வலைப்பதிவில் தேட..

Tuesday, June 10, 2008

மதுவும் - வட்டியும்

1. என்னுடைய முதலாளி வட்டி வாங்குகிறர் நான் அவரிடம் வேலை செய்யலாமா? மற்றும் அவர் இன்னும் பிற தவறான செயல்களை செய்கின்றர்கள் என்று உடன் வேலை செய்பவர்கள் கூறுகிறர்கள் அதனை ஈர்ர்கலாமா?

2. என்னுடன் வேலை செய்பவர்கள் அனைவரும் ஒர் வீட்டில் இருந்து வருகிறோம். வேலை செய்யும் நபர்கள் மது அருந்தும் வழுக்கம் உள்ளவர்கள் மாதத்தின் கடைசியில் அந்த தேவைக்காக பணம் கேட்கிறார்கள் கொடுக்கலாமா? இந்த இரண்டு கேள்வி பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Name: Thahir
email:
thahirmd53...
Location: India
Subject: Kelvi
...........................


வட்டிக்கடை நடத்துபவராக இருந்தால் நீங்கள் பிற வேலையைத் தேடிக் கொள்வதுதான் நல்லது. ஏனெனில் வட்டிக்கு எதிரான கடுமையான எச்சரிக்கைகள் இருப்பதால் அந்தப்பக்கத்தை விட்டு நாம் ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது. வட்டி வாங்குபவர் என்பதை எந்த அர்த்தத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று புரியவில்லை. வங்கியில் கணக்கு வைத்துள்ள அநேகர் கூட வட்டி வாங்கத்தான் செய்கிறார்கள். அந்த அர்த்தத்தில் குறிப்பிட்டால் இன்றைக்கு உலகில் பெரும்பாலான இடங்களில் - நாடுகளில் -வேலை செய்யவே முடியாது ஏனெனில் அனைத்து தொழில் நிறுவனங்களும் வங்கியோடு தொடர்பில் தான் இருக்கின்றன.

வங்கியோடு தொடர்பில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா என்றால் இது குறித்து ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய இடங்களில் வேலை செய்வதால் நாம் குற்றவாளியாக மாட்டோம்.

உங்கள் முதலாளி தவறான செயல் செய்கிறார் என்று பிறர் கூறுவதை அலட்சியப்படுத்துங்கள். நீங்கள் நேரடியாக காணும் வரை பிற செய்திகளை முழுமையாக அலசி தெளிவு பெறாதவரை யாரைப் பற்றியும் தப்பெண்ணம் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில தவறான எண்ணங்கள் பாவமாகி விடும் என்று குர்ஆன் எச்சரிக்கின்றது.

உடனிருப்பவர்கள் ஹராமான காரியத்தை செய்வதற்கு உங்கள் உதவியை நாடினால் - பணம் மட்டுமல்ல கடையில் போய் மது வாங்கி வர சொன்னாலும் - அதற்கு உடன்படாதீர்கள்.

முஸ்லிம்கள் தீமைகளை பலவழிகளில் தடுக்கக்கடமைப்பட்டவர்கள். தடுக்க முடியாத பலவீனமான நிலை நம்மிடம் இருந்தால் குறைந்த பட்சம் உதவி செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள், பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் (அல்குர்ஆன்: 5:2)

உடனிருப்பவர்களிடம் நளினமாக 'தனக்கு இதில் உடன்பாடில்லை, என் மார்க்கம் இதை தடுக்கின்றது" என்று கூறிவிடுங்கள். உடனிருப்பதால் அவர்களால் உங்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடியும். இறைவனின் உதவியை நாடுங்கள். பாவத்துக்கு துணைப் போக வேண்டாம்.

1 comment:

முஹம்மத் இக்பால் said...

நமக்கு சம்பளம் தரும் முதலாளி வட்டி வாங்குவதால் நாம் தண்டிக்கப் பட மாட்டோம்.நம் உழைப்பு உண்மையாக இருந்தால் போதும். ஒருவர் சுமையை வேறொருவர் சுமக்க மாட்டார் என்பது இறைவாக்கு எனவே தைரியமாக வேலை செய்யுங்கள், தொடர்ந்து வேலை செய்ய சங்கடம் தோன்றினால் வேறு வேலை கிடைக்கும் வரை இதில் தொடருங்கள் அல்லாஹ் ஆஃலம்.

உங்களுடன் வேலை செய்பவர்கள் குடிக்க பணம் கேட்டால் அவர்கள் மனம் புண்படாமல் மறுத்து விடுங்கள், நாமும் ஹராமான செயல் செய்யக்கூடாது, ஹராமான செயலுக்கு உறுதுனையாகவும் கூடாது.