வலைப்பதிவில் தேட..

Saturday, November 17, 2007

பிஜே குர்ஆன் மொழியாக்கம்

மௌலவி பி.ஜெ அவர்கள் மொழியாக்கம் செய்த குர்ஆன் தர்ஜூமாவில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.
1. அவரது மொழியாக்கத்தில் 2:102 ல் ஹாரூத் மாரூத் இருவரையும் சைத்தான்கள் என்கிறார்.. உண்மையா.?
2. திருக்குர் ஆனில் ஸஜ்தா வரக்கூடிய வசனங்கள் மொத்தம் 4 மட்டுமே என்கிறார்..அத்தாட்சியாக உஸ்மான் ரழி அவர்களால் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ள திருக்குர்ஆனை எடுத்து வைக்கிறார்.. அந்த குர்ஆன் படிவம் இப்போது உள்ளதா..? மொத்தம் எத்தனை ஸஜ்தாக்கள்..? விளக்கவும்
mmazizurrahman(att)gmaildotcom
..........................................

7 comments:

mhIbrahim said...

1.அவரது மொழியாக்கத்தில் 2:102 ல் ஹாரூத் மாரூத் இருவரையும் சைத்தான்கள் என்கிறார்.. உண்மையா.?


ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்.(ஜிப்ரில், மீகாயீல் எனும்) அவ்விரு வான்வர்களுக்கும் (சூனியம்) அருளபடவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை.
(2:102 பி.ஜெ மொழிபெயர்ப்பு)
சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் படித்துகாட்டியதை அவர்கள் பின்பற்றினார்கள்.சுலைமான் நிராகரிக்கவில்லை. ஷைத்தான்களே நிராகரித்தனர் பாபிலோனில் இருந்த ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு அருளப்பெற்றதையும் கற்றுக்கொடுத்தார்கள். நாங்கள் ஒரு சோதனையாக வந்துளோம் இருக்கிறோம். எனவே நிராகரிக்க வேண்டாம்! என்று கூறாமல் யாருக்கும் அதை கற்றுக் கொடுப்பதில்லை.
(2:102 மற்ற மொழிபெயர்ப்புகளில்)
மேலே உள்ள குர்ஆன் வசனத்திற்கு முற்காள உலமாக்கள் இடத்திழும் கருத்து வேருபாடு ஏற்பட்டுள்ளது, ஏன் என்றால் இந்த வசனத்திற்கு இரண்டு மாதிரியும் பொருள் கொள்ள அரபி மொழி இடம் அளிக்கிறது. எனவே இந்த வசனத்திற்க்கு இரண்டில் எந்த பொருள் கொண்டால் இஸ்லாத்தின் உடைய மற்ற அம்சங்களுக்கு பாதிப்பு ஏற்படாதோ அந்த பொருள் கொள்வதே சிறந்தது.
ஹாரூத், மாரூத் வானவர்கள் என்று நாம் ஏற்று கொண்டால், அந்த வசனத்திற்குள்ளலேயே ஏராளமான குழப்பங்கள் ஏற்படும், அந்த வசனத்தின் ஆரம்பத்தில் “சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் படித்துகாட்டியதை அவர்கள் பின்பற்றினார்கள்.சுலைமான் நிராகரிக்கவில்லை. ஷைத்தான்களே நிராகரித்தனர் என்று உள்ளது. இந்த வசனத்தை கவனிக்கும் போது “சுனியம் என்ற கலையைப் போதிப்பது இறை மறுப்பாகும், அதை ஷைத்தான்கள் தான் கற்று கொடுத்தார்கள் என்று தெருகிறது, எனவே ஷைத்தான்கள் இதைக் கற்றுக் கொடுத்திருக்கும் போது, ஷைத்தான்களிடம் இருந்து அவர்கள் அதை கற்று இருக்கும் பொது, மலக்குகள் வந்து கற்று கொடுத்தார்கள் என்பது அறிவுக்கு பொருந்தவில்லை
அடுத்தாக இங்கே ‘அலா மலகைனி’ என்று இறைவன் குறிப்பிடாமல் ‘அலல் மலகைனி’ என்று குறிப்பிடுகின்றான். ‘மலகைனி என்பதற்க்கும் ‘அல் மலகைனி’ என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ‘மலகைனி’ என்றால் இரு வானவர்கள் என்று பொருள். ‘அல்மலகைனி என்றால் அந்த இருவானவர்கள் என்று பொருள். அல்லாஹ் ஹாரூத் மாரூதை குறிப்பதாக இருந்தால் இந்த இருவானவர்கள் என்று குறிப்பிட வேண்டும், அந்த இருவானவர்கள் என்று சொல்வதின் மூலம் முன்பு கூறப்பட்ட இரண்டு வானவர்கலையே இங்கே குறிப்பிடுகிறான். இந்த வசனத்திற்க்கு ஐந்து வசனத்திற்க்கு முன்பு இரண்டு வானவர்களை பற்றி பேசபட்டுயிருப்பதை காணலாம்.
அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருகு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்
(அல்குர்ஆன் 2:98)
இந்த வசனத்தில் பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு மலக்குகள் பற்றி பேசப்படுகிறது. அந்த இரண்டு மலக்குகளையே இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான் என்பதே சரியானதாகும்.
சூனிய கலைக்கும் சுலைமான் நபிக்கும் சம்பந்தம் இல்லாதது போல் ஜீப்ரீல், மீகாயீல் போன்ற வானவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவுபடுத்தபடுகிறது.
அரபு இலக்கண அடிப்படையில் இவ்வாரு பொருள் கொள்ள இடமிருப்பதாலும், இவ்வாரு பொருள் கொள்ளும் பொது வானவர்கள் கண்ணியம் காக்கபடுவதாலும், இவ்வாரு பொருள் கொள்வதே சரியானதாக தோன்றுகிறது.
அப்படியானால் ஹாரூத் மாரூத் என்போர் யார்? நாம் விவாதித்து கொண்டிருக்கும் இந்த வசனத்தில் ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தாகக் கூறபடுகிறது. இந்த ஷைத்தான்கள் என்பது உண்மையான ஷைத்தான்களை கூறிக்கின்றதா? என்ற ஐயத்தை அகற்றுதற்கே இறைவன் “ஹாரூத் மாரூத் என்கிறான்.
அதாவது இவர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் யாரெனில் அவர்கள் ஹாரூத் மாரூத் என்ற மோசமான மனிதர்களாவர் என்று அடையாளம் காட்டுகிறான்.
அரபு மொழியில் பல அர்த்தங்களுக்கு இடமுள்ள சொல்லைப் பயன் படுத்திவிட்டு அதன் பிறகு விளக்கமாக மற்றொரு சொல் பயன்படுத்தப்படுவதுண்டு, இதை ‘பத்ல்” என்று அரபு இலக்கணம் கூறும். ஷைத்தான் என்பதன் விளக்கமே ஹாரூத் மாரூத் என்பது.
யுதர்களுக்கு சூனிய கலையைக் கற்றுத் தந்தது சுலைமான் நபியுமன்று. மலக்குகளும் அல்லர். மாறாக ஹாரூத் மாரூத் என்ற மனித ஷைத்தான்களே கற்று தந்தனர் என்பது இது வரை நாம் கூறியவற்றின் சுருக்கம்.
தப்ஸிர் கலையில் மேதையாகிய இமாம் குர்துபி அவர்கள் இந்த வசனத்திற்க்குப் பல்வேறு வகையில் அர்த்தம் செய்யப்பட்டாலும், இதுவே சிறந்த விளக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்கள், குர்துபி அவர்கள் விளக்கதை இப்னு கஸீர் அவர்களும் தமது தப்ஸீரில் எடுத்தெலுத்திவுள்ளார்கள், இது தமிழில் வெளியிடபட்டுள்ள இப்னு கஸிரீல் பக்கம் 269ல் உள்ளது.

2. திருக்குர் ஆனில் ஸஜ்தா வரக்கூடிய வசனங்கள் மொத்தம் 4 மட்டுமே என்கிறார்..அத்தாட்சியாக உஸ்மான் ரழி அவர்களால் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ள திருக்குர்ஆனை எடுத்து வைக்கிறார்.. அந்த குர்ஆன் படிவம் இப்போது உள்ளதா..? மொத்தம் எத்தனை ஸஜ்தாக்கள்..? விளக்கவும்

இஸ்லாத்தில் ஒரு காரியத்தை நாம் இபாதத் என்று சொல்ல வேண்டுமானால் அதற்கு நபிகள் நயாகத்தின் அனுமதி இருக்கவேண்டும் அப்படி இல்லாவிட்ட அது பித்-அத் ஆகவே அமையும், நபிகள் நாயகம் 15 இடத்தில் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று ஒரு ஹதீஸ் உள்ளது, அது பலவீனமானது ஆகும், அது எவ்வாறு பலவீனம் என்று நான் இங்கு விளக்க தேவையில்லை, ஏன்னேன்றால் அது ஆதாரபூர்வமானது என்று வைத்து கொண்டால் கூட அதில் 15 இடம் என்று தான் உள்ளதே தவிர எந்த எந்த வசனம் என்று பட்டியல் எதும் இல்லை.

mhIbrahim said...

எனவே கீழ் கண்ட வசனத்திற்கு மட்டுமே நபிகள் நாயகம் ஸஜதா செய்ததாக உள்ளது, இது தவிர வேரு வசனங்களுக்கு நபிகள் நாயகம் ஸஜதா செய்ததர்கு ஆதாரம் இருந்தால் எனக்கு சுட்டி காட்டவும்.

96:19 ஆதாரம் முஸ்லிம் 905, 906

84:21 ஆதாரம் புகாரி 766, 768, 1074, 1078

53:62 ஆதாரம் புகாரி 1067, 1070, 3853, 3972

33:24 ஆதாரம் புகாரி 1069, 3422

இது தவிர 16:49 வது வசனத்தின் போது ஜுமாவில் உமர்(ரலி) அவர்களும், அனைத்து மக்களும் ஸஜதாச் செய்தனர் என்று புகாரி 1077 வது ஹதீஸில் உள்ளது, எல்லா நபித்தோழர்களும் ஜும்ஆவில் ஒருமித்து ஸஜதா செய்த்தால் நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் செய்து இருக்க முடியாது என்று கருதுவோர் அதையும் செய்து கொள்ளலாம்.

மற்ற இடங்களில் நபிகள் நாயகம் ஸஜ்தா செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் நாம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.


அல்லாஹ் மிக அறிந்தவன்

ஜி என் said...

ஸஜ்தா வசனங்கள்,

சகோதரர் இப்ராஹீம் குறிப்பிட்டதில் உள்ள சந்தேகம்.

சூரத்துஸ் ஸாத் அத்தியாயத்தை (38:24) ஓதும் போது நபி(ஸல்) ஸஜ்தா செய்த விபரத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள் (புகாரி 1069) இது நீங்கள் குறிப்பிட்டுள்ளதிலிருந்து விடுபட்டதாகும். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

22:18,22:77 வசனங்களுக்கு நபி(ஸல்) ஸஜ்தா செய்ய சொன்ன விபரம் அஹ்மத் - திர்மதி 527 நஸயி ஆகிய நூட்களில் வருகிறது. திர்மிதியில் இடம் பெறும் ஹதீஸ் பலவீனமாகும். 'மிஸ்அர் பின் ஹாஆன் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர்.

இதில் திர்மிதியல்லாத மற்ற நஸயி - அஹ்மத் ஆகிய நூல்களின் அறிவிப்பாளர்களில் பிரச்சனையுள்ளதா..? விபரம் தேவை.

நமக்கு தெரிந்தவரை 6 வசனங்கள் என்பது உறுதியாகின்றது. மாற்று கருத்து இருந்தால் பதியுங்கள்.

mhIbrahim said...

38: 24 ஐ தான் நான் தவறுதலாக 33:24 என்று குறிப்பிட்டு உள்ளன் எனவே அதை திருத்தி கொள்ளவும், சுட்டி காட்டியதற்கு நன்றி,

22:18,22:77 வசனங்களுக்கு நபி(ஸல்) ஸஜ்தா செய்ய சொன்ன விபரம் திர்மதியை தவிர மற்ற இரண்டு நூல்களில் இருப்பதாக நான் தேடியவரை கிடைக்கவில்லை, அது அஹமதிலூம், நஸயீலும் எங்கே இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

ஜி என் said...

ஸஜ்தா வசனங்கள்

நஸயியில் இருப்பதாக நாம் குறிப்பிட்டது கவனக்குறைவாகும். ஆனால் அஹ்மதில் நீங்கள் தேடினால் அந்த ஹதீஸ் கிடைக்கும். (பார்க்க 16524)

ஸஜ்தா செய்வதற்கு ஆர்வமூட்டி வரக்கூடிய வசனங்கள் எத்துனை இருந்தாலும் அங்கு ஸஜ்தா செய்யக் கூடாது என்று சொல்ல முடியுமா...?

mhIbrahim said...

حديث رقم: 16913


حدثنا عبد الله حدثني أبي ثنا أبو سعيد - مولى بني هاشم - ثنا ابن لهيعة ثنا مشرح بن هاعان أبو مصعب المعافري قال : سمعت عقبة بن عامر يقول : : ( قلت : يا رسول الله أفضلت سورة الحج على سائر القرآن بسجدتين ؟ قال : نعم ، فمن لم يسجدهما فلا يقرأهما .).

இது தான் அஹ்மதில் உள்ள அந்த ஹதீஸ், இதில் திரிமிதியில் நிங்கள் யாரை பலவினமானவ்ர் என்று சொன்னீர்கள்ளோ அதை 'மிஸ்அர் பின் ஹாஆன் தான் இடம் பெற்றுள்ளார், எனவே அந்த இரண்டு இடங்களுக்கு ஸஜதா செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே கீழ்கண்ட நான்கு அல்லது ஐந்து இடங்களில் மட்டுமே ஸஜதா செய்ய ஆதாரம் உள்ளது.

96:19 84:21,53:62,38:24

16:49 –நபிதோழர்களின் ஒருமித்த கருத்து.

ஸஜ்தா செய்வதற்கு ஆர்வமூட்டி வரக்கூடிய வசனங்கள் எத்துனை இருந்தாலும் அங்கு ஸஜ்தா செய்யக் கூடாது என்று சொல்ல முடியுமா...? என்று கேட்டு உள்ளிர்கள்,

நிங்கள் மற்ற இடங்களில் ஸஜதா செய்தால், அது அனுமதிக்கபட்டதாகவும் இருக்கலாம், அல்லது பித்தாகவும் இருக்கலாம் ஏனென்றால் அந்த வசனங்களுக்கு நேரடி ஆதாரம் ஏதும் இல்லை, ஆனால் மற்ற நான்கு வசனங்களும் நபிகள் நாயகம் ஸஜதா செய்தார்கள் என்பது நமக்கு சந்தகம் இல்லாமல் தெரியும்,
எனவெ சந்தகமானதை விட்டு விட்டு சந்தகம் அற்றதை பின் பற்றுவது தான் நம்முடைய மறுமை வாழ்வை வீணாக்காமல் இருக்கும்.


அல்லாஹ் மிக அறிந்தவன்

muslim said...

Assalamu alaikum

When the whole ummah and prominent alims have accepted sajdah tilawat position as 15 who is PJ to come and change the place of tilawath?