமாற்று வேலையாகும்.

இது பற்றி மிக விரிவாக ஏற்கனவே எழுதியுள்ளோம்.

ஆதாரமற்ற ஆன்மீக பைஅத் செல்க

உலகில் எல்லாத்தரப்பினரும் ஏதோ காரணத்துக்காக வன்முறையில் ஈடுபடுகின்றனர். அதில் சில முஸ்லிம்களும் அடங்கத்தான் செய்வர். இந்த வன்முறையை ஊக்குவிக்க சிலரது பொருளாதாரமும் பயன்படத்தான் செய்யும். அவரகள் யார் என்று கண்டுபிடிப்பது அரசு சட்டத்துறையின் வேலையாகும்.

கப்ர் கூடாதா... ஆதாரம்?

கப்ர் வழிபாடு கூடாது என்பதற்கும், கப்ருக்களின் மீது கட்டிடம் கட்டக் கூடாது என்பதற்கும், பூசக்கூடாது என்பதற்கும் தடையுள்ள ஹதீஸ்களைக் கூறவும்.

Name: smdalikhan
email: smd_alikhan@.....
Location: DUBAI
Subject: Question

அவ்லியாக்களின் கபுர்களின் மீதுள்ள கட்டடங்களை தரைமட்டமாக்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டாகள்:-

ஹதீஸ் ஆதாரம்:- உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ் அல் அஜதி (ரலி), நூல்கள் : அபூதாவுத், நஸயீ, திமிதி, அஹ்மத்.

அவ்லியாக்களின் கப்ருகளில் மஸ்ஜிதைக் கட்டுபவாகள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள்:-ஹதீஸ் ஆதாரம்:-

யஹுதிகளையும், நஸாரக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கபுகளை மஸ்ஜிதாக ஆக்கிக்கொண்டனர் (நூல் : புகாரி)

அவ்லியாக்களின் கபுர்களில் தர்ஹாக்களை எழுப்புபவர்கள் அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிகவும் கெட்டவர்கள் ஆவாகள்:-ஹதீஸ் ஆதாரம்:-

அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.

அவ்லியாக்களின் கபுர்களில் சந்தனம் போன்றவற்றைப் பூசக்கூடாது:-ஹதீஸ் ஆதாரம்-1:-

கப்ருகள் பூசப்படுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தனர் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல்கள் : அஹ்மத், முஸ்லிம், நஸயீ மற்றும் அபூதாவுத்.

ஹதீஸ் ஆதாரம்-2:-

கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படுவதையும் அவற்றின் மீது கட்டடம் (தர்ஹா) எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர் அறிவிப்பவர்: ஜாபி (ரலி), ஆதார நூல் : திமிதி.

அவ்லியாக்களின் கபுர்களில் கந்தூ விழாக்கள் நடத்தக்கூடாது:-ஹதீஸ் ஆதாரம்:-

எனது கப்ரை (கந்தூ) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீகள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீகள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.

அவ்லியாக்களின் கபுர்களை வணங்கும் இடமாக ஆக்கக்கூடாது:-ஹதீஸ் ஆதாரம்-1 :-

யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ரை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

ஹதீஸ் ஆதாரம்-2 :-

உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களின் கபுருகளையும், நல்லடியார்களின் கபுருகளையும் வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். அறிந்து கொள்க! கபுருகளை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீகள்! அதை நான் தடுக்கிறேன் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி), நூல் : முஸ்லிம்.