வலைப்பதிவில் தேட..

Monday, October 15, 2007

கடன் அடைக்க..

  • நான் வெளி நாட்டில் ஒரு நண்பருக்கு கடன் வைத்து வந்து விட்டேன். அதை நான் இப்போது கொடுக்க முடியாத சூழ்நிலையாக இருக்கிறேன். நான் அதை எப்படியும் கொடுக்க வேண்டும் என்று எண்ணம் வைத்துள்ளேன். ஒரு சமயம் கொடுக்க முடியமால் போனல் இதற்கு என்ன பரிகரம் செய்ய வேண்டும்?

1 comment:

Shafiq said...

சகோதரர் அவர்களுக்கு,

கொடுக்க முடியாமல் என்றால் இங்கு மரணித்துவிட்டால் என்று எடுத்துக் கொண்டால் : அந்த கடனை தங்களது வாரிசுகள், உறவினர்கள் அதை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும், அப்படி அவர்களுக்குத்தெரியாமல் இருந்தால் தங்களது எண்ணம் என்ன என்பதை பொருத்து அல்லாஹ் தீர்பளிப்பான் ஆதாரம் (எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். புகாரி(2387).
ஆனால் நாம் அதை கண்டிப்பாக திருப்பி செலுத்தும் எண்ணம் வேண்டும், ஏனெனில் இறைவன் நாடினால்தான் மன்னிப்பான் நமது எண்ணத்தின் தீவிரத்தைப் பொறுத்துதான், அனைத்துப்பாவங்களும் மன்னிக்கப்பட்ட, நபிமார்களுக்கு அடுத்த சன்மானத்தில் உள்ள இறைப்போராளிகளுக்கூட அனைத்துப்பாவமும் மன்னிக்கப்படுகிறது கடனைத்தவற என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டு கடனை வாங்குவது பற்றி யோசிக்க வேண்டும்,

அல்லாஹ் முற்றிலும் அறிந்தவன்.