வலைப்பதிவில் தேட..

Tuesday, September 25, 2007

ஜக்காத் ரமளானிலா?

ஜக்காத் ரமளான் மாதத்தில் மட்டும் தான் கொடுக்க வேண்டுமா.. அல்லது மற்ற மாதங்களிலும் கொடுக்கலாமா..?

jaferali2001atyahoo.com

1 comment:

மஸ்தூக்கா said...

பொதுவாகவே ஜகாத்தை பலரும் ரமளானில் கொடுப்பது என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர். ரமளானில் செய்யும் தர்மத்திற்கு அதிக நன்மைகள் உண்டு என்பது வேறு விஷயம். ஜகாத் என்பது வேறு தர்மம் என்பது வேறு. ஜகாத் நீங்கள் கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டியது. தர்மம் என்பது மேலதிகமாக நீங்கள் கொடுப்பது. மேதிகமாகக் கொடுக்கும் உங்கள் தர்மத்தை ரமளான் மாதத்தில் கொடுக்கலாம் என் நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம்.
ஆனால் ஜகாத்தை கொடுப்பதற்காக நீங்கள் ரமளான் வரை காத்திருக்கக் கூடாது.மரணம் எப்போதும் ஏற்படலாம். அதற்கு முன் மரணித்து விட்டால் ஜகாத் என்னும் கட்டாயக் கடமையை நிறைவேற்றத் தவறிய குற்றத்திற்கு ஆளாக நேரும்.
உதாரணமாக தங்களிடம் ஒரு தொகை ரமளானுக்கு இரண்டு மாதங்கள் முன்னதாக வந்து சேருகிறது என்று வைத்துக் கொள்வோம். (அது ரொக்கமாகவோ ஆபரணங்களாகவோ இருக்கலாம்) அந்தத் தொகை தங்களிடம் ஓராண்டு நிறைவடையும் போது அதற்கு ஜக்காத் கடமையாகி விடுகிறது. அப்படியானால் அதற்குரிய கணக்குப்படியான ஜகாத்தை ரமளான் மாதத்திற்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே அல்லவா கொடுக்க வேண்டும்.
அது போல் ரமளானுக்கு 4 மாதங்கள் கழித்துத் தான் உங்களிடம் ஒரு தொகை வந்து சேருகிறது என்று வைத்துக் கொண்டால், ரமளானுக்கு 4 மாதங்கள் கழித்துத் தான் அதற்குரிய ஜகாத் கடமையாகிறது. ஓராண்டு பூர்த்தி யடைவதற்கு முன்னதாகவே அத்தொகை உங்களை விட்டுச் சென்று விட்டால் அதற்கு ஜகாத் கடமையில்லை.
எனவே ஜகாத்திற்கும் ரமளானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜகாத் என்பது அதற்கான ஓராண்டு பூர்த்தியடைதல் என்னும் கால அளவைப் பொருத்ததாகும். அதே சமயம் ரமளான் மாதம் ஒரு தொகை உங்களை வந்தடைந்து அதன் ஓராண்டு மறு ரமளானில் பூர்த்தி அடையும் போது உங்களுக்கு ரமளானில் ஜகாத் கடமையாகிறது.
அல்லாஹ் மிக அறிந்தவன்