வலைப்பதிவில் தேட..

Sunday, September 23, 2007

ஏமாற்றப்பட்டப் பெண்

நான் ஒரு வைதீக பெண். என்னை ஒரு இஸ்லாம் நபர் ஏமாற்றிவிட்டார். ஆனாலும் எனக்கு உங்கள் மார்க்கத்தின் மீது எந்த கோபமும் இல்லை ஏனெனில், என் மகள் ஒரு இஸ்லாமிய மார்க்கத்து செல்வம் அதனால் எனக்கும் உங்கள் மார்க்கத்தை பற்றி அறிந்து கொள்ளுமுகமாக நானும் உங்கள் மதத்தை கற்க ஆசைப்படுகிறேன். கற்றுத்தருவீர்களா இதனால் உங்களுக்கு ஏதும் சிரமமாக தோன்றுகிறதா?

நான் இப்போது என் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் என் எதிர்காலத்திற்காகவும் ஒரு தீவிர முடிவை எடுத்துள்ளேன் அதாவது நான் எங்களுக்கென ஒரு துணையை தேடி இருக்கிறேன் இது சரியா தவறா?

yadhia-comattyahoodotcom

2 comments:

Syedabdeen said...

இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவர் மீதும் நிலவட்டுமாகா!!

அன்பு சகோதரியே, ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி (ஏனென்றால் உண்மையான முஸ்லிமாக இருந்தால் நிச்சயமாக இந்த ஏமாற்று வேiலை செய்ய மாட்டார்கள்) உங்களை ஏமாற்றிய பின்னரும் இந்த சத்திய மார்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இருப்பது உங்களுடைய ஈமானின் உறுதியை அளிக்கிறது. அடுத்தது இஸ்லாம் மார்க்கம் தன் துணையை தேடிக் கொள்வதில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு என்று சுதந்திரத்தை வழங்குகிறது. ஆனால் அதே சமயம்; திருமணம் செய்வதாக இருந்தால் சாட்சியை வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. ஏனென்றால் நீங்கள் இப்பொழுது ஏமாந்து நிற்பது போன்ற சூழ்நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் இஸ்;லாம் மார்க்கம் உறுதியாக இருக்கிறது. அடுத்ததாக நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் சுலபமான காரியம், அதாவது நீங்கள் மனதால் இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவன் இல்லை, முஹம்மது நபி(ஸல்) அவர்களே அவனுடைய இறுதித்தூதர் ஆவார் என்று நீங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாம் மார்க்கத்தில் நுழைவதற்கான கடவுச்சீட்டு (Pயளளிழசவ) ஆகும். அதன் பின்னர் நீங்கள் முழுமையாக இஸ்லாம் மார்க்கத்தை அறிந்த பின்னர் இஸ்லாத்தின் கடமைகளாகிய தொழுகை, நோன்பு, ஜகாத், மற்றும் சக்தி இருப்பவர்களக்கு ஹஜ் செய்வது போன்றவை கடமையாக்கப்பட்டுள்ளது. அடுத்தது இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் இந்தக் காரியங்கள் செய்தால் என்ன? என்ற எண்ணம் சில பேர்களுக்கு ஏற்படலாம், ஆனால் அதற்கான கூலி கிடைக்காது என்று இஸ்லாம் மார்க்கம் கூறுகிறது. ஏனென்றால் இஸ்லாம் மார்க்கம் இம்மையில் கிடைக்கும் பலனை விட மறுமை உலகில் கிடைக்கப் போகும் பலனைத்தான் நிரந்தரமான பலன் என்று வலியுறுத்துகிறது. உதாரணமாக உங்கள் ஊரில் ஒரு பெரிய நிறுவனம் உள்ளது, அந்நிறுவனத்தில் வேலை செய்வதற்கான தகுதிகள் உங்கிடம் இருந்தும் நிரந்தமாக பணியாற்ற விருப்பம் இல்லாமல் தற்காலிக ஊழியாரகவே வேலை செய்து வருகிறீர்கள், அவ்வாறு பணிபுரியும் பொழுது உங்களுடைய தற்காலிக பணிக்காலம் முடிந்த பின்பு நீங்கள் பணி செய்ததற்கான கூலி மட்டுமே கிடைக்கும், மற்ற வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது. ஆனால் நீங்கள் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொண்டு நிரந்தரமாக பணியாற்றினால், உங்களுக்கு அந்த நிறுவனத்தில் உறுப்பினர் என்ற முத்திரையும், உங்களுடைய பணிக்காலம் முடிந்த பின்பும் நீங்கள் பணியாற்றி விதத்தைப் பொறுத்து ஓய்வு கால ஊதியம் மற்றும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். அதேபோல்தான் இஸ்லாம் மார்க்கத்தை மனதால் ஏற்று முழுமையான முஸ்லிமாக மாறினால்தான்; உங்களுக்கு அதற்கான பிரதிபலன்கள் கிடைக்கும். இஸ்லாம் மார்க்கம் மற்ற மதங்கள் கூறுவது போல் பணியைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று கூறுவது இல்லை, ஆனால் உங்களுடைய கடமையை தெளிவாக செய்யுங்கள், அதற்கான கூலி உங்களுக்கு மறுமையில் கிடைக்கும் என்று உறுதியாக மனிதனின் நடைமுறை எண்ணங்களை புரிந்து கொண்டு வலியுறுத்துகிறது. ஆக அன்பான சகோதரியே நீங்கள் முழு மனதுடன் இஸ்லாம் மார்க்கத்தில் முழுமையாக நுழையுங்கள் உங்களுக்கு அதற்கான கூலி அல்லாஹ் நிச்சயமாக வழங்குவான். அல்லாஹ் தன் திருமறையில் முஸ்லீம்களை சிறந்த சமுதயாம் என்று கூறுகிறான்: மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள் (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள் தீயதை விட்டும் விலக்குகிறீர்கள் இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள் வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்_ எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். ( திருக்குர்ஆன் 3வது அத்தியாயம் 110வது வசனம்). சகோதரியே இஸ்லாம் எனும் அமைதி மார்க்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

அப்துல்லாஹ் செய்யது ஆப்தீன்
ஷார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம்.

Azeez said...

Dear Mr Abdullah. i am getting very pleasure for giving answer to our sister's question. But you didint mention this statemetn that is "once a man/women enters into islam the all his/her sins (which are done by him/her before entering into islam) can be forgive".