வலைப்பதிவில் தேட..

Friday, October 26, 2007

இறைவன் ஏன் இப்படி?

திருக்குர்ஆன் வசனம் 7:179 ல் இறைவன் மனிதர்களில் சிலரை நரகத்திற்காக படைத்திருப்பதாகச் சொல்கிறான்.. எதற்காக இத்தகைய மனிதர்களைப் படைக்கிறான்.. அவர்களின் நரக வேதனைக் கூக்குரலைக் கேட்டு சந்தோசிக்கவா..? இறைவன் அவ்வளவு மோசமானவனா..? அவனே நரகத்திற்கென அந்த மனிதர்களைப் படைத்தால் அவர்களை யார் காப்பாற்ற முடியும்..? என் பிரார்த்தனையெல்லாம் நரகத்திற்கு யாருமே செல்லக் கூடாது.. என் கேள்விகளுக்கு தெளிவான பதில் தரவும்..


பி.சுந்தரராஜ் sundararaj.pattgmaildotcom
................................................................................

சகோதரர் சுந்தர்ராஜுடைய கேள்விக்கான பதில்ஒரு வசனத்தை மேலோட்டமாக பார்த்து, அதே வசனத்தில் பதில் இருக்கும் நிலையில் தனது கேள்வியை வைத்துள்ளார்.

இறைவனே நரகத்திற்கென்று சிலரை படைத்துவிட்டால் பிறகு அவர்களை யார் காப்பாற்றுவது என்பது அக்கறையான சிந்தனைத்தான் என்றாலும் அதற்காக இறைவனை குற்றவாளியாக சித்தரிப்பது நியாயமானதல்ல.

அவர் குறிப்பி்டுள்ள வசனத்தை முழுமையாக பார்ப்போம்.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.(அல் குர்ஆன் 7:179)

ஜின்களாகட்டும் அல்லது மனிதர்களாகட்டும் அவர்களில் பலர் நரகிற்கு செல்வதற்கான காரணங்கள் இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக நரகிற்கென்று அவர்கள் படைக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை விளக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. காரணம் விளக்கப்பட்டுள்ளதிலிருந்து பொதுவாக அவர்கள் நரகத்திற்காக படைக்கப்படவில்லை என்பதை எந்த அறிவாளியாலும் புரிந்துக் கொள்ள முடியும்.

காரணங்கள்.

1) அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு அவர்கள் சிந்திப்பதில்லை.

மனிதன் அறிவும், சிந்தனைத்திறனும் அற்றவனல்ல. சுந்தர்ராஜுக்கு சிந்திக்கவே தெரியாது, அவர் அறிவு வேலை செய்யாது என்று யாராவது கூறினால் அவர் அதை ஒப்புக் கொள்ள மாட்டார். அறிவாலும், சிந்தனையாலும் அநேக பயன்பெறும் மனிதர்கள் அதே அறிவு சிந்தனையைக் கொண்டு தன்னைப் பற்றியும் தன்னைப் படைத்த ஒரு பெரும் சக்திப் பற்றியும் சிந்திக்க மறுக்கிறார்கள். அப்படியே சிந்திப்பதாக சொன்னாலும் தனது சொந்த வாழ்விற்காக இருக்கும் அந்த நேர்த்தியான சிந்தனை இறைவன், ஆன்மீக விஷயத்தில் அவர்களிடம் இல்லை. தன்னை விட மகா மகா மட்டமானவைகளையெல்லாம் இறைவன் என்று கருதி அந்த சர்வ சக்தியை கொச்சைப் படுத்துவதைத்தான் அவர்களின் அறிவு அல்லது சிந்தனை ஆன்மீகக் காரியங்களில் செய்கி்ன்றது. இது இறைவனை கோபமடைய செய்கின்றது என்றால் அது இறைவனின் தவறல்ல.

2) அவர்களுக்கு கண்கள் உள்ளன அவற்றைக் கொண்டு அவர்கள் பார்ப்பதில்லை.தனது கண்களால் ஆயிரக்கணக்கான காட்சிகளை தன் வாழ்நாளில் பார்க்கும் மனிதன், தனது பார்வையை இறைவனோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளுவதில்லை. தினமும் ஓராயிரம் முறை வானமும் நாம் வாழும் பூமியின் பகுதிகளும் அதில் உலவும் அனேக உயிரினங்களும் நம் கண்களுக்குத் தெரிகின்றன. அதன் அத்தாட்சிகள் என்ன என்பதை மட்டும் அகக்கண்கள் கண்டுக் கொள்வதில்லை. ஆனால் நல்லுள்ளங்களுக்கு இவறறின் அத்தாட்சிகள் தெரியவே செய்யும்.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் இறைவனை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்களின் மனங்கள் சொல்லிக் கொண்டிருக்கும்) (அல் குர்ஆன்: 3:190-191)

3)அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை.மேற் சொன்ன உதாரங்கள் இங்கும் பொருந்தும். இன்றைக்கு ஒளிமயமான இந்த உலகில் நம் காதுகளில் எத்துனைவித ஓசைகள், இசைகள், பேச்சுக்கள் நுழைகின்றன. ஆனால் உண்மையான இறைவன் குறித்த செய்திகள் எத்துனை காதுகளில் நுழைகின்றது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கண்களிருந்தும் குருடர்களாக, காதுகள் இருந்தும் செவிடர்களாக, இதயங்கள் இருந்தும் பயனற்றவர்களாக இருப்பவர்களை நாம் எப்படி சுட்டிக் காட்டுவோமோ அப்படித்தான் இறைவனும் சுட்டுகிறான்.

அவர்கள் கால் நடையைப் போன்றவர்கள்- அதை விடக் கீழானவர்கள் என்று.

இதயம் - அறிவு - பார்வை - செவிப்புலன் என்று இத்துனை அற்புதங்களை கொடுத்து மனிதன் படைக்கப்பட்டிருந்தும் அதைப் பயன்படுத்தி நல்வழிப் பெறாதவர்களுக்கு தண்டனைக் கொடுப்பதில் சகோதரர் என்னத் தவறைக் கண்டார்? இன்னும் சொல்லப் போனால் இந்த வசனம் ஒரு அக்கறையின் வெளிபாடாகும்.

ஒரு பள்ளியில் படிக்கும் மாணவன் குறித்து ஆசிரியர் இப்படிக் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்'இவன் போற போக்கைப் பார்த்தால் தோல்வியடைவான். தெளிவாக பாடம் நடத்தினாலும் புத்தகத்தை திறந்து பார்க்க மாட்டேங்கிறான், பாடத்தையும் செவிதாழ்த்திக் கேட்பதில்லை, பிற மாணவர்களுக்கு அறிவுரை சொல்வது போன்றுதான் இவனுக்கும் சொல்கிறோம் அதை சிந்திப்பதில்லை. இப்படியே போனால் இவனை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது? ஆண்டு இறுதியில் தோல்வியடைந்தால் வாழ்க்கையும் தொலைந்துப் போகும்" என்ற ஆசிரியரின் ஆதங்கம் மாணவனின் மீதுள்ள அக்கறையின் வெளிபாடாகும். இப்படியெல்லாம் சுட்டிக் காட்டாமல் அவன் தோல்வியடைந்தால் நான் தவறு செய்யும் போது சுட்டிக் காட்டியிருக்கக் கூடாதா...? என்று அவன் கேட்கக்கூடும் அல்லது அவன் சார்பாக பிறர் கேட்பார்கள். அதனால் அவன் செய்யும் தவறின் முடிவு இப்படி அமையும் என்று சொல்லிக் காட்டுவது அக்கறையின் அடையாளம். இதையும் புறக்கணித்தால் அதற்கான முழு குற்றப்பொறுப்பும் அவனைச் சார்ந்ததாகும்.

இறைவன் அந்த அக்கறையை இந்த வசனத்தில் வெளிபடுத்துகிறான். வீண் தர்க்கம் செய்தால் முடிவு அவர்களுக்கு எதிராகவே அமையும்.

...........................................

sundararaj said...

எனது கேள்வி விதி என்ற தலைப்பின் கீழ் வருவதை வேண்டுமானால் ஓரளவு ஒத்துக்கொள்ளலாமே தவிர ஆசிரியர் பதிலில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒரு விஞ்ஞானி இப்ப்டி சொல்கிறார் என வைத்துகொள்வோம்:
"நான் சில ரோபோட்களை நிச்சயமாக் அக்கினியில் போட உருவாக்கி உள்ளேன்.அதற்கு கண் உண்டு ஆனால் பார்க்காது, காத்துண்டு ஆனால் கேட்காது. கால் உண்டு ஆனால் நடக்காது" என்றால் அதற்கு அர்த்தம்?

அவர் உருவாக்கிய ரோபோட்களின் குணாதிசயங்களை தான் அவர் சொல்கிறார் தவிர அவர் உருவாக்கியதன் காரணத்தையோ அதன் மேலுள்ள அக்கறையினலோ சொல்லவில்லை என்பதை சாதாரண மனிதன் கூட புரிய முடியும்.

இப்படி இருக்கும்போது விஞ்ஞானியைவிட சர்வவல்ல இறைவன் நிச்சயமாகவே நான் நரகத்துக்கக் படைத்தேன் என்று சொன்ன பிறகு அவரகள் தப்பிக்க வழி எது?இறைவன் இங்கு சர்வாதிகார ஆட்சியா நடத்துகிறார்?

தவறு செய்தால் நரகமதான் போவாய் என்பது வேறு, நான் நிச்சமாக நரகதுக்காக படைத்தேன் என்பது வேறு.

இறைவனை இருக்கிறார் என அறிவது எவ்வளவு முக்கியமோ அது போல எது உண்மையான இறைவனின் வார்த்தை என பகுத்தரிவதும் மிக முக்கியம். அத்தர்ககத்தான் இந்த கேள்வியை கேட்டேன்.

முதல் கேள்விக்கே சரியான பதில் இல்லை. போதும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

November 20, 2007 12:29 AM

..................................

'நான் எதிர்பார்க்கும் விதத்தில் பதில் அமைந்தால் தான் தொடர்வேன்' என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

எல்லாவிதத்திலும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு, நன்மைத் தீமைகளை பிரித்தாய்ந்து எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ள மனிதனை ரோபோக்களோடு பொருத்திப் பார்ப்பது நல்ல உதாரணம் தானா சகோதரரே...

ஒன்றைப் புரிந்துக் கொள்வதில் நிதானம் வேண்டும். ஒரு வசனத்தில் முதலிலுள்ள வரியை அப்படியே நேரடியாகத்தான் புரிந்துக் கொள்வேன் என்று முடிவெடுத்தால் அதை தொடர்ந்து வரும் வரிகளுக்கு என்ன பொருள் கொடுப்பது. அர்த்தமில்லாமல் ஆக்குவதா...?

முழுவசனத்தையும் படித்து அதிலிருந்து அர்த்தத்தைப் புரிந்துக் கொள்வது சரியா... ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை கண்டுக்காமல் விடுவது சரியா..

இறைவன் நரகத்துக்காகத்தான் படைத்துள்ளான் என்பது சரி என்றால், அந்த வசனத்திற்கு அதுதான் பொருள் என்றால் அதை தொடர்ந்து வரும் உதாரணத்தை கூற வேண்டிய அவசியமே இல்லை. நரகத்துக்காக படைத்துள்ளேன் என்று மட்டும் கூறிவிட்டால் போதும். அப்படி இறைவன் கூறவில்லை.

நரகத்துக்குரியவர்கள் என்று கூறி தொடர்ந்து உதாரணம் அல்லது அறிவுரை சொல்லப்பட்டால் அந்த அறிவுரைக்கு - உதாரணத்திற்கு கட்டுப்படாதவர்கள் நரகத்துக்குரியவர்கள் என்பது சாதாரணமாக விளங்கும். இப்படி சொல்வது எல்லா மொழிகளுக்கும் உரிய பொதுவான இயல்பாகும்.

'சுந்தர்ராஜ் புரிந்துக் கொள்ள சிரமப்படுகிறார்.

அவருக்கு ஹிந்தி மொழியும் தெலுங்கு மொழியும் தெரியாது' என்று ஒரு வசனம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த வசனத்தில் முதலில் இடம் பெறும் 'சுந்தர்ராஜ் புரிந்துக் கொள்ள சிரமப்படுகிறார்' என்ற வார்த்தையை மட்டும் நேரடியாக எடுத்துக் கொண்டு அவருக்கு தமிழ் ஆங்கிலம் உட்பட எந்த மொழியும் தெரியாது. அவர் எதையும் புரிந்துக் கொள்ள மாட்டார் என்று யாராவது விளக்கமளித்தால் அதை சுந்தர்ராஜால் சரிகாண முடியுமா... 'முழு வசனத்தையும் படித்து விளங்குங்கள் - விளக்குங்கள் என்று அவர் சம்பந்தப்பட்டவருக்கு அறிவுருத்த மாட்டாரா...

இந்த வசனமும் அப்படி அமைந்ததுதான். முழு வசனத்தையும் படித்து அதிலிருந்து எதை விளங்குகிறீர்களோ அதை கேள்வியாக வையுங்கள். அந்த வசனம் எந்த நெருடலும் இல்லாமல் தெளிவாக ஒரு கருத்தை முன் வைக்கும் வசனமாகும். அறிவு - பார்வை - செவிப்புலன்களை முறையாக பயன்படுத்தாதவர்களுக்கு நரகம் என்ற தண்டனையுண்டு என்பதே அந்த வசனத்தின் பொருள் என்பதை விளங்குவீர்கள் என்று நம்புகிறோம்.

...................

11 comments:

afroz said...

Mr.subdarraj is correct with his question, but you must be read the complete quran aya'. He says the hell was prepared for those who doesn't follow the rules and regulation of allah. Also he mentioned in this aya' 7:179 clearly about those persons charector. So please read the complete aya then you can find the answer for that.

sundar said...

Sorry sir, Your answer is not related to my quistion. "IF GOD HIMSELF CREATED A MAN FOR HELL (as mentioned in the verse) THEN HE WILL BE AUTOMATTICALLY IN SUCH A CHARACTER OF DISOBEDIYANCE WHICH WILL DEPUTE HIM TO HELL then we can not blame the man who have such charact" My question is Why God Created such humans with the aim of sending him to hell?

afroz khan said...

Dear Mr. Sundar Raj, I feel you did not understood my answer. What i said in my first comment,

God was not greate the man to hell. Once the man he disobay the rules of god then he will throw

in hell, that is why he grated the heaven and hell.

Ok.I will give some example to you....Once a wise man called a boy and he gave two tea spones of

oil and he told that boy to go arround the world and also look at beautifull nature of world but

you have to return with oil. The boy went with the two tea spones of oil and he cannot go for

just a disdance to go arround the world becuase he is holding oil. He came back to wise man, he

ask that boy did you saw the beautifull nature of world, the boy replied the wise man i cannot

because if i want to look at the nature i will miss the oil so i did't saw. Again the wise man

told with same two spones of oil but he here he told that boy this time you must look at the

beautifull nature of world. The went with oil this time and he saw all nature of the world but he

miss the oil to the ground and he came back to wise man. The wise man ask the boy about oil, the

replied you told me to look the nature of world so i miss the oil...

From this story what i mean was...god greated the heaven and hell already but he gave the choice

to choose heaven or hell to human beings. So that he created good and bad things. If a person

cannot be mix with good and bad things i mean he might be a good man or bad person due to his

character. If a person will obay the rules of allah he will not go to hell insha allah but if a

person will not follow the rules of allah may be he throw to hell (but its wish).So that god was

givings some instruction to little hard way....thats it...he was not greated the person to throw

in hell.

You check with most of the hindu god's they are keeping some metals or animals with thier

body...did you thing about before...its because they want to instruct the human beings you can't

go to wrong ways.If you did like that may be i will give some punishment to you...It is not mean

the god's want to give punishment to the human beings, they want to instruct the human beings

that is why the are keeping the things..( Dont take misunderstand to compare hindu gods, this was

taken only for example)

Same like we can give more example to you...same like instruction given his son from father and

husband will given some instrcution to his wife...these all same kind. they are not having

intension to give punishment to them.If you have more doubts please mail me to my mail

id.(afroz.g@rediffmail.com & gak_gingee@yahoo.co.in) or call me at +974-6626857.

Plan For Nagore said...
This comment has been removed by the author.
Plan For Nagore said...

This Topic comes under விதி (fate) category.

In Islamic religion we have ban on arguing or criticizing about விதி, because both side argument will end up in confusion.

For example if we say there is a விதி that lead us then it would end up as ‘oh my god I am already created for Hell or Heaven (now its end up in confusion), If we say there is no fate that lead us then we would say Wouldn’t god know what going to happen in future? is he unable to know what going to happen in future? What a disabled god! (Again end up in confusion) thats why we have ban on arguing about விதி.

Then if you read full Quran (not just one particular Para) and if you count how many Para talk about விதி and how many Para talk about humans own try and rewards both Para will be in same amount.

every thing will be by விதி 2:7, 2:142, 2:213, 2:253, 2:272, 3:176, 4:94, 4:88, 4:143, 5:41,48, 6:25, 6:35, 6:39, 6:107, 6:111,112, 6:125, 6:137, 6:149, 7:30, 7:101, 7:155, 7:176,178, 7:186, 9:55, 9:85,87, 9:93, 10:74, 10:99, 11:18, 11:34, 13:27, 13:31, 13:33, 14:4, 16:9, 16:19, 16:36, 16:37, 16:93, 16:108, 17:46, 17:97, 18:17, 18:57, 22:16, 24:21, 24:35, 24:46, 28:56, 30:29, 30:59, 32:13, 35:8, 36:9, 39:23, 39:36, 40:33,35, 42:8, 42:24, 42:44,46, 42:52, 45:23, 47:16, 63:3, 74:31

Humans are liable for their works # 2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281,286, 3:25, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119,120, 6:129, 7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101, 13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 73:19, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14, 89:24

sundararaj said...

Dear Mr Afroz,
We can not change the verse of Quran as we like. You are "saying God was not credated man for hell" but the verses 7/179 God clearly saying that "MANY ARE THE JINNS AND MEN WE HAVE MADE FOR HELL"

Suppose a scientist made a robort for a particular purpose.that will act in the manner for what purpose it has been made; likewise a almighty God made a man and jinn for hell then how can they escape from hell. My question is Why God said such a word? and Why he made such Man and Jinns.

Here there is no question for cheking or Testing. Sorry, your examples are pointless and I already aware your examples.

SECONDLY: FATE,

We can believe either the fate or the GOD. Because fate is fixed and God is flexible.

If everythign is happening according to the fate then why God is there.

As per Alquran "GOD IS ALMIGHTY" and I also beleave He can do anything as he likes.

My question is Why such a almighty
and mercyful God saying such a word that he has made many are the jinns and man for hell?

As a human Are you made a son with the aim of sending him to hell"

I am confusing why God says such a curde words.

afroz khan said...

Mr. Sundarraj,

I feel you are not having a good intension to know the truth, but you want a make this a big issue...Please try to read the whole quran and also try to read as Mr.Nagoore given the verses for answering your question.

As per your question here two things there, one is God and other Fate. God can do what he wish and also he is desider of Fate.You cannot ask more questions what god deside for Fate.

He can do what he wish and he knows about all.

Ok. I will ask one question, do you have any doubt quran is not from allah...then you cannot find the answer for your question.

If you want to know more about your question you cannot and also its about Fate. You have to accept the fact. If not you will not believe allah.

Please dont go more in this topic...

Insha allah Allah will give more clarification in this topic to all of us.

sundararaj said...

Dear Mr Afroz,
If you are unable to give the proper answer please leave it.
I am not with the intention of arguing.
Are you think making man for sending them to hell is not a big issue?.

Are you know about the terribleness and worst situation prevailing in the hell and hades?

What is the main purpose of the religions?
Is not protecting peoples form hell and give them heaven?

I am basically not a Muslim. One day I saw the worst situation and fire of hades by like a dream. From that day onwards I am praying God nobody should go to such a terrible place.

In this situation one of my colligue told about Islam which rules and regulations are attracted me.

So, I called for a Tamil Quran and starterd to read. While reading I found this verses which is not able to digest by me.

Does the Almighty God himself made mans for that terrible hell? Then what is his purpose? for enjoying their difficulties?

God may say "those who are not following my words will go to hades and I can not protect you" which is correct.

But here the words are different which giving a meaning that he himself made some of his sons to hell.

The proper answer for the above question may laid me to belive the Quran words are from Allah. I hope God is very mercyfull.

The God may be the writer of the fate but if he writes such a fate who can save them.

afroz khan said...

Dear Mr. Sundar Raj,

I dont have any intension, not to answer inproper way. Please try to read these quran aya's.

2:7 அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
-----------
2:142 மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; "(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?" என்று. (நபியே!) நீர் கூறும்; "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை, தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்" என்று.
--------
2:213 (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.
----------
2:253 அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
----------
2:272 (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.
-----------
3:176 "குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்;. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்;. அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
-------
4:94 முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு "ஸலாம்" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு "நீ முஃமினல்ல" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்;. அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
--------
4:88 நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்;. எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.
--------
4:143 இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை. இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளிதுக் கொண்டிருக்கிறார்கள்;. அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.
-----------
5:41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
---------
5:48 மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;. அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்;. ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
-------------
6:25 அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; "இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.
------
6:35 (நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
------
6:39 நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
----------
6:107 அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.
-----
6:111 நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்.
----------
6:112 இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.
---------
6:125 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்
-----------
6:137 இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன. அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.
-----------
6:149 "நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ் விடமேயுள்ளது, அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்" என்று நீர் கூறும்.
-----------
7:30 ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
-------
7:101 (நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
-----------
7:155 இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், "என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்" என்று பிரார்த்தித்தார்.
--------
7:176 நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
--------
7:178 அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்;. யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.
-------
7:186 எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.
---------

sundararaj said...

எனது கேள்வி விதி என்ற தலைப்பின் கீழ் வருவதை வேண்டுமானால் ஓரளவு ஒத்துக்கொள்ளலாமே தவிர ஆசிரியர் பதிலில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒரு விஞ்ஞானி இப்ப்டி சொல்கிறார் என வைத்துகொள்வோம்:

"நான் சில ரோபோட்களை நிச்சயமாக் அக்கினியில் போட உருவாக்கி உள்ளேன்.
அதற்கு கண் உண்டு ஆனால் பார்க்காது, காத்துண்டு ஆனால் கேட்காது. கால் உண்டு ஆனால் நடக்காது" என்றால் அதற்கு அர்த்தம்?

அவர் உருவாக்கிய ரோபோட்களின் குணாதிசயங்களை தான் அவர் சொல்கிறார் தவிர அவர் உருவாக்கியதன் காரணத்தையோ அதன் மேலுள்ள அக்கறையினலோ சொல்லவில்லை என்பதை சாதாரண மனிதன் கூட புரிய முடியும்.

இப்படி இருக்கும்போது விஞ்ஞானியைவிட சர்வவல்ல இறைவன் நிச்சயமாகவே நான் நரகத்துக்கக் படைத்தேன் என்று சொன்ன பிறகு அவரகள் தப்பிக்க வழி எது?
இறைவன் இங்கு சர்வாதிகார ஆட்சியா நடத்துகிறார்?

தவறு செய்தால் நரகமதான் போவாய் என்பது வேறு, நான் நிச்சமாக நரகதுக்காக படைத்தேன் என்பது வேறு.

இறைவனை இருக்கிறார் என அறிவது எவ்வளவு முக்கியமோ அது போல எது உண்மையான இறைவனின் வார்த்தை என பகுத்தரிவதும் மிக முக்கியம். அத்தர்ககத்தான் இந்த கேள்வியை கேட்டேன்.

முதல் கேள்விக்கே சரியான பதில் இல்லை. போதும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

sundararaj said...

ஆசிரியர் அவர்களே என் மனதில் எந்த பதிலும் இல்லை. அந்த வசனத்தில் எதிர்மறை தன்மை உள்ளது என்பதை தான் கூற விரும்புகிறேன்.

சுருக்கமாக சொன்னால்:-
முதலில் "நிச்சயமாக மனிதனை நரகத்துக்கு படைத்ததுல்ளோம்" என்று
செய்து முடித்த ஒரு காரியத்தை இறைவன் சொல்கிறார்.
பிறகு "அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன ஆனால் அவர்கள் புரிந்துகொள்வதில்லை....." என்பது நிகழ காலத்தையோ அல்லது எதிர் காலத்தையோ குறிக்கிறது.

இதில் முதலில் செய்து முடித்தது இறைவன், பிறகு தான் மனிதன் செய்கிறான். இறைவன் அப்படி படைக்கவில்லை என்றால் மனிதன் அப்படி செய்யமுடியாது.

படைக்கும்போதே அவனை குற்றவாளியாக்கி அதற்கான காரணத்தையும் சொல்லி படைத்தார் என சொல்வது சரியா?
சரி, இறைவன் முக்காலத்தையும் அறிந்தவர் ஆகையால் இப்படி நடக்கும் என முன்கூட்டியே சொன்னாலும். படைத்தவர் ஒரு நல்ல எண்ணத்தோடு படைக்கலமல்லவா?
படைக்கும் போதே நிச்சயமாக நரகத்துக்குதான் படைக்கிறேன் நீ இப்படி இப்படியெல்லாம் இருப்பாய் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

இப்படி ஒரு வார்த்தையை இறைவன் சொல்வரா?