அன்பு சகோதரருக்கு
முஸ்லிம் சமுதாயத்தை சரியான விளக்கங்களுடன் நேர்வழி செல்ல உதவி புரிய, அல்லாஹ் தங்களை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அருள்புரிவானாக.
கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது "அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்" என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.
இதற்கான தகுந்த விளக்கங்கள் வேண்டும், நான் அவருக்கு தெளிவாக புரியவைக்க.
Name: ansar
email: hssnansar@...
Location: srilanka
Subject: Question
....................................
Wednesday, February 20, 2008
யானைகளைப் பார்க்காத அரபு சமுதாயம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உலகில் எத்தனையோ உயிரினங்கள் தோன்றி பின்னர் காலப்போக்கில் அதில் பல உயிரினங்கள் இல்லாமல் அழிந்து போயிருக்கின்றன. தோன்றியது முதல் இன்று வரை அழியாமல் பரவலாக வாழ்ந்து வரும் உயிரினங்களில் மிகப் பெரிய உருவத்தைக் கொண்டது யானை.
இன்றும் அனைவரும் அறிந்த, மனிதன் வசப்படுத்திக்கொள்ளும் வனவிலங்குகளில் யானையும் ஒன்றாகும். மதத் திருவிழா, மற்றும் அரசியல் மாநாடு - தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிகளில் யானைகள் பங்கெடுத்துக்கொள்வதை இன்றும் கண் கூடாக பார்க்கிறோம். பண்டையகால மன்னர்களும் யானைகளைப் போர் செய்வதற்காகப் பயன்படுத்தியுள்ளனர். அரசர்களின் சிறப்புக்காக பட்டத்து யானை என்று அழைக்கப்படும் யானைகளும் உண்டு என சரித்திர ஆவணங்களில் படிக்கிறோம்.
யானை என்று ஓர் இனம் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதில்லை. உயிரினங்கள் தோன்றியபோதே யானையும் தோன்றியிருக்கிறது என்பது தெளிவு.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் அரபியாவில் யானைகள் இருந்தது என நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:
நபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும் யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவர் அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தார்.
புனித மக்காவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தார்.
அரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தார்.
அவர் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும் அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டார். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.
இதற்கிடையே அவர் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவர் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.
இதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை மக்காவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க அவர் படையுடன் போர் செய்தார்கள்.
எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு அப்ரஹா தனது ராணுவத்தையும், யானைப்படையையும், தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மக்காவை நோக்கி நடத்தினார். முன்னணியில் வந்து கொண்டிருந்த பட்டத்து யானை மக்காவிற்குள் நுழைய மறுத்து மக்காவுக்கு வெளியிலேயே படுத்து விட்டது. அதைக் கிளப்ப எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவர்களால் அதைக் கிளப்ப முடியவில்லை.
இந்த சம்பவம் பற்றி நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட நாளில் நபி (ஸல்) அவர்களின் கஸ்வா என்கிற ஒட்டகம் மக்காவிற்குள் நுழைய மறுத்து மக்காவிற்கு வெளியிலேயே படுத்துக்கொண்டது.
நபித்தோழர்கள், ''கஸ்வா இடக்குப் பண்ணுகிறது'' என்றார்கள். ''கஸ்வா இடக்குப் பண்ணவில்லை! அது சண்டித்தனம் செய்யும் இயல்புடையதுமில்லை! ஆயினும் அன்று அப்ரஹாவின் யானையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்தவனே இப்போது இதனையும் தடுத்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அப்ரஹாவின் இந்த யானைப்படை சம்பவம் மிகவும் பிரசித்திப்பெற்ற வரலாறு. இதை வரலாற்றாசிரியர் இப்னு இஸ்ஹாக் அவர்கள் பதிவு செய்துள்ளார்.
இந்த வரலாற்று நிகழ்வுகளைத் திருக்குர்ஆன் அல்ஃபீல் - யானை - 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.
(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (திருக்ககுர்ஆன், 105:001-005)
திருக்குர்ஆனும், நபிமொழியும் யானைப்படை சம்பவத்தை உறுதிப்படுத்துகிறது. முஸ்லிம்களுக்கு இதைவிட மேலான வேறு எந்த சான்றுகளும் தேவையில்லை. அரபு நாடுகளில் யானைகள் வாழ்வதற்கான அடர்ந்த காடுகள் இல்லை என்பதால் காட்டில் வசிக்கும் யானைகள் இல்லை எனலாம். ஆனால் வளர்ப்பு யானைகள் இருந்திருக்கின்றன என்பதற்கு மேற்கண்ட வரலாற்றுச் சான்றுகள் ஆவணப்படுத்துகிறது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாடுகளில் யானைகள் இருந்ததில்லை என்று சொல்பவர்கள் சரியான ஆதாரங்களைக் கொண்டு உறுதிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளார்கள்.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். நல்ல விளக்கம். காட்டு யானைகள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வளர்ப்பு யானைகளும், அன்றைக்கிருந்த அரசர்கள் தமது பலத்தை காட்ட யானைகள் எப்பாடு பட்டாகிலும் கொண்டு வந்து விடுவார்கள். இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பழங்கால அரசர்களின் வரலாறுகளைப் பார்த்தால் யானைப் பட்டாளங்கள் வைத்திருந்தார்கள். நமக்கெழும் கேள்வி, ஓரிரு யானைகள் அல்ல பட்டாளத்தையே வைத்திருந்தார்களே யானை பண்ணை வைத்து நவீன உற்பத்தி செய்தா பட்டாளத்தை உருவாக்கினார்கள்? நிச்சயம் இல்லை. தனக்கு தேவை என்பதற்காக பல இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டதுதான் அந்த யானைகள்.
அப்ரஹா என்ற கிறிஸ்த்தவ மன்னன் கஃபாவின் மீது கடும்கோபத்திலிருந்தவன். மத ரீதியாக தனது (தன்னால் கட்டப்பட்ட) வழிபாட்டு தளமே புகழ்பெற வேண்டும் என்ற வைராக்கியத்தில் செயல்பட்டவன்.
கஃபாவை வீழ்த்துவதற்கு யானைப் படையே தகுதிவாய்ந்தது என்று எண்ணிய அவனுக்கு யானைகளை பலப்பகுதிகளிலிருந்த திரட்டுவது பெரும் சுமையாக இருந்திருக்காது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அடிப்டிடையிலேயே இந்தக்கேள்வி தவறானதாகும். ஏனென்றால் எந்த ஒரு இடத்திலும் அங்கே வாழக்கூடியதும் அங்கே உற்பத்தியாகக்கூடியது மட்டும் தான் இருக்கும் என்று நினைப்பது தவறான ஒரு கருத்து.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஒட்டகம் இல்லை என்பதற்காக அது வாழக்கூடிய அரபு பிரதேசத்திலிருந்தோ அல்லது ராஜஸ்தானிலிருந்தோ கொண்டுவரமுடியாது என்று அர்த்தமாகிவிடாது.
கங்காரு என்ற விலங்கு இந்தியாவில் எங்குமே வாழுவது கிடையாது. ஆதனால் அந்த விலங்கை அது வாழக்கூடிய ஆஸ்திரேலியாபோண்ற நாடுகளிலிருந்து கெண்டுவர முடியாது என்று அர்தமாகிவிடுமா?
அது போலத்தான் அக்காலத்தில் பலம் வாய்ந்த மன்னனாக இருந்த அப்ரஹா என்பவன் தனது பலத்தைக் காட்டுவதற்காக யானைப்படைகளையும் குதிரைப்படைகளையும் இன்னும் தனது ராஜ்யத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக தனக்கு தேவையான படைகளையும் அது கிடைகக்கூடிய பகுதிகளிலிருந்து தயார் செய்திருப்பான். ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கு இது ஒன்றும கஷ்டமான காரியமாக இருக்காது.
இந்தக் கேள்வி எப்பொழுது வரும் என்றால்? 1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லைஎன்றாலோ, அது விஞ்ஞானம் வளர்ந்த பிற்காலத்தில் எப்படி ரோபோவைக் மனிதன் உருவாக்குகின்றானோ அதே போலத்தான் யானைகளையும் உருவாக்கினான் என்று சொன்னால் தான் இந்தக் கேள்வியே வரவேண்டும்.
1400 ஆண்டுகளும் முன் யானைகள் இருந்தததா? இல்லையா? என்பதை சகோதரர் கிறிஸ்தவர் என்பதால் மற்ற ஆதாரங்கள் வைத்து நிரூபிப்பதைவீட பைபிளின் சான்றுகளை வைத்து நிரூபிப்பது தான் சரியாக இருக்கும் என்பதால் அதையே நாம் சான்றாக வைக்கின்றோம்.
'ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது. தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
1 இராஜாக்கள் 10 : 22, 2 நாளாகமம் 9 : 21
மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன். அப்பொழுது யானைத்;தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும் பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆமோஸ் -3:15
தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள். அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது. யானைத்;தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக்கொண்டுவந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 15
அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது. அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத்; தந்தத்தைப்போலிருக்கிறது.
உன்னதப்பாட்டு – 5 : 14
உன் கழுத்து யானைத்;தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், ...
உன்னதப்பாட்டு 7 : 4
இந்த பைபிள் வசனங்களில் வந்துள்ள யானைத் தந்தங்கள் என்பது யானைகளே அந்தக்காலக்கட்டத்தில் இல்லாமல் இருந்திருந்தால் பைபில் குறிப்பிட்டுள்ள இந்த மன்னர்களுக்கு எப்படி கிடைத்திருக்கும்?
தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை மூன்று வருடத்திற்கு ஒரு முறை கப்பல்களின் மூலமாக கொண்டுவந்துள்ளார்கள் என்பதையும், வியாபாரிகளான தேதான் புத்திரர்கள்;; தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை உலகின் பலத் தீவுகளுக்கு சென்றுத்தான் வாங்கிவந்துள்ளனர் என்பதையும், யானைத்தந்தங்களையும், கருங்காளி மரங்களையும் அவ்வாறே கொண்டு வந்துள்ளனர் என்பதற்கு நாம் மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களே சான்றாகும்.
இங்கே நாம் குறிப்பிடும் பைபில் வசனங்களில் வரும் சம்பவங்கள் முஹம்மது நபி (ஸல்) பிறப்பதற்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்;.
அபூஇப்ராஹீம், சென்னை
Post a Comment