வலைப்பதிவில் தேட..

Friday, August 22, 2008

நோன்பு - தலைப்பிறை

அன்பிற்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
காலம் முழுதும் உலகவாழ்க்கையையே குறிக்கோளாக கொண்டு உழன்றுகொண்டிருக்கும் மனிதர்களுக்கு மறுமை வாழ்க்கையை நினைவூட்டுவதற்காகவும், அங்கு வெற்றிப்பெறுவதற்காகவும் இறைவனால் முன்வைக்கப்பட்ட அமல்களில் ரமளானும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
குர்ஆன் இறங்கிய மாதம் என்பதால் அந்த மாதத்தையும் குர்ஆன் இறங்கிய இரவு என்பதால் லைலதுல்கத்ர் இரவையும் இறைவன் மிகப் பெரிய அந்தஸ்த்துகளுடன் சிறப்பித்துள்ளான். அத்தகைய புனிதமாதத்தை நோக்கி நாம் மிக அருகில் சென்றுவிட்டோம்.

ரமளான் வந்து விட்டால் வழக்கம்போல முஸ்லிம்களிடம் பல சர்ச்சைகள் உருவாகி விடும் அதில் முதன்மையானது ரமளானை தீர்மானிக்கும் பிறை.
பிறை பார்த்து நோன்பை அடைவது உலகெங்கும் ஒரே நாளிலா, அந்தந்த நாடுகளுக்கா, அந்தந்தப் பகுதிகளுக்கா, மாநிலங்களுக்கு தனி பிறையா, லோக்களில் டவுன் ஹாஜிகளின் அறிவிப்பிலா, ஜமாஅத்துல் உலமா தீர்மானத்திலா என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் எழும். நாம் எப்படி முடிவு செய்வது என்று அவசியம் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் சில ஊர்களில் (நம்மூர் உட்பட) பலர் நோன்புடன் இருக்கும் போது பலர் பெருநாளில் இருக்கிறார்கள். பெருநாள் கொண்டாட்டங்களில் நோன்பு அல்லது நோன்பு நாளில் பெருநாள் கொண்டாட்டம். இது முறையா... இன்னும் சில ஊர்களில் மூன்று நாட்கள் பெருநாள் தொழுகை நடக்கின்றது. இது எந்த வகையில் நியாயம்?

வணக்க வழிபாடுகள் அனைத்திலும் ஒரே சீராக இயங்க வழிகாட்டும் இஸ்லாம் நோன்பில் மட்டும் வழிகாட்டவில்லை என்பது போல நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. எனவே இது குறித்து ஒரு விவாதகளத்தை துவங்குவோம். ஆதாரங்களை அலசுவோம். எது சரியோ அதை நாமும் பின்பற்றி நம் குடும்பங்ளுக்கும் தெரிவிப்போம் என்ற அடிப்படையில் "ரமளான் பிறை"யை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். அவசியம் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

ஒருமாதத்தின துவக்கம் முதல் பிறையில் தான் உள்ளது. பிறை பிறந்து அதை பார்த்து மாதத்தை அடைந்த பிறகும் எங்கள் பகுதியில் - எங்கள் நாட்டில் - தெரியவில்லை அதனால் நாங்கள் ரமளானை அடையவில்லை என்று சொல்ல முடியுமா...? முஸ்லிம்களில் ஒருவர் ரமளான் பிறை பார்த்து உறுதிபடுத்தி விட்டால் போதும் என்பது நபி(ஸல்) நமக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம். அப்படி பார்த்து அறிவித்த பிறகும் நாம் மறுக்கிறோம் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? எனவே அந்த புனித மாதத்தின் ஒரு நாளையும் நாம் முன் பின் என்று ஆக்கி விடாமல் தேர்ந்தெடுப்பதற்கு பிறை குறித்து தீர்க்கமாக சிந்திக்க உங்களை அழைக்கிறோம். எதிர்கருத்தோ - ஆதரவு கருத்தோ - மேலதிக சந்தேகமோ எதுவாக இருந்தாலும் பதியுங்கள். -------------------------------------------------------------------------------- அஸ்ஸலாமுஅலைக்கும், ஜனாப் அபுதமீம் ஹாபிஸ் கலீமுல்லா உமரி மதனி அவர்கள் ஆய்வு நடத்தி ஒரே நாளில் உலகம் முழுவதும் ஒரே பிறையை ஏற்றுக்கொள்வது இயலாது என விளக்கிவுள்ளார்களே. தங்கள் விளக்கம் என்ன?அன்புடன்அன்சாரி.
--------------------------------------------------------------------------------
வஅலைக்குமுஸ்ஸலாம்.
பல சகோதரர்களும் அறிஞர்களும் அந்த "ஏற்றுக்கொள்ள முடியாது" என்ற கருத்தில் இருப்பதை நாமும் அறிவோம். இது விரிவாக அணுகி அலச வேண்டிய ஒன்றாகும். எதிர்கருத்துள்ளவர்கள் ஆன்லைனில் விவாதிக்க முன் வந்தால் இது குறித்து விளக்கலாம். அல்லது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கான காரணத்தை நீங்கள் முன் வைத்தால் அதற்கான பதிலை பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. ஒரே நாளில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது சரியல்ல. அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்களிடம் நாமும் கேள்விகளை வைப்போம். அப்போது அதன் சிக்கல், ஆதாரங்களுக்கு மாற்றமான நிலை விளங்கும்.
--------------------------------------------------------------------------------
எனக்கு பிறை சம்பந்தமாக சில சந்தேகங்கள் உண்டு அவைகள்:
1) "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்பது ஹதீஸாக உள்ளது. டெலிபோன், சட்டேளிட் போன்ற நவீன கால தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவரை? நாம் நம் கண்களால் பிறை பார்த்து நோன்பு பிடிப்பது தானே சரியாக இருக்கும்?
2) உலகில் பிறை, காலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் உதிக்குமா / உதிக்கிறதா?
3) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடாது என்பது தெளிவானால் எந்த பகுதியில் முதல் பிறை பிறக்கிறது?
4) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது?
5) பிறை பார்த்தாகிவிட்டது என்று உலகில் எங்கு கூறப்பட்டாலும் அதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது தானா?
அன்புடன் ஹபீப்
--------------------------------------------------------------------------------
அன்புச் சகோதரர் ஹபீப் அவர்களுக்கு வஅலைக்குமுஸ்ஸலாம்.
அல்லாஹ் உங்கள் ஆர்வத்தையும் - மார்க்க அறிவையும் அதிகப்படுத்துவானாக.

நீ்ங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்குரிய பதிலை வரிசையாகப் பார்ப்போம். முதல் கேள்வி மார்க்க அடிப்படையில் ஆய்வுச் செய்ய வேண்டியவையாகும். அதை விரிவாக பார்த்து விட்டு மற்ற கேள்விகளுக்கு செல்வோம். இன்ஷா அல்லாஹ்.

1) "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்பது ஹதீஸாக உள்ளது. டெலிபோன், சட்டேளிட் போன்ற நவீன கால தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவரை? நாம் நம் கண்களால் பிறை பார்த்து நோன்பு பிடிப்பது தானே சரியாக இருக்கும்? ஹபீப்.

ஒரே தலைப்பிறையின் கீழ் முஸ்லிம் உம்மத் ஒன்றுப்பட வேண்டும் என்று நாம் கூறிவருகிறோம். அதற்கு வலுவான ஆதாரமே நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ்தான். ஆனால் அந்த ஹதீஸை சரியாக புரிந்துக் கொள்ளாதவர்கள் அந்தந்தப் பகுதிக்கு அந்த ஹதீஸை ஆதாரமாக்குகிறார்கள். ஹதீஸின் வாசகத்தைப் பார்த்து விட்டு தொடர்வோம்.

‏حدثنا ‏ ‏آدم ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏حدثنا ‏ ‏الأسود بن قيس ‏ ‏حدثنا ‏ ‏سعيد بن عمرو ‏ ‏أنه سمع ‏ ‏ابن عمر ‏ ‏رضي الله عنهما ‏ ‏عن النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أنه قال ‏ ‏إنا أمة أمية لا نكتب ولا نحسب الشهر هكذا وهكذا ‏ ‏يعني مرة تسعة وعشرين ومرة ثلاثين
http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=0&Rec=3006

நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி)இந்த ஹதீஸையும் அடுத்த ஹதீஸையும் கவனத்தில் கொண்டு தொடருங்கள்.

‏حدثنا ‏ ‏آدم ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏حدثنا ‏ ‏محمد بن زياد ‏ ‏قال سمعت ‏ ‏أبا هريرة ‏ ‏رضي الله عنه ‏ ‏يقول ‏ ‏قال النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أو قال قال ‏ ‏أبو القاسم ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن ‏ ‏غبي ‏ ‏عليكم فأكملوا عدة شعبان ثلاثين
http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=0&Rec=3000

"பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி உட்பட பல நூல்களில் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது).

முதல் செய்தியில் நபி(ஸல்) முக்கிய தகவலை கொடுத்துள்ளார்கள். அதாவது அவர்களின் சமுதாயம் எழுதப்படிக்கத் தெரியாத - பாமர - சமுதாயம். அந்த சமுதாயத்திற்கு விஞ்ஞானம் பற்றிய தெளிவோ விண்கலையை ஆய்வு செய்யும் திறனோ கிடையாது. அதனால் மாதத்தை இருபத்தி ஒன்பதாகவோ - முப்பதாகவோ முடிவு செய்துக் கொள்ள வேண்டியதுதான்.

ரமளான் பற்றிய பாடத்தில் புகாரி இமாம் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். 'நமக்கு விண்கலைப் பற்றிய அறிவு கிடையாது" என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதிலிருந்து விண்கலைப் பற்றிய அறிவு பெற்றவர்கள் வருவார்கள் அவர்களின் துள்ளியமான ஆய்வை - அறிவை ஏற்கலாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். இல்லையென்றால் ரமளான் மாதம் பற்றி பேசும் போது விண்கலை அறிவு பற்றி குறிப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. பிறை கண்டு ரமளானை தீர்மானிக்கும் விஷயத்தில் நபி(ஸல்) தகுந்த இடத்தில் விண்கலையைப் பற்றி பேசியுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்களுக்கு பிறகு வளர்ந்து வரும் விண்ணாய்வுக்கு அவர்கள் வழிகாட்டி சென்றுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது.

அடுத்து பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்ற எந்த ஒரு ஹதீஸிலும் 'கண்களால் பிறைப் பார்க்க வேண்டும்' என்ற பதம் வரவேயில்லை. பிறைக் கண்டு - பார்த்து நோன்பு வையுங்கள் என்றே நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். அப்போதைய மக்களுக்கு கண்களால் பார்ப்பது மட்டுமே தீர்வாக இருந்தது. வேறு வழியொன்றும் இல்லை. அதனால் அவர்கள் கண்களால் பார்த்து தீர்மானித்தார்கள். கண்களால் பார்க்க முடியாத சந்தர்பங்களில் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். கண்களால் பார்க்க வேண்டும் என்ற கட்டளை எதுவுமில்லை. நாம் இப்படி சொன்னவுடன் யாராவது அந்த ஹதீஸில் இடம் பெறும் அரபு வார்த்தையை எடுத்துக் காட்டி 'கண்களால் பார்க்க வேண்டும்' என்று வாதிக்கலாம்.

"ருஃயதஹு" என்ற பதம் சம்பந்தப்பட்ட ஹதீஸ்களில் வருகின்றன. 'அதைப் பார்த்து' " என்பது அதன் பொருள். எனவே பார்க்கத்தான் வேண்டும் என்று வாதிக்கலாம். ருஃயத் என்ற அரபி பதம் விரிந்த பொருட்களை உள்ளடக்கியதாகும். பார்த்தல், ஆய்வு செய்தல், கேட்டறிதல் போன்ற பொருள்கள் இந்த பதத்திற்கும் இதன் துணைப்பதங்களுக்கும் உண்டு. இதைப் புரிந்துக் கொள்வதற்கு மிகப் பெரும் ஆராய்சி எதுவும் தேவையில்லை. எல்லோரும் அறிந்த குர்ஆனின் ஒரு அத்தியாயத்தி்ன் துவக்க வசனத்திலிருந்தே இதை விளக்கி விடலாம்.

யானை அத்தியாயம் என்று பெயர் பெற்ற சூரத்து ஃபீல் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்தை இறைவன் இவ்வாறு ஆரம்பிக்கிறான்.

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ

யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? ( அல்குர்ஆன் 105:1)

கஃபாவை அழிக்க வந்த யானை படையினரை அல்லாஹ் அழித்த விபரத்தை இங்கு சுட்டிக்காட்டி (நபியே) நீர் பார்க்கவில்லையா..? என்று கேட்கிறான். "பார்க்கவில்லையா" என்று மொழி பெயர்க்கும் இடத்தில் 'தர' என்ற பதம் வருகின்றது. ருஃயத் பதத்தை சேர்ந்த பதம் தான் இது. இந்த வசனத்திற்கு 'பார்க்கவில்லையா" என்று பொருள் கொள்ளவே முடியாது. ஏனெனில் நபி(ஸல்) பிறப்பதற்கு முன்பே யானைப்படையினர் அழிக்கப்பட்டு விட்டனர். அழிக்கப்பட்டப்பின் பிறந்து, நாற்பது வயதை கடந்த பின் நபி(ஸல்) அவர்களிடம் இறைவன் இப்படி கேட்கிறான் என்றால் 'பார்க்கவில்லையா" என்ற அர்த்தத்தில் கேட்கவில்லை. அறியவில்லையா, செய்தி கிடைக்கவில்லையா என்ற அர்த்தத்தில் தான் அந்த பதத்தை பயன்படுத்துகிறான்.

எனவே நோன்பு பற்றி வரும் அந்த ஹதீஸுக்கு பிறையை பார்த்து - அறிந்து நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து - அறிந்து நோன்பை விடுங்கள் என்பதே சரியான பொருளாகும். பார்க்கவோ, அறியவோ முடியாத சந்தர்பங்களி்ல் முந்தைய மாதமான ஷஃபானை 30 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வானவியலைப்பற்றி நபி(ஸல்) அன்றைக்கே குறிப்பிட்டுள்ளதாலும், கண்களால் பார்க்க வேண்டும் என்ற கட்டளை வராததாலும் அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற வாதம் ஆதாரமற்றுப் போய் விடுகின்றது. பிறை செய்தி கிடைத்தால் அதை ஏற்று நோன்பை துவங்கி விட வேண்டும் என்பதே முஸ்லிம்களை ஐக்கியப்படுத்தும் சரியான முடிவாக இருக்க முடியும். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

ஒரு பிறையையே அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்குரிய அழுத்தமான அடுத்த ஆதாரத்தை பார்த்து விட்டு மற்றக் கேள்விகளுக்கு நகர்வோம். இன்ஷா அல்லாஹ்.
--------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாதத்திற்கும் தலைப்பிறை ஒன்றுதான்
அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

ரமளான் பிறையின் கருத்து வேறுபாட்டை களைந்து முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டு நீடிக்கும் இரண்டு, மூன்று நாட்கள வித்தியாசத்தில் நோன்பு - நோன்புப் பெருநாள் என்ற நிலை தவறு என்பதை புரிநதுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அது பற்றி பேசி வருகிறோம். இந்த வருட ரமளானில் முதல் பிறை அறிவிக்கப்பட்டவுடன், "இது நம்மை கட்டுப்படுத்தாது" என்று அலட்சியமாக இருந்து விடாமல் நாம் நம் குடும்பங்களுக்கும் நமக்கு தெரிந்தவர்களுக்கும் பிறை அறிவிப்பை எத்தி வைத்து நோன்பு பிடிக்க சொல்ல வேண்டும். முந்தைய பதிவில் இதற்கான ஆதாரத்தை ஓரளவு கண்டோம். இப்போது தலைப்பிறை ஒன்றுதான் என்பதற்கான அடுத்த வலுவான ஆதாரத்தைக் காண்போம்.

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

இந்த வசனத்தில் "மாதத்தை அடைகின்றாரோ" என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து எல்லோராலும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைய முடியாது என்று விளங்கலாம். உதாரணமாக சவுதியில் இரவு 6 மணிக்கு பிறை தெரிகின்றது என்று வைத்துக் கொள்வோம். இதே நேரத்தில் சவுதி அரேபியாவுக்கு கீழுள்ள கீழ் திசை நாடுகள் இரவின் உள்ளே சென்று விடும். இந்தியா 8.30 அடைந்திருக்கும். அதே போன்று சவுதிக்கு மேல்திசை நாடுகள் பகல் பொழுதிலும் இரவை நெருங்கியும் வந்துக் கொண்டிருக்கும். எனவே சவுதியில் பிறை தெரியும் போது அவர்கள் மட்டும் தான் அந்த நேரத்தில் அந்த மாதத்தை அடைகிறார்கள். இப்போது சவுதிக்கு 2 மணி நேரத்துக்கு முன் இரவை அடைந்த நாம் (இந்தியா) அந்த மாதத்தை அடைந்து விட்டோமா இல்லையா....? இந்தக் கேள்வியை முக்கியமாக கவனத்தில் கொண்டு தொடருங்கள்.

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும். என்ற வசன அடிப்படையில் மாதத்தை அடைந்தவர்கள் இரவில் தான் நோன்பு வைக்கப்பட வேண்டும். அதாவது இரவு 6 மணி முதல் நோன்பை துவங்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்வதில்லை. 6 மணிக்கு பிறை தெரிந்தாலும் அன்று காலை வரை பொருத்திருந்து 5 மணிக்கு தான் முதல் நோன்பின் உள்ளே செல்கிறோம். இந்த இடைப்பட்ட நீண்ட பொழுதின் அர்த்தம் என்ன? என்பதை சற்று சிந்தித்துக் கொண்டு கீழுள்ள குர்ஆன் வசனத்தை அணுகுங்கள்.

يَسْأَلُونَكَ عَنِ الأهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوْاْ الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُواْ الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
பிறைகளைப் பற்றி (நபியே!) உம்மிடம் கேட்கின்றனர். ''அவை மக்களுக்கு காலம் காட்டுகின்றது, ஹஜ்ஜை அறிவிக்கின்றது'' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 2:189)

இந்த வசனத்தில் இறைவன் "பிறை மக்களுக்கு காலம் காட்டுகின்றது - ஹஜ்ஜை அறிவிக்கின்றது" என்று இரண்டு கருத்துக்களை தெளிவு படுத்தியுள்ளான். ஹஜ்ஜை அறிவிக்கும் அதே பிறைத்தான் நோன்பையும் அறிவிக்கின்றது. (ஆனால் நாம் ஹஜ்ஜுக்கு ஒரு பிறை - நோன்புக்கு ஒரு பிறை என்று வேறுபடுத்துகிறோம். இதை ஒருபக்கம் வைப்போம்)

இறைவன் பிறைப்பற்றி சுட்டிக்காட்டி விட்டு "வீடுகளுக்கு அதன் முன் வாசல் வழியாக வாருங்கள். பின் வாசல் வழியாக வருவது நன்மையல்ல" என்ற செய்தியையும் சொல்கிறான். (அரபுகளிடம் இருந்த ஒரு மூட பழக்கதை இது சுட்டிக் காட்டினாலும்) அதில் பிரிதொரு முக்கிய சட்டமும் உள்ளது. ரமளானை வீடு என்று உவமையாகக் கொண்டால் அதன் வாசல் என்பது முதல் ஸஹர் தான். வாசல் வழியாக உள்ளே நுழையுங்கள் என்ற கட்டளைப்படி சவுதியில் பிறைத்தெரிந்தாலும் நாம் தான் முதலில் ஸஹர் செய்து ரமளான் உள்ளே செல்ல வேண்டும். சவுதியில் பிறைத் தெரிந்த பிறகு அவர்களுக்கு முற்பகுதியில் உள்ள நாம் நோன்பைத் துவங்காமல் அவர்களை சுற்றி வந்து அடுத்த நாள் நோன்பைத் துவங்குகிறோம் என்றால் வீடுகளுக்கு பின் வழியாக நுழைவதாகின்றது. பின் வழியாக உள்ளே நுழைவது நன்மையில்லை என்ற இறைவனின் வசனத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அஞ்சினால் பிறை செய்தி கிடைத்தவுடன் முதல் ஸஹருக்கு தயாராகி விடலாம்.

இதை இன்னும் வலுபடுத்தும வசனத்தையும் பார்ப்போம்.

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ

இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே (அல்குர்ஆன் 55:17)

இரு கீழ் திசைகளும் மேல்திசைகளும் பூமியிலிருக்கும் என்ற பேருண்மையை அன்றைக்கு அறிவித்த குர்ஆனில் பிறைத் தெரிந்த பிறகு அதன் கீழ் திசை - மேல் திசை நாடுகள் என்னவென்று பார்க்க வேண்டும் சவுதியில் பிறை கண்டால் - தெரிந்தால் - கணித்தால் அதன் கீழ் திசை நாடுகளில் நாம் வந்து விடுவோம். கீழ்திசை என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பிறைத் தெரிந்து விடியும் வரை உள்ள இரவு நாடுகள் அனைத்தும் அந்த பிறைக்கு உட்பட்டு விடுகின்றது என்ற முக்கிய செய்தியை இறைவன் சுட்டிக்காட்டியுள்ளான்.

எனவே இதுவரைப் பார்த்த ஆதாரங்களின் அடிப்படையில் தலைப்பிறை உலகிற்கு ஒரே பிறைத்தான் என்பதை விளங்கலாம்.

ரமளானை அறிவிக்க பிறை பிறந்து விட்ட பிறகும் நாம் வகுத்துக் கொண்ட பூமியின் எல்லைக் கோடுகளை காரணம் காட்டி 'இது எங்களுக்குரிய பிறையல்ல" என்று ஒதுங்குவது மார்க்க அடிப்படையில் சரிதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பிறை பிறந்து ரமளான் அறிவிக்ப்பட்டு விட்ட பிறகும், வெட்கப்பட்டு கொண்டு அல்லது ஊரோடு ஒத்துபோவோம் என்ற பலவீனமான எண்ணத்தில் அல்லாஹ் அறிவித்த ரமளானை நாம் அலட்சியப்படுத்தினால் குற்றவாளியாகி விடுவோம். இந்த அலட்சியம் பெருநாள் தினத்தில் நோன்பு வைக்கக் கூடாது என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் புறக்கணிக்க வைக்கும் என்பதை அஞ்சி தலைப்பிறைக் குறித்து முடிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
(இது குறித்து ஐயம் இருந்தால் எழுதுங்கள்)
இனி சகோதரர் ஹபீபின் அடுத்தக் கேள்விக்கு நகர்வோம். இன்ஷா அல்லாஹ்.
--------------------------------------------------------------------------------
சகோதரர் ஹபீப் அவர்களின் அடுத்தக் கேள்விகளை காண்போம்.
2) உலகில் பிறை, காலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் உதிக்குமா / உதிக்கிறதா?
3) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடாது என்பது தெளிவானால் எந்த பகுதியில் முதல் பிறை பிறக்கிறது?
4) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது? "ஹபீப்"

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ

சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (நிலைகளை) ஏற்படுத்தியிருக்கின்றோம். பழைய பேரீத்த மட்டையைப் போலாகின்றது (36:39)

இந்த வசனம் சந்திரனுக்கென்று ஒரு குறிப்பிட்ட (மாறுபட்ட) நிலைகள் உள்ளன என்பதை அறிவிக்கின்றது. வருடத்தில் சந்திர ஆண்டு சூரிய ஆண்டைவிட 11 நாட்கள் குறைவதால் அமவாசைக்கு பிறகுள்ள முதல் பிறை எப்போதும் ஒரே இடத்தில் தோன்றாது. ஒரே இடத்தில் தோன்றும் என்று விஞ்ஞானமும் சொல்லவில்லை.

அது மாறுபட்ட பகுதிகளில் தோன்றும் என்பதால் குறிப்பிட்ட பகுதியை முதல் பிறைக்கான அடையாளமாக்க முடியாது என்பதை விளங்கலாம். அது எங்கு தெரிகின்றது என்பது முக்கியமல்ல. பூமியின் எல்லைகள் என்பது நமது நிர்வாக வசதிக்காக நாம் வகுத்துக் கொண்டதாகும். இந்த எல்லைகள் மனிதனால் பன்னெடுங்காலமாக மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. எனவே எல்லைகளை கருத்தில் கொள்வது சந்திரனை தீர்மானிக்கும் அளவுகோலாக்க முடியாது.

அமவாசைக்கு அடுத்து முதல் பிறை பிறந்து விட்டது என்பதே நாட்களை தீர்மானிக்கும் அளவாக எடுக்க வேண்டும்.

உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது? "ஹபீப்"

நாம் நேரடியாக அறிவதற்கும் அறிந்தவர்கள் சொல்லும் நம்பகமான தகவல்களை ஏற்பதற்கும் வித்தியாம் ஒன்றுமில்லை. விண்ணியலைப் பொருத்தவரை நாம் (அதாவது ஒவ்வொருவரும்) நேரடியாக அறிந்தே - கண்டபிறகே அமல்களை செய்ய வேண்டும் என்ற எந்த கட்டளையும் இஸ்லாத்தில் இல்லை. நம்பகமானவர்களால் தீர்மானிக்கப்பட்ட விண்ணியல் - புவியியல் கருத்தோட்டங்களை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. நாமும் அந்த நிலையில் தான் இருக்கிறோம். பிறை மாறுபட்ட பகுதிகளில் தோன்றும் என்பது விஞ்ஞான உண்மை. அதைக் காணவும் - தீர்மானிக்கவும் பல நாடுகள் முயல்கின்றன. (கூடுதல் கவனத்தை சவுதி மேற்கொள்கின்றது. - ஹஜ்ஜுக்கு இவர்கள் வழிகாட்ட வேண்டும் என்பதால் இந்த கூடுதல் கவனம்) அவர்கள் அறிவிக்கும் நேரத்தில் முதல் பிறை என்று தீர்மானித்து நம் அமல்களைத் தொடங்கி விட வேண்டியததான்.

பிறை பார்த்தாகிவிட்டது என்று உலகில் எங்கு கூறப்பட்டாலும் அதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது தானா? ஹபீப்

அமவாசைக்கு அடுத்த பூமியின் எந்தப்பகுதியில் தெரியும் பிறையாக இருந்தாலும் அதுவே அந்த மாதத்திற்கான முதல் பிறையாகும். பூமி அமைப்பில் நேரங்கள் மட்டும் தான் வித்தியாசப்படும். நாள் வித்தியாசப்பட வாய்ப்பே இல்லை என்பதால் தகவல் எங்கிருந்து கிடைத்தாலும் அதை பின்பற்றத்தான் வேண்டும். அதை நாம் புறக்கணித்தால் இதுவரை நாம் எடுத்துக் காட்டியுள்ள (முந்தைய பதிவுகள்) ஆதாரங்களுக்கு மாறுபட்டு நிர்ப்போம்.

அந்ததந்தப் பகுதியில் பிறை தெரியவேண்டும் என்போரின் வாதத்தில் ஏராளமான பலவீனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தலைப்பிறைக் குறித்த ஆதாரங்களே போதுமானதாக இருப்பதால் நாம் அந்தப்பகுதிக்கு செல்லவில்லை.

நாம் எடுத்து வைத்துள்ள ஆதாரங்களில் - வாதங்களில் மாற்றுக்கருத்து இருந்தால் எதிர் ஆதாரங்கள் இருந்தால் எழுதுங்கள். இன்னும் கூடுதல் தகவல்களை பரிமாறலாம்
--------------------------------------------------------------------------------
ஆனால் நாட்டுக்கு ஒரு பிறை என்ற முறையில் அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் தான் என்ன.? இதில் இந்தியாவில் டெல்லி, கேரளா ,தமிழ் நாடு என்று மூன்று மாநிலம் கலம் தனி தனி யாக (நோன்பை ) எடுத்த வரலாறும் உண்டு. ஊருக்கு ஒரு பெருநாள் தொழுகை நடந்த நிகழ்ச்சியும் உண்டு. சில ஊர்களில் மூன்றாம் பிறையை முதல் பிறையாக கணித்து நோன்பு நோற்ற சம்பவங்களும் உண்டு.

இதை அரசியல் / கவர்மெண்டு காக அப்படியே ஏற்கிறார் கலா ? (காரணம் இன்று பெருநாள் என்று காலண்டரில் ஒரு வருடத்திற்கு முன்பே விடுமுறை யை அறிவித்து விடுகிறார்கள். அதை ஏன் மாற்ற வேண்டும் என்று கவர்மெண்டு சொல்லுவதால் அதையே அப்படியே அறிவிப்பு செய்து விடுகிறார்களா ?.) இல்லை என்றால், அவர்கள் ஒவ்வரு நாட்டிலும் பிறை பார்க்கும் போதுதான் , அதை வைத்துதான் நோன்பு நோற்க வேண்டும் என்று சொல்லும் அவர்களின் வாதத்தை தங்களால் விளக்க முடியுமா ? மேலும் சிலோன் நாட்டில் பிறை தென்பட்டால் நோன்பு எடுக்கும் இவர்கள் ( தற்போது கேரளாவில் தெரிந்தால் எடுக்க மாட்டார்கள்). சவுதி அரேபியா வில் தென்பட்டு அறி வித்து விட்ட பிறகும் , நோன்பு வைக்க மறுப்பது ஏன்.? சற்றே விபரமாக விளக்கவும். அவர்களின் வாதத்தையும் அறிய ஆவல்.
செய்யத்
--------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
// உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும். என்ற வசன அடிப்படையில் மாதத்தை அடைந்தவர்கள் இரவில் தான் நோன்பு வைக்கப்பட வேண்டும். அதாவது இரவு 6 மணி முதல் நோன்பை துவங்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்வதில்லை. 6 மணிக்கு பிறை தெரிந்தாலும் அன்று காலை வரை பொருத்திருந்து 5 மணிக்கு தான் முதல் நோன்பின் உள்ளே செல்கிறோம். இந்த இடைப்பட்ட நீண்ட பொழுதின் அர்த்தம் என்ன? என்பதை சற்று சிந்தித்துக் கொண்டு கீழுள்ள குர்ஆன் வசனத்தை அணுகுங்கள் //

6 - 7 மணிக்கு பிறை தெரிந்து அந்த புனிதமிக்க ரமளானை அடைந்தாலும்" ஸஹருடைய நேரத்தை அடைந்து உணவு உண்டு வானம் கருப்பு கோட்டிலிருந்து வெள்ளை கோட்டிற்கு வரும்முன் நோன்பை ஆரம்பிப்பது தானே நபி வழி? அப்படி இருக்க இந்த வாதம் ஏற்புடையதாக இல்லை.
மற்றும்

ஷேய்க் இப்னு உத்தைமீன், ஷேய்க் அல் இஸ்லாம் இப்னு தைமியா போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்களும் அந்த அந்த நாட்டின் பிறை தெரிவதை வைத்தே நோன்பு நோற்பதும் விடுவதும் ஆகும் என்று கருத்து கூறியுள்ளார்களே ? சகோதரர் தல்பாதர்
http://www.islam-qa.com/en/ref/40720
--------------------------------------------------------------------------------
வஅலைக்குமுஸ்ஸலாம்.
முதலில் சகோதரர் தல்பாதர் அவர்களி்ன் பதிவிற்கான விளக்கத்தைப் பார்த்து விட்டு சகோதரர் செய்யத் முன் வைத்துள்ள கேள்விகளுக்கு வருவோம்.
இரவில் நாம் மாதத்தை அடைந்துவிடுகிறோம். 2:185 வது வசனப்படி மாதத்தை அடைந்தவர் நோன்பு வைக்க வேண்டும். மாதத்தை அடைந்தவர் நோன்பு வைக்கட்டும் என்று சொல்லும் ரப்புல் ஆளமீன் அடுத்த வசனத்தில் ' கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் தெளிவாக தெரியும் வரை உண்ணுங்கள் குடியுங்கள்" என்கிறான்.

இப்போது சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மாதத்தை அடைந்த பின்பும் உடனடியாக நோன்பைத் துவக்காமல் ஒரு நீண்ட ஏறத்தாழ 10.30 முதல் 11 மணி நேரம் இடைவெளிக்கு பிறகே முதல் நோன்பின் உள்ளே நுழையும் ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். இறைவன் செய்துள்ள இந்த ஏற்பாட்டின் அர்த்தம் என்னவென்பதே நமது கேள்வி.

பிறைத் தெரிந்தவுடன் நோன்பு துவங்குவது கட்டளையாக இருந்தால் 'சவுதியில் பிறை தெரிந்து அவர்கள் நோன்பைத் துவங்கி விட்டார்கள். நாங்கள் பிறைப் பார்க்காமல் கடந்து விட்டதால் எங்களால் நோன்பை துவக்க முடியாது' என்று கீழ் திசை நாட்டுக்காரர்கள் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கும். ஒரு பகுதியில் பிறைத் தெரிந்த பின்பும் அதிலிருந்து 11 மணிநேரம் கழித்து நோன்பின் உள்ளே செல்லும் ஏற்பாட்டை இறைவன் செய்ததிலிருந்து பிறை தெரிநத பகுதியிலிருந்து அதற்கு கீழ் திசை நாட்டவர்கள் அனைவரும் அந்தப் பிறைக்குள்ளே வந்து விடுவார்கள். அவர்கள் ஸஹர் செய்து நோன்பை துவங்கலாம் என்ற ஹிக்மத் அதில் பொதிந்துள்ளதையே நாம் சுட்டிக்காட்டினோம். இந்த வாதத்துடன் நாம் வைத்துள்ள இதர ஆதாரங்களையும் வாதங்களையும் கவனமாக ஆராயுங்கள்.

ஸாலிஹல் உதைமீன் போன்ற நல்லறிஞர்கள் உட்பட இன்னும் பலரும் அந்தந்தப்பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்கலாம் என்ற கருத்தை முன் வைத்துள்ளார்கள் என்பதை நாமும் அறிவோம். யார் எந்த கருத்தை சொல்லியுள்ளார்கள் என்பது முக்கியமல்ல. எந்த ஆதார அடிப்படையில் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

அந்தந்தப்பகுதியில் தான் பிறை பார்க்க வேண்டும் அதுதான் இஸ்லாமிய சட்டம் என்று யாராவது வாதிட்டால் அவர்கள் அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.

நாமறிந்தவரை, இது தரப்பு வாதங்களையும் பரிசீலித்த வரை, அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பதை விட உலகெங்கும் ஒரே பிறைதான் என்ற வாதமும் அதற்கான ஆதாரங்களுமே தெளிவாகவும், ஏற்புடையதாகவும் உள்ளது. அதையே உங்கள் பார்வைக்கு வைத்து வருகிறோம்.

இனி சகோதரர் செய்யத் அவர்களின் சந்தேகத்தை எடுத்துக் கொள்வோம்.
இந்தியாவில் பிறையை தீர்மானிப்பதில் வருடந்தோரும் ஏற்படும் உள்நாட்டுக் குளறுபடிகளை ஒரு பக்கம் வைத்து விட்டு, அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்கள் என்ன வாதங்களை வைக்கிறார்கள் அது ஏற்புடையதாக உள்ளதா.. என்பதை காண்போம்.

அந்தந்தப்பகுதியில் பிறைப்பார்க்க வேண்டும் என்பவர்களின் இரண்டு வாதங்களே முக்கியமானதும் முழுமையானதுமாகும்.

1) உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் என்ற வசன அடிப்படையில் எல்லோரும் ஒன்றாக மாதத்தை அடைய முடியாது.
2) பிறை பார்த்து நோன்பு வையுங்கள் - பிறைப்பார்த்து நோன்பை விடுங்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளதால் நம் பகுதிகளில் நாம் பிறைப் பார்த்துக் கொள்வதே சரி.

இந்த இரண்டு வாதங்கள் தான் அவர்களுடையது. இதில் மாதத்தை அடைதல் என்பதன் அர்த்தம் என்னவென்பதை நாம் முந்தைய பதிவுகளில் விளக்கியுள்ளோம். எல்லோராலும் ஒரே நேரத்தில் அந்த மாதத்தை அடைய முடியாது - ஆனால் ஒரே நாளில் அடைந்து விட முடியும். முதல பிறை என்பது சிறிது நேரத்தில் மறைந்து விடக் கூடியதாகும். ஆனால் முதல் பிறையின் இரவு நீளமானதாகும். ஆம் முதல் பிறையை அறிந்தவர்கள் கூட அந்த இரவின் நீண்ட பொழுதை கழித்த பிறகுதான் நோன்பின் உள்ளே செல்கின்றாகள். எனவே அந்த வசனத்தை வைத்து 'உனக்கொரு பிறை - எனக்கொரு பிறை" என்று வாதிக்க முடியாது. அந்த வாதம் நிற்காது.

பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் ஹதீஸும் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. கண்களால் பார்க்க வேண்டும் என்றக் கட்டளையோ அந்தந்தப்பகுதியில் பார்க்க வேண்டும் என்றக் கட்டளையோ எந்த நபிமொழியிலும் வரவில்லை. மாதப்பிறப்பை அறிந்துக் கொள்ள பிறை அவ்வளவுதான். பிறையின் துவக்கத்தை எப்படி வேண்டுமானாலும் அறியலாம். நபி(ஸல்) காலத்தில் கண்களால் மட்டுமே பார்க்கும் சூழல் இருந்தது. அவர்கள் அப்படிப் பார்த்தார்கள் அவ்வளவுதான். உண்மையில் அவர்கள் பார்த்த பிறை இரண்டாகவோ மூன்றாகவோ கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை ஒன்று என்றே தீர்மானித்துக் கொள்வார்கள். அன்றைக்கு வேறு வழியில்லை.

ஆனால் இன்றைக்கு இறைவன் அநேக முன்னேற்பாடுகளை செய்துக் கொடுத்துள்ளான். மனிதன் சந்திரனில் குடியேறினால் கூட பூமித் தகவலில் பிறை பிறந்து விட்டதை அறிய முடியும். (சந்திரனில் குடியேறினால் நம் ஊர்காரர்கள் பரங்கிப்பேட்டையில் பிறைத் தெரிகிறதா என்று கேட்பார்களோ..அங்கு பரங்கிப்பேட்டைக்காரருக்கு பக்கத்தில் சென்னைக் காரர் இருந்தால் உங்கள் ஊர் தகவல் என்னைக் கட்டுப்படுத்தாது எனக்கு சென்னையிலிருந்து தகவல் வர வேண்டு்ம் என்று கூறுவாரோ..)

இறைவனின் பெரும் கொடையாக வளர்ந்து நிற்கும் அறிவியலை, அதன் ஆணித்தரமான நிரூபனங்களை கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு இஸ்லாம் பிற்போக்கானது அல்ல.

நாம் மேற்சொன்ன இரண்டு வாதங்களைத் தவிர அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்களிடம் வேறெந்த வாதமும் இல்லை.

அந்தந்தப்பகுதியில் தான் பிறைப்பார்க்க வேண்டும் என்போர் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டும் வரும் தகவலை ஏற்று (உலகெங்கும் ஒரே பிறை என்ற கோட்பாட்டை) ஒப்புக் கொள்கிறார்கள்.

பெருநாள் - அரஃபா - லைலதுல் கதர் என்று அநேக பிரச்சனைகளை உள்ளடக்கியதாக 'அந்தந்தப்பகுதி பிறை" வாதம் பலவீனப்பட்டுப் போய் உள்ளது.

28 நாட்களில் மாதம் முடியும் தெரியுமா..?

அந்தந்தப்பகுதியில் பிறைப்பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தால் சில நேரம் 28 நாட்களில் மாதத்தை முடித்துக் கொள்ளும் நிலையும் வரும்.
எப்படி? (ஒன்று - .இரண்டு - மூன்று நாட்கள் வித்தியாசத்தில் கூட தமிழகத்தில் பிறை எடுக்கப்படுகின்றது என்பதை கவனத்தில் வைத்துக் கொண்டு தொடருங்கள்.)

ஷஃபானை 30 ஆக பூர்த்தி செய்து சென்னை, ரமளானின் முதல் பிறையை அறிவிக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். கடலூரிலிருப்பவர்கள் 'எங்களுக்கு மேகமூட்டத்தால் பிறை தெரியவில்லை அதனால் நாங்கள் நாளை முப்பதை பூர்த்தி செய்தே பிறையை எடுப்போம்" என்று கூறி சென்னையின் தகவலை புறக்கணித்து விடுகிறார்கள். இப்போது சென்னை முதல் பிறையில் இருக்கும் போது கடலூர் கடைசி நாளான முப்பதிலும், சென்னை இரண்டாம் நோன்பிலிருக்கும் போது கடலூர் முதல் நோன்பிலும் இருக்கிறார்கள்.

இப்படியே நாட்கள் நகர்ந்து அந்த மாதம் 29ல் முடிந்து சென்னையில் பிறைத் தெரிகின்றது. அதே நாள் எவ்வித மேகமூட்டமுமில்லாமல் கடலூரிலும் பிறைத் தெரிகின்றது என்று வையுங்கள். இப்போ கடலூருக்கு கிடைத்த நோன்புகள் எத்தனை. 28 மட்டுமே.

மாதம் என்பது சிலபோது 30ஆகவும் சிலபோது 29ஆகவும் இருக்கும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். பிறை மாதங்கள் 28ஆகவோ 31ஆகவோ முடிய வாய்ப்பே இல்லாத நிலையில் வரும் ஆதாரப்பூர்வமான தகவலை புறக்கணித்த கடலூர்வாசிகள் அந்த மாதத்தை 28ல் முடித்து சாதனைப் படைப்பார்கள்.

தனித்தனிப் பிறையில் இத்தகைய முரண்பாடுகள் அநேகம் உள்ளது. (நாம் கூறியுள்ள இந்த உதாரணத்தை ஒன்றுக்கு பலமுறை படியுங்கள். 28ஆக ரமளான் குறைய வாய்ப்புள்ள தனித் தனிப்பிறை பற்றிய சிந்தனை விபரீதமானது என்பது புரியும்.

இதுவரை வந்துள்ள பதிவுகள் அனைத்தையும் வரிசையாக படித்து விட்டு தனிப்பிறையா - ஒரேப் பிறையா என்பதை முடிவு செய்யுங்கள் ( நேர்வழிக்காட்ட அல்லாஹ் போதுமானவன்)

Thursday, August 14, 2008

மனைவியைக் கொல்

பாகம் 1, அத்தியாயம் 8, எண் 423 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். \'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?\' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். (\"அது கூடாது! மாறாக இருவரும் லிஆன் செய்ய வேண்டும்\" என்று நபி(ஸல்) கூறியதும்) அவ்விருவரும் பள்ளியிலேயே லிஆன் செய்தனர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். \

இது எனக்கு சரியாகப்படவில்லை. ஏன் இப்படியுள்ளது என்பதை விளக்குங்கள்.

Name: abdul azeez
email: azeez1729@...
Location: abudhabi
Subject: kelvi

இறைவன் அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளனாக இருக்கிறான். அவன் வகுத்த சட்டங்கள் சில நேரம் நமது சிற்றறிவிற்கு சரியாக படாவிட்டாலும் கூட அவன் வகுத்துள்ள சட்டங்கள் குறைவில்லாததுதான்.

நமது அறிவின் தரம் கூடும் போது அந்த சட்டங்களில் விளக்கங்கள் நமக்கு கிடைக்கும். அதுவரை நமது தேடலை நாம் தொடரத்தான் வேண்டும்.

ஆண் பெண்ணுக்கு மத்தியிலான உறவுமுறையை - பிரிவை தீர்மானிக்கும் எந்த சட்டமாக இருந்தாலும் அதில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு இருக்கத்தான் செய்யும். இதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றுள்ளோம்.

லிஆனை சிந்திக்கும் போதும் அதில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதை உணரலாம்.

ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை அந்தப் பெண்ணின் கணவன் நேரடியாக பார்த்து விடுகிறான். இப்போது அவனது ரத்தம் கொதிக்கும். கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்துக்கு அவன் ஆளாவான். இந்நிலையில் தண்டனைக் கொடுக்கும் சட்டத்தை அவன் கையில் கொடுத்தால் உடனடியாக அந்கு ஒரு அல்லது இரு கொலை நடக்கும். அவன் தரப்பிலும் ரோஷமுள்ளவர்கள் தரப்பிலும் இது நியாயம் தான் என்றாலும், இஸ்லாம் இத்தகைய உணர்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு சட்டம் வகுக்காது. வகுக்கப்படும் சட்டங்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதிலும் இஸ்லாம் அக்கறைக் கொள்ளும்.

விபச்சாரம் செய்யும் மனைவியை கணவன் கொள்ளலாம் என்ற சட்டத்தை இஸ்லாம் கணவன் கரங்களில் கொடுத்திருந்தால் கணவனால் கொல்லப்படும் மனைவிகள் அனைவருமே விபச்சாரிகளாக சித்தரிக்கப்பட்டு விடுவார்கள். ஆம், பல குடும்பங்களில் கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் மத்தியில் தீராத சண்டைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம். பெண்கள் வாய் விட்டு கத்தி தீர்த்து விடுவார்கள். ஆண்களால் அப்படி முடியாது. மனைவி கணவனை வாயால் அடித்தால், கணவன் மனைவியை கையால் அடிப்பான்.

போதை - வரதட்சனை - மாமியார் மருமகள்கள் சண்டைப் பிரச்சனை போன்றவற்றால் முரட்டு கணவன்மார்களால் பெண்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் வரதட்சனைப் போன்ற காரணத்துக்காக குடும்பத்தார் சேர்ந்து தன் வீட்டுக்கு வந்த மருமகளை தீர்த்துக் கட்டுகிறார்கள்.

கணவனின் முரட்டு, மடத்தனமான சுபாவத்தை எதிர்கொள்ள முடியாத பெண்கள் தங்கள் உயிரை விடுகிறார்கள். இது பரவலான நடைமுறையாகிவிட்டதை நாம் பார்க்கிறோம். பெண்ணை இழந்தவர்கள் நீதித் தேடி நீதிமன்றங்கள் செல்கிறார்கள்.

கணவனுக்கென்று இருக்கும் உரிமைகளை அவன் மீறும்போது தான் அங்கு நீதி தலையிடும். அவன் உரிமைக்குட்பட்டதை அவன் செய்யும் போது அதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. இந்த அடிப்படையை மனதில் நிறுத்திக் கொண்டு தொடருங்கள்.

விபச்சாரும் செய்யும் பெண்ணை கொல்லும் உரிமையை கணவன் கையில் கொடுத்தால், வரதட்சனைப் போன்ற பொருளாதாரத்திற்காக கொலைச் செய்யப்படும் மனைவி விபச்சாரத்திற்காகத்தான் கொல்லப்பட்டாள் என்று ஆகிவிடும்.

போதையால் கணவன் மனைவியை கொலை செய்தால் விபச்சாரத்திற்காக கொலை செய்தேன் என்று சொல்லி தப்பிக்க முடியும்.

இன்னப்பிற ஏதோ காரணத்துக்காக சாகடிக்கப்படும் பெண்கள் அனைவரும் கணவனின் வாக்கு மூலத்தால் விபச்சாரிகளாவார்கள். உயிரை விட்டது மட்டுமின்றி சமூகத்தில் இழிபெயரும் நிலைக்கும். நியாயம் கிடைக்க வழியில்லாமல் போகும். இன்னும் நாம் அறியாத பல நுணுக்கங்களுக்காக கூட இறைவன் கணவர்கள் கைகளில் அந்த சட்டத்தை கொடுக்காமல் தடுத்திருக்கலாம்.

பெண்களுக்கு சாதகமா..?

விபச்சாரம் செய்யும் பெண் கணவனால் நேரடியாக பிடிக்கப்பட்ட பிறகும் அவளை தண்டிக்காமலிருப்பது பெண்களுக்கு சாதகமாக - தவற வழி வகுப்பதாக ஆகாதா..? என்ற சிந்தனை எழலாம்.

ஒரு வகையில் சிந்தித்துப் பார்த்தால் மரண தண்டனை கொடுத்து கதையை முடிப்பதை விட தன்னை தானே சபித்துக் கொண்டு சமுதாய மத்தியில் இழி நிலையில் வாழ்வது அதை விட பெரிய தண்டனையாகும். தன் மனைவி விபச்சாரம் செய்துவிட்டால் என்று கணவன் குற்றம் சுமத்துகிறான். அதை நிரூபிக்க அவனிடம் நான்கு சாட்சிகள் இல்லை. சாட்சிகளில்லாத நிலையில் குற்றத்தை நிரூபிக்க முடியாது. உலக நீதிமன்றங்கள் என்றால் சாட்சிகள் இல்லாததால் கணவனை எச்சரித்து அவனோடு மனைவி சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கும். உண்மையில் மனைவி தவறியதை நேரடியாக கண்ட கணவன் நீதிமன்ற உத்திரவால் மீண்டும் அவளோடு சேர்ந்து வாழ முடியுமா...? அது பல்வேறு சிக்கல்களை இருவருக்கும் மத்தியில் ஏற்படுத்தி விடும். அதனால் தான் இஸ்லாம் மாற்று வழியை முன் வைத்துள்ளது.

சாட்சிகள் இல்லாத நிலையில் கணவனால் குற்றம் சுமத்தப்பட்டால் அவ்விருவரும் மக்கள் மன்றத்தில் தன்னைத் தானே சபித்துக் கொண்டு கணவன் - மனைவி உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டியதுதான். இது அவர்களிருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடியாத அளவிற்குள்ள நிரந்தர பிரிவாகும்.

இதில் யாரொருவர் பொய் சொல்லி இருந்தாலும் அவர்கள் இறைவனிடம் குற்றவாளியாகி நிற்பார்கள். இந்த விபரம் குர்ஆனில் 24வது அத்தியாயத்தின் 5 முதல் 9 வரையுள்ள வசனங்களில் காணலாம்.

இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில்,

இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்களும் ஊரிலுள்ள பொதுஜமாஅத்கள் முன்னிலையில் தன்னை சாபமிட்டுக் கொண்டு பிரியலாம்.

நான்கு முறை 'தாம் உண்மைச் சொல்வதாக சத்தியமும், ஐந்தாம் முறை தம் மீது தாமே சாபமிட்டுக் கொள்வது என்பதும் அத்துனை சுலபமான விஷயமல்ல. ஒரு பெரும் சக்தியை நம்பி அதற்கு கட்டுப்படும் மனநிலையைப் பெற்றவர்கள் இதில் விளையாட மாட்டார்கள் என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது வங்கிக்கணக்கில் ஒரு தொகையுள்ளது. அது எனது வங்கிக்கணக்கிற்காக வட்டித்தொகையாகும். நான் அத்தொகையை பொது காரியங்களுக்காக பயன்படுத்தலாமா? (உ.தா., சாலைவிளக்குகள். கழிவரை போன்றவைகள்).
Name: farhan
email: farhan88lk@...
Location:
Subject: Question

வங்கி வட்டி குறித்தும், அந்த தொகையை என்ன செய்யலாம் என்பது குறித்தும் ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளோம். கீழுள்ள லிங்கை சொடுக்குங்கள்.
வங்கி வட்டி முஸ்லிம்கள்
இந்த வலைப்பூவிலும் வட்டி குறித்து பதிலளிக்கப்பட்டுள்ளது. பார்வையிடவும்.

பெர்மூடா பிளாக்ஹோல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
நாஸாவின் வெப்ஸைட்டில் மேய்ந்த போது அன்டார்டிகா கடலில் உள்ள பெர்முடா தீவுக்கருகில் பெர்மூடா பிளாக்ஹோல் என அழைக்கப்படும் ஒரு மர்ம இடம் இருப்பதாகவும் அந்த குறிப்பிட்ட வளையத்துக்குள் நீர்வழி மற்றும் வான்வழி செல்லும் கப்பல் மற்றும் விமானங்கள் மாயமாய் மறைவதாகவும் அதுபற்றிய ஒரு விபரமும் கிடைப்பதில்லை என்றும் விஞ்ஞாணிகளுக்கும் இது புதிராக இருப்பதாக அறிந்தேன். இது உண்மையாக இருக்குமா இது பற்றிய இஸ்லாமிய குறிப்புகள் அடையாளங்கள் உண்டா விளக்கவும்

Name: முஹம்மது இக்பால்
email: mimhouse@...
Location: Sharjah - U.A.E
Subject: Kelvi

மது - சம்பளம்

அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் இலங்கையைச்சேர்ந்தவன். நான் தங்களது இணையதளத்தை பார்த்துவருகிறேன். இது நமது சமுதாய மக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டும் இடமாக விளங்கிவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

நான் தற்பொழுது கத்தாரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கணக்காளராக (Accountant) பணியாற்றி வருகிறேன். என்னுடைய நிறுவனத்தின் மற்றொரு கிளை மது வகைகளை மேல் நாட்டவருக்கு மட்டும் விற்பனை செய்து வருகிது. நான் எனது நிருவனத்தின் கணக்கு வழக்கு பணிகளை மட்டும் செய்து வருகிறேன். மதுக்களை விற்பனை செய்து வரும் கிளை நிருவனத்தின் கணக்குகளை பார்ப்பது கிடையாது. இருந்த போதும் ஒரு சில பறிமாற்றங்கள் இந்த இரு நிறுவனத்திற்குள் நடந்து வருகின்றது ஒவ்வொரு மாதமும். ஏனெனில் இரண்டு நிருவனத்தினுடைய உரிமையாளர் ஒருவரே. நான் இந்த இரு நிறுவனத்திற்குமான பணியாளர்களது மாத சம்பளம் சம்மந்தமான பணிகளை செய்து வருகிறேன். அனைத்து பணியாளர்களது மாத சம்பளமும் மது விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்தே வழங்கப்படுகின்றது. ரியல் எஸ்டேட் நிருவனம் தான் "பாரில்" பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும். அதுவே அப்பணியாளர்களுக்கு அவர்களது சம்பளத்தைவிட அதிகமாக பெற கிடைக்கும்.
நான் கத்தார் வந்த பிறகு எனக்கு இவ்வகையான நிருவனங்களில் பணியாற்றுவதற்கு துளிகூட விருப்பமில்லை. நான் ஒரு முஸ்லிமாக, இந்தவகையான நிருவனத்திலிருந்து பெறப்படும் சம்பளம் "கூடுமா (Halaal)" (அ) கூடாதா (Haraam)". நான் தற்பொழுது குழப்பமான சூழலில் இருந்து வருகிறேன். எனக்கு இந்த விஷயத்தில் ஒரு தீர்க்கமான விளக்கம் தேவை. தங்களது பதில் என்னைப்போன்றுள்ள மற்றவர்களுக்கும் பயனளிப்பதாக இருக்கும்.
Name: Ali Akbar
email: aliakbar.ma@....
Location: Qatar
Subject: kelvi

Thursday, July 24, 2008

மூன்று கேள்விகள்

1.ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது சொத்து முழுவதையும் தருமம் செய்யவோ அல்லது தனது பிள்ளைகளுக்கு மத்தியில் பகிர்ந்தளிப்பதற்கோ குர்ஆன் ஹதீசில் அனுமதியுன்டா? பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிப்பதாயின் சமமாகவா பகிர வேண்டும்.

ஒருவருடைய சொத்துக்கு அவர் மரணிக்கும் வரை அவரே முழுப் பொறுப்புதாரியாகின்றார். சொத்துக்குறித்த விபரங்களை ஜக்காத் சட்டங்கள் தொடரில் விரிவாக விளக்கியுள்ளோம். http://www.idhuthanislam.com/zakaath/zakaathindex.htm

சொத்துக்கு முதலாளியான அவர் தமது சொத்தை தான தர்மம் செய்யவோ பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கவோ, யாருக்கும் எதையும் கொடுக்காமல் தனது வாரிசுகளுக்கு விட்டு செல்லவோ உரிமைப்படைத்தவராவார் ஆனாலும் இஸ்லாம் பொருளாதாரத்தின் மீது ஜகாத்தை விதித்துள்ளது. தானதர்மங்களை ஊக்குவித்துள்ளது.

அதிக இறை நம்பிக்கையுள்ள ஒருவர் தமது சொத்து முழுவதையும் இறைவழியில் தானதர்மம் செய்து விட அனுமதியுண்டா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம்.

அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 25:67)

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அபூ ஹுரைரா(ரலி) )பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2748

ஆரோக்யம் - பொருளாதாரத்தின் மீது ஆசை - அதே சமயம் வறுமைக் குறித்த பயம் இவை ஒன்று சேர இருக்கும் நிலையில் இறைவழியில் செலவு செய்ய வேண்டும் அதுவே மகத்தான் செலவீடாகும் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது. எனவே வயதான காலம் வரட்டும் என்று காத்திராமல் ஒருவர் தனது வாலிப பருவத்தில் அவருடைய சொத்தை இறை வழியில் செலவு செய்யலாம் - செய்ய வேண்டும்.

நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து கொள்ள முடியாது" (திருக்குர்ஆன் 03:92) என்னும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் வேதத்தில், 'நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது' என்று கூறுகிறான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது 'பைருஹா' (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணிரை அருந்துவது வழக்கம் - எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ளுங்கள்" என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே! அது லாபம் தரும் செல்வமாயிற்றே. அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகிறோம். உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அதைத் தம் இரத்த பந்தமுள்ள உறவினர்களுக்கு தர்மம் செய்துவிட்டார்கள். (அனஸ்(ரலி) பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2758

பெருமதிப்பு மிக்க, நீர் நிலைகள் உள்ள தனது சொத்தை இறைத் திருப்தியைப் பெருவதற்காக தனது இரத்த பந்த உறவினர்களுக்கு (இவர்கள் சொத்தின் வாரிசுதாரர்களல்ல) இறைத்தூதரின் வழிகாட்டுதல் படி அபுதல்ஹா(ரலி) அவர்கள் பகிர்ந்தளிக்கிறார்கள்.

இதுபோன்ற ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் தனது சொத்தை தன் விருப்படி செலவிடலாம் என்பது விளங்குகின்றது. ஆனாலும் ஒருவர் தனது சொத்துக்கு வாரிசுதாரர் இருக்கும் நிலையில் தனக்கு சொந்தமான முழு சொத்தையும் இறைவழியில் செலவிட நபி(ஸல்) அனுமதிக்கவில்லை.

தனக்கு ஒரேயொரு மகள் உள்ள நிலையில் அவரும் செல்வ செழிப்புடன் உள்ள நிலையில் தனது சொத்தை இறைவழியில் செலவு செய்வது பற்றிய தீர்ப்பைஸஅது பின் அபீவக்காஸ்(ரலி) கேட்கிறார்கள்.

'இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்" என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்" என்றே பதிலளித்தார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)" என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை. (புகாரி பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2742 )

பல நூல்களில் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது. திர்மிதியில வரும் செய்தியில் தம் மகள் செல்வநிலையில் இருக்கிறார் என்ற கூடுதல் விபரம் கூறப்பட்டுள்ளது.

ஒருவன் தன் சொத்தில் தன் வாரிசுக்கு கிடைக்க வேண்டிய பங்கை கிடைக்காமல் செய்து இழப்புக்குள்ளாக்கி விட்டால் அல்லாஹ் தீர்ப்பு நாளில் சுவனத்தில் அவனுக்குரிய பங்கை இழக்க செய்து விடுவான் என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அனஸ்(ரலி) அறிவிக்கும் இந்த செய்தி இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் சட்டங்கள்.

  • ஒருவர் தம் சொத்துக்கு முழு உரிமைப் படைத்தவராவார்
  • தள்ளாத காலம் வரை காத்திராமல் வாலிபக் காலங்களில் இறைவழியில் செலவு செய்ய வேண்டும்.
  • செலவு செய்கிறேன் என்று குடும்பத்தாருக்கு இழப்பு ஏற்படுத்தி விடக் கூடாது. அவர்கள் செல்வ நிலையில் இருந்தாலும் சரியே.
  • மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தையோ அல்லது அதற்கும் குறைவாகவோ தான் வஸியத் செய்யலாம்.
  • செலவு செய்ய முடிவு எடுத்து விட்ட நிலையில் சொத்துக்கு வாரிசுதாரராகாத பிற உறவினர்களுக்கு, சொந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • சொத்து சொர்க்கத்தில் நமது இடத்தை தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை.

அடுத்து சொத்துதாரி உயிருடன் இருக்கும் போது தன் குழந்தைகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து பார்ப்போம்.

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18:46)

அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா (26:88)

ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் போது இயற்கையாகவே ஒரு குழந்தை மீது அன்பு அதிகமாக இருக்கத்தான் செய்யும். இதன் காரணத்தால் பிற குழந்தைகளை விட குறிப்பிட்ட குழந்தைக்கு எதையும் அதிகமாக கொடுக்கும் மனநிலை வரும்.

செலவிடுதல்.

குழந்தைகளுக்கு செலவிடுவதில் யாரொருவரும் விதிவிலக்கில்லாமல் வித்தியாசப்படவே செய்வர். பெற்றப்பிள்ளைகளுக்கு செலவிடப்படும் தொகை வித்தியாசமாக இருக்கக் கூடாது என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. அது கட்டாயம் வித்தியாசப்படவே செய்யும். சில குடும்பங்களில் ஆண்குழந்தைகளின் படிப்புக்கும், பிற குடும்பங்களில் பெண் குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கும் செலவிடப்படும் தொகையைப் பார்த்தால் பெரும் வித்தியாசம் இருக்கும். இது பிள்ளைகளின் தேவை அறிந்து செய்ய வேண்டிய செலவீனமாகும். இது தந்தை மீதான கடமை. இதில் வித்தியாசம் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்லவில்லை. "தேவையே" இங்கு பிரதானமாக பார்க்கப்படுவதால் இந்த வித்தியாசத்தால் சொத்துக்குரியவர் குற்றவாளியாக மாட்டார்.

கொடுத்தல்.

செலவிடுவதை கடந்து குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்காக கொடுக்கப்படும் தொகை, அல்லது சொத்து போன்றவற்றில் அவர்களைக் கலந்துக் கொள்ளாமல் பாராபட்சம் காட்டக் கூடாது. இது குழந்தைகளுக்கு மத்தியில் வீண் மனதாபத்தையும், சண்டை சச்சரவையும் ஏற்படுத்தி விடும். "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரியாவீர்கள், உங்கள் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்" என்ற நபிமொழியை கவனத்தில் கொண்டு தந்தை நடந்துக் கொள்வதே அறிவுடமையாகும்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மேடையின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே* நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். புகாரி பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2587

இந்த நபிமொழியிலிருந்து பெறப்படும் உண்மை 'கொடுக்கும் விஷயத்தில் குழந்தைகளுக்கு மத்தியில் நீதியாக நடந்துக் கொள்ள வேண்டும்" என்பதாகும்.
பல குடும்பங்களில் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் பிரச்சனைகள் வெடிப்பதற்கு காரணமே தாய் தந்தையின் பாராபட்ச பொருளாதார அன்பளிப்புகளே.

முஸ்லிம் குடும்ப தலைவர்கள், தலைவிகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டிய ஒன்று குழந்தைகளுக்கு மத்தியில் பாராபட்சமாக நடக்காமலிருப்பதாகும்.

தந்தை மரணித்தப்பின் வாரிசுரிமை பெறுபவர்கள் என்பதும், அவர் உயிருடன் இருக்கும் போது தனது சொத்தை பகிர்வது என்பதும் வெவ்வேறாகும். வாரிசுரிமையுள்ளவர்களுக்கு சொத்துதாரர் உயிருடன் இருக்கும் போது எதையும் கொடுக்கக் கூடாது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை.

2.சொத்து முழுவதையும் ஒருவர் பகிர்ந்து அளித்து விட்டு மரணித்துவிட்டார். இது தெளிவான பிரகு மரணித்தவரின் வாரிசுகள் தமது பங்குகளை குர்ஆன் சட்டப்படி மீளப் பகிர்ந்துகொள்ள வேண்டுமா அல்லது அது அவர்களுக்கு குற்றமில்லையா?

தனது சொத்து முழுவதையும் சொத்துக்கு வாரிசிலலாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடாது. மரண சாசனம் செய்யக் கூடாது என்பதை நாம் முன்னர் கண்டோம்.

சொத்துக்கு வாரிசாக முடியாத பிறருக்கு ஒருவர் தனது சொத்து முழுவதையும் எழுதி விட்டு மரணிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அந்த சொத்துக்கு வாரிசாகக் கூடியவர்கள் இஸ்லாமிய நீதி மன்றத்தை அணுகலாம். அணுகினால் அவர்களுக்கு வெற்றிக் கிடைக்கும் இதற்கான ஆதாரத்தை கண்டு விட்டு தொடர்வோம்.

ஆறு அடிமைகளைப் பெற்றிருந்த ஒரு நபித்தோழர் அந்த அடிமைகள் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத நிலையில் மரணிக்கும் போது ஆறு அடிமைகளையும் விடுதலை செய்து விட்டு மரணித்துவிட்டார். இறந்தவரின் வாரிசுதாரர்கள் இதுகுறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது அந்த ஆறு அடிமைகளையும் அழைத்து இருவர் இருவராக மூன்று அணியாக அவர்களைப் பிரித்து சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். பெயர் வந்த அணியினரை விடுதலை செய்து நால்வரை வாரிசுதாரர்களுக்கு உடைமையாக்கி விட்டார்கள். (இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அறிவிக்கும் இச் செய்தி முஸ்லிம், அபுதாவூத் போன்ற நூல்களில் வருகின்றது.

வேறெந்த சொத்தையும் வைத்திருக்காத நிலையில் இருக்கும் சொத்தையும் பிறருக்கு வழங்கி மரணித்த ஒரு நபித்தோழரின் செயலை நபி(ஸல்) சரிகாணவில்லை. மரணித்தவரின் குடும்பத்தார் எதுவுமின்றி நிற்கும் நிலையில் அனைத்தையும் தானம் செய்யக் கூடாது என்பதை இந்த நபிமொழியிலி்ருந்து விளங்கலாம். மூன்றில் ஒருபங்கு அதாவது 33 சதவிகிதத்திற்கு அதிகமாக ஒருவர் பிறருக்கு கொடுத்து விட்டோ அல்லது உயில் எழுதி விட்டோ மரணித்தார் என்றால் அந்த 33 சதவிகிதத்திற்கு அதிகமானவற்றை மீட்க நாம் நடவடிக்கை எடுக்கலாம்.

குர்ஆனின் அறிவைப் பெற்று அதன்படியோ அல்லது குர்ஆனின் அறிவு இல்லாமலோ ஒருவர் தனது பிள்ளைகளுக்கு தான் உயிருடன் இருக்கும் போதே கூடுதல் குறைவாக தனது சொத்தை பிரிந்து அவரவர் பெயரில் எழுதி வைத்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மரணித்த பிறகு அவர் எழுதி வைத்த சொத்துக்களை மீளாய்வு செய்து - ஒன்று திரட்டி மீண்டும் குர்ஆன் சொல்லும்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அது தவறும் கூட.

வாரிசுரிமை, பாகப்பிரிவினை பற்றி பேசும் குர்ஆன் வசனங்கள் அனைத்தும் ஒரு சட்டத்தை நமக்கு தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. மரணித்தவர் விட்டு சென்ற சொத்தில் அவரது கடன், மரண சாசனம் (உயில்) போக மீதியுள்ளவற்றில் தான் பிறருக்கு உரிமையுள்ளது என்று.

என்றைக்கு தனது வாரிசுகள் பெயரில் சொத்து மாற்றப்படுகின்றதோ அன்று முதல் அந்த சொத்துக்குரியவர் அந்த வாரிசுதானே தவிர மாற்றி கொடுத்தவருக்கும் அந்த சொத்துக்கும் எந்த உரிமையுமில்லை. மாற்றிக் கொடுத்தவருக்கே உரிமையில்லை எனும் போது பிறர் அந்த சொத்து குறித்து நடவடிக்கை எடுப்பது என்பது இயலாத காரியமாகும்.

நான்கு அல்லது மூன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ள ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போது அந்த குழந்தைகளுக்கு மத்தியில் வித்தியாசத்தில் தனது சொத்தை பிரிக்கிறார். மகன்களுக்கு அதிகமாகவும், பெண்பிள்ளைகளுக்கு குறைவாகவும், அல்லது பெண் பிள்ளைகளுக்கு அதிகமாகவும், ஆண்பிள்ளைகளுக்கு குறைவாகவும் பிரித்து அவர்கள் பெயரில் சொத்தை மாற்றி எழுதி பதிவு செய்து விடுகின்றார். அவரது மரணத்திற்கு பின் குழந்தைகள் இதை பாராபட்சமாக கருதுகின்றது. இப்போது அந்த பிள்ளைகளாக வேண்டுமானால் ஒன்று சேர்ந்து பேசி தனது சொத்துக்களை விரும்பியவாறு பிரித்துக் கொள்ளலாமே தவிர தந்தை எழுதி வைத்தது செல்லாது அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.

ஒருவேளை பிள்ளைகளுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால், தன் தந்தை மூலம் தமக்கு கிடைத்த சொத்தை மீண்டும் பகிர்ந்தளிப்பதற்கு நான் உடன்பட மாட்டேன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவர் குற்றவாளியுமல்ல. அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் முடியாது.

3.சூரதுன் நிசாவில் வாரிசுரிமைச் சட்டங்கள் சொல்லிவிட்டு 14 ஆவது வசனத்தில் இதை மீருபவர்கள் நிரந்தர நரக வாதிகள் என்று கொல்கிறது இதனை நாம் எப்படி தெளிவாக விளங்குவது.

Name: Inam Ul Haq

email: inam. mail2me@....

Location: Sri Lanka

Subject: Kelvi

பாகப்பிரிவினை பற்றிப் பேசும் அனைத்து வசனங்களும் மரணித்தவருக்கு பிறகு அந்த சொத்தை பிரிப்பவர்கள் பற்றியே பேசுகின்றது. அவ்வாறு பிரிப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய கடமை 1) மரணித்தவரின் கடன், 2) அவர் எழுதி வைத்துள்ள மரண சாசனம் (உயில்) இவை இரண்டும் போகவே பிற சொத்தில் பாகபிரிவினை. இது இறைவனின் வரம்பாகும். இதை மீறுபவர்கள்தான் தண்டிக்கப்படுவார்கள் என்கிறான் இறைவன். ஏற்கனவே பிரித்து எழுதப்பட்ட சொத்திற்கும், இறைவனின் இந்த எச்சரிக்கைக்கும் எந்த சம்மந்தமுமில்லை.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

குளிக்கும் போது

கடைமையான குளிப்பை குளிக்கும் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன?

Name: vaheeda
email: vaheedama@.....
Location:
Subject: Kelvi

மாதவிடாய், கணவனுடன் இல்லறத்தில் சேருதல், தூக்கத்தில் உச்சத்தை அடைதல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு குளிப்பு கடமையாகின்றது. கடமையான குளிப்பை நிறைவேற்றும் பெண்களுக்கு,

ஒளு.

குளிக்கத்துவங்குமுன் ஒளு செய்துக் கொள்ள வேண்டும்.

'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 248 )

'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 249 )

ஆரம்பமாக கைகளில் தண்ணீர் ஊற்றி கைகளை கழுவி பிறகு ஒளு செய்து, அதன் பின் தலையின் அடிப்பாகம் - அதாவது முடியின் வேர்களும் தோல் பகுதியும் - நனையும் விதத்தில் தண்ணீர் செலுத்தி விட்டு பிறகு உடம்பி்ன் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

தலைமுடியை அவிழ்க்க தேவையில்லை.

பொதுவாகவே பெண்களுக்கு தலையில் முடி அதிகமாக இருக்கும். பல பெண்கள் தலைமுடியில் கூடுதல் கவனம் செலுத்தி அதை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்த்து பாதுகாப்பார்கள். இத்தகைய பெண்கள் கடமையான குளிப்பு குளிக்கும் போது சிரமத்துக்கு ஆளாவார்கள். ஏனெனில் தலைமுடியை அவிழ்த்து அதை முழுவதும் கழுவி குளித்து காயவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். உண்மையில் முஸ்லிம் பெண்கள் கடமையான குளிப்பை குளிக்கும் போது தலை முடி முழுவதையும் நனைக்க வேண்டுமா...? என்று பார்த்தால் இஸ்லாம் இலகுவான மார்க்கம் பெண்களுக்கு அத்தகைய கட்டளையை இடவில்லை. கீழ் வரும் ஹதீஸை பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நான் என் தலைமுடியை சடைப் போட்டு பிண்ணிக் கொள்கிறேன். கடமையான குளிப்பிற்காக அதை அவிழ்த்து விட்டு குளிக்க வேண்டுமா என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'வேண்டாம்' தண்ணீரை உன் தலையில் மூன்று முறை ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். பின்னர் உன் உடல் நனையும் படி தண்ணீரை ஊற்றிக் கொள் இவ்வாறு செய்து விட்டால் நீ சுத்தமாகி விடுவாய் என்றார்கள். (கேட்டறிந்த உம்முஸலாமா என்ற நபித்தோழியரின் இந்த அறிவிப்பு பல நூல்களில் வருகின்றது. திர்மிதி 98)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=16&ID=19590&SearchText=اشد%20ضفر%20رأسى%20&SearchType=root&Scope=all&Offset=0&SearchLevel=QBE (இப்னுமாஜா)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=14&ID=14134&SearchText=اشد%20ضفر%20رأسى%20&SearchType=root&Scope=all&Offset=0&SearchLevel=QBE (அபூதாவூத்)

கடமையான குளிப்பு விஷயத்தில் பெண்கள் மிகுந்த சிரத்தைக்குள்ளாக வேண்டியதில்லை. நாம் ஆரம்பத்தில் புகாரியிலிருந்து எடுத்துக் காட்டிய ஹதீஸில் "நபி(ஸல்) தண்ணீரில் கைகளை நனைத்து அதை தலையின் அடிபாகத்திற்கு செலுத்துவார்கள்" என்று வந்துள்ளது. முடிகாம்புகளும் தலையின் தோல்பகுதியும் நனையும் விதத்தில் இவ்வாறு செய்துள்ளார்கள். அதுதான் முக்கியமே தவிர முடி முழுதும் நனைய வேண்டும் என்பது சட்டமல்ல என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீட்டு இல்லை.

குளிப்பு கடமையான பெண்கள் முடி முழுவதையும் நனைத்து - கழுவியாக வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கம் பேசுபவர்களில் பலரும் இப்படி கூறிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். குளிப்பு கடமைப்பற்றி சட்டம் கேட்கும் போதும், பெண்களே பெண்களுக்கு இது பற்றி கூறும் போதும் முடி முழுவதையும் கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். நபி(ஸல்) அவ்வாறுதான் கட்டளையிட்டுள்ளார்கள் என்பது இவர்களின் வாதம்.

இதற்காக எடுத்துக்காட்டப்படும் ஹதீஸ்.

ஒவ்வொரு முடியிலும் தொடக்கு உண்டு. அதனால் முடிகளைக் கழுவி உடம்பை சுத்தம் செய்யுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=16&ID=20016&SearchText=كل%20شعرة%20جنابة&SearchType=root&Scope=all&Offset=0&SearchLevel=QBE (இப்னுமாஜா - 589)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=14&ID=13146&SearchText=كل%20شعرة%20جنابة&SearchType=root&Scope=all&Offset=20&SearchLevel=QBE (அபூதாவூத் - 216)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=2&ID=2566&SearchText=كل%20شعرة%20جنابة&SearchType=root&Scope=all&Offset=20&SearchLevel=QBE (திர்மிதி - 99)

திர்மிதி - அபூதாவூத் - இப்னுமாஜா ஆகிய மூன்று நூட்களிலும் இன்னும் பல வழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் 'ஹாரிஸ் இப்னு வஜீஹ்' என்பவர் வருகிறார். அவர் பலவீனமானவர், இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கதல்ல என்று புகாரி இமாம் உட்பட பலர் கூறியுள்ளார்கள். முடியில் தொடக்கு உண்டு என்று வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை. எனவே முடி முழுவதும் நனையும் விதத்தில் குளிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை.

தலைப்பகுதி, முடிகாம்பு நனையும விதத்தில் குளித்தாலே போதும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இகாமத் உண்டா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஆண்கள் தனியாக தொழும்போது பாங்கும் இகாமத்தும் சொல்லி தொழவேன்டும் என்ற ஹதீஸ் அறிவேன். இது பெண்களுக்கும் பொருந்துமா..?

Name: முஹம்மது இக்பால்
email: mimhouse@...
Location: Sharjah - U.A.E

பெண்கள் பாங்கு இகாமத் சொல்லக் கூடாது என்று எந்த ஒரு தடையையும் நம்மால் பார்க்க முடியவில்லை. நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் எந்தக் காரியத்தையும் ஆண் பெண் இருபாலாரும் செய்யலாம்.

பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் என்று நபி(ஸல்) கூறிய செய்தி அபுஸயீத் அல்குத்ரி என்ற நபித்தோழர் வழியாக பல நூல்களில் இடம் பெறுகின்றது. பாங்கு சொல்பவர்களின் அதே வாசகத்தை பெண்களும் திரும்ப சொல்லலாம் என்ற அனுமதியே அவர்கள் தங்கள் தொழுகையில் பாங்கு சொல்லிக் கொள்ளலாம் என்பதை விளக்குகின்றது.

இப்னு உமர் போன்ற நபித்தோழர்கள் பெண்கள் பாங்கு இகாமத் சொல்லிக் கொள்வதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்கள். எனவே பெண்கள் தங்கள் தொழுகையில் அவர்களுக்குள் பாங்கு இகாமத் சொல்லிக் கொள்ளலாம்.

பெண்களுக்கு பாங்கு இகாமத் கிடையாது என்போர் எடுத்துக் கொடுக்கும் ஆதாரம் சரியானதாக இல்லை. பலவீனமான செய்தியாக உள்ளது. எனவே அதை வைத்து ஒரு நல்லமலை தடுக்க முடியாது.

நகை அணிந்து இல்லறம்

என்னுடைய கேள்வி : பெண்கள் அணியும் கழுத்துச் செயினுக்கான டாலர் மற்றும் கை விரல்களின் மோதிரம் பிரேஸ்லெட் போன்ற தங்க நகைகளில் 'அல்லாஹ்' 'லாயிலாஹ இல்லல்லாஹ்' போன்ற வாசகங்களைப் பொறித்துக்கொள்கிறார்கள். இந்த வாக்கியங்களோடு கழிவறைக்குச் செல்வது - தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கூடுமா..?

Name: Syed Gnaniyar
email: syed.isc@.....
Location: jeddah
Subject: Kelvi

பொதுவாக நகைகளில் அல்லாஹ் முஹம்மத் போன்ற வாசகங்களைப் பொரித்துக் கொள்வதற்கு எந்த தடையுமில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தங்கள் மோதிரத்தில் அல்லாஹ் - முஹம்மத் - ரஸுல் ஆகிய வாசகங்களைப் பதித்திருந்தார்கள்.

அது அவர்களின் முத்திரை மோதிரமாக (பிற நாட்டு மன்னர்களுக்கு இஸ்லாமிய அழைப்பை வைத்து கடிதம் எழுதும் போது அந்த மோதிரத்தின் முத்திரையே கடிதத்தில் வைக்கப்படும்).

நபி(ஸல்) மோதிரம் அணியும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால் அந்த மோதிரத்தை தம் தேவையை நிறைவேற்ற செல்லும் போது (கழிவறை போன்ற இடங்களுக்கு செல்லும் போது) கழற்றி விட்டு செல்வார்கள் என்று ஹதீஸ்கள் கிடைக்கின்றன.

‏حدثنا ‏ ‏نصر بن علي ‏ ‏عن ‏ ‏أبي علي الحنفي ‏ ‏عن ‏ ‏همام ‏ ‏عن ‏ ‏ابن جريج ‏ ‏عن ‏ ‏الزهري ‏ ‏عن ‏ ‏أنس ‏ ‏قال ‏

‏كان النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏إذا دخل الخلاء ‏ ‏وضع ‏ ‏خاتمه

இந்த செய்தி பற்றிய விபரங்களுக்கு கிளிக் செய்யுங்கள்

திர்மிதி - நஸயி - அபூதாவூத் - இப்னுமாஜா - ஹாக்கிம் உட்பட இந்த செய்தி இடம் பெறுகின்றது. (அனஸ் ரலி அறிவிக்கும் இந்த செய்தியை திர்மிதி அவர்கள் சரியானது என்று கூறினாலும் பிற அனைத்து ஹதீஸ் பதிவாளர்கள், ஹதீஸ் ஆய்வாளர்களும் அந்த செய்தியை பலவீனம் என்று கூறியுள்ளார்கள். (திர்மிதி இமாமின் ஆய்வில் தவறு நிகழ்ந்துள்ளது என்று புரிந்துக் கொள்ளலாம்.)

இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்திருந்தால் இதை அடிப்படையாகக் கொண்டு மலஜலம் கழிக்கும் போது - இல்லறத்தில் ஈடுபடும் போது நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த வாசகங்கள் பதிந்துள்ளவற்றை கழற்றி விட வேண்டும் என்று முடிவு செய்யலாம். செய்தி பலவீனமாக உள்ளதால் இதை வைத்து சட்டம் எடுக்க முடியவில்லை.

ஆனாலும் அதனால் மன ஊச்சலாட்டம் ஏற்படும் என்றால் கழற்றிக் கொள்ள வேண்டியதுதான். மன ஊச்சலாட்டங்களை விட்டு இஸ்லாம் பாதுகாப்பு தேட சொல்லியுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது மன ஊச்சலாட்டத்தை ஏற்படுத்துவது என்பதால் அதை கழற்றி வைப்பதே பாதுகாப்புக்கு சமம் என்பதால் கழற்றி விடலாம். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

Friday, July 18, 2008

சிகப்பு ஆடை

ஆண்கள் சிகப்பு நிற ஆடை உடுத்த இஸ்லாத்தில் தடையுள்ளதா...?

Name: Fathima
email: fkathija@....
Location: Srilanka

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி உடையின் கலர்களைப் பொருத்தவரை உஸ்புர் (சாயம் ஏற்றப்பட்ட வெளிர் மஞ்சல் - காவிக் கலர்) என்பது மட்டும் தான் 'உடுத்த வேண்டாம்" என்று தடை செய்யப்பட்டுள்ளது. (திர்மிதி)

ஹஜ் - உம்ராவிற்காக இஹ்ராமில் இருக்கும் ஆண்களுக்கு பச்சை சாயம் ஏற்றப்பட்ட, குங்குமப்பூ சாயம் ஏற்றப்பட்ட, வர்ஸ் எனும் செடியின் சாயம் ஏற்றப்பட்ட உடைகளை உடுத்த தடை வந்துள்ளது. (இந்த செய்தியை புகாரியில் பல இடங்களில் பார்க்கலாம்)

இது தவிர கலரைப் பொருத்தவரை வேறெந்த தடையுமில்லை. ஆண்கள் சிகப்பு நிறந்தில் ஆடை அணியலாம் ஏனெனில் நபி(ஸல்) சிகப்பு ஆடை உடுத்தியுள்ளார்கள்.

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும் (மேல் முதுகும் மார்பும் விசாலமான நிலையில்) இரண்டு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களின் காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதை விட அழகான ஆடையை நான் கண்டதேயில்லை. (புகாரி)

முடிவெட்டும் தொழில்

இஸ்லாத்தில் முடிவெட்டும் தொழில் செய்பவர்களை மதிப்பதில்லையே ஏன்? அவர்கள் மோசமானவர்களா..? இவர்களைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்லியுள்ளது?

Name: b.sulaiman
email: sukasafa9@.....
Location: brunei தாருஸ்ஸலாம்

மனிதர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கும் ஆயிரக்கணக்கான தொழி்ல்களில் முடிவெட்டும் தொழிலும் ஒன்று. இது அனுமதிக்கப்பட்டத் தொழிலாகும்.

இந்தத் தொழில் செய்பவர்கள் உண்மையில் பிறரை விட ஆண்களுக்கு அதிக நன்மைச் செய்கிறார்கள். ஆம், மனிதனின் அழகைத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது சிகையலங்காரமாகும். பரட்டைத் தலையுடன் அல்லது காடுபோன்ற வளர்ந்த தலைமுடியுடன் உலவும் எவரும் அவர் நல்ல உடை உடுத்தி இருந்தாலும் பிறர் முகத்தை சுளித்துதான் பார்ப்பார்கள். முடிவெட்டி தலையை ஒழுங்காக வைத்திருப்பவர்கள் அடுத்தவர் பார்வைக்கு சிறந்தவராகவே தெரிவார்.

மனிதனின் சமூக மதிப்பீட்டை உயர்த்தும் தொழிலான முடிவெட்டும் தொழிலை குறைத்து பார்ப்பது, அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களை மதிக்காமல் இருப்பது அறிவீனத்தின் அடையாளமாகும்.

தினமும் நூறு முறை கண்ணாடி பார்த்து தலையை அலங்கரித்துக் கொள்பவர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு பார்பர்ஷாப் பக்கம் போகாமல் இருந்து விட்டு பிறகு கண்ணாடி பார்த்து தனது அழகை ரசிக்கட்டும் பிறகு தெரியும் அந்த தொழிலின் அருமையும் அந்த தொழிலாளியின் அருமையும்.

பொருளாதாரமே மதிப்பீடுகளை தீர்மானிக்கும் போக்கு வளர்ந்து விட்டதால் தான் முடிவெட்டும் தொழில், சலவைத்தொழில், செருப்பு தைக்கும் தொழில், - இதன் தொழிலாளிகள் பிறரால் மதிப்புடன் பார்க்கப்படுவதில்லை. காரணம் இவர்களின் தொழிலில் வருமானம் மிக மிக குறைவு. தொழிலின் பயன்பாட்டை வைத்து தொழிலாளிகள் மதிக்கப்பட்டால் மேற்குறிப்பிட்டவர்கள் முன்னணியில் நிற்பார்கள்.

இறைவன் அழகானவன் அவன் அழகை விரும்புகிறான் என்பது நபிமொழி (முஸ்லிம்) இந்த ஹதீஸ்படி பார்த்தால் அழகியலு்க்காக பாடுபடும் அனைவரும் இறைவனிடம் உயரந்தவர்கள் தான்.

மனிதன் உண்ணும் உணவிலேயே சிறந்தது அவன் கைகளால் உழைத்து உண்ணும் உணவாகும் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள் (புகாரி)
மோசடிப்பண்ணத் தெரியாத, நன்கொடை என்றப் பெயரில் லஞ்சம் பெறத் தெரியாத, பெரும் கூலிக்கு ஏற்ற தகுந்த பணியாற்றும் இவர்கள் சமுதாயத்தில் சிறந்தவர்கள். நிச்சயம் நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

நன்மையுண்டா இதுக்கு?

அஸ்ஸலாமு அலைக்கும்.
மாற்று மததத்தவர்களுக்கு தானதர்மம் செய்யலாமா.. அதனால் நமக்கு நன்மையுண்டா..? மாற்றுமதத்தவர்கள் தானதர்மம் செய்தால் அதனால் அவர்களுக்கு நன்மை கிடைக்குமா..? இறைவனை ஏற்காதவர்கள் நிரந்தர நரகில் இருப்பார்கள் என்று குர்ஆனில் சொல்லி இருக்கானே... எனக்கு பதில் தேவை!
Name: haja

email: haja.faisa@....
Location: kuwait

முஸ்லிம்கள் மனிதாபிமானத்திலும், பிறர் நலன் நாடுவதிலும் எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும். பசித்தவர்களுக்கு உணவளிப்பது, ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவது போன்றவை முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் செய்ய வேண்டியவையல்ல.

பொருளாதாரத்தை பொருத்தவரை முஸ்லிம் முஸ்லிமுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்ற எந்தக் கட்டளையையும் அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ நமக்கு இடவில்லை.

ஜகாத்தை எடுத்துக் கொள்வோம். 8 கூட்டத்தாருக்கு அவை பயன்பட வேண்டும்.

ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல் குர்ஆன் 9:60)

இந்த எட்டுக் கூட்டத்தாரில் "அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் ராணுவவீரர்" தவிர மற்ற ஏழு கூட்டத்தார்கள் பொதுவானவர்கள். அவர்கள் முஸ்லிம்களாகவும் இருக்கலாம், பிறராகவும் இருக்கலாம். தேவையை பார்த்து அவர்களுக்கு ஜகாத் தொகையை வழங்குவதில் தவறில்லை.

கஷ்டத்திலிருப்பவர்களுக்கு பொருளாதர உதவி செய்து அவர்களை அதிலிருந்து மீட்டால் அவர்கள் இஸ்லாத்தை புரிந்து அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் நிலையும் ஏற்படலாம் என்பதை ஒரு பகுதியாகவே இறைவன் ஜகாத் திட்டத்தில் வைத்துள்ளான்.

எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு நமது பொருளாதாரத்தை செலவிடக் கூடாது என்று எந்தத் தடையுமில்லை.

நாம் செய்யும் எந்த நல்லமலையும் இறைவன் வீணாக்கி விடமாட்டான் என்று குர்ஆனில் இறைவன் குறிப்பிட்டு காட்டுவதால் பகட்டுக்காக இல்லாமல் இறை திருப்தியை நாடி நாம் முஸ்லிமல்லாதவர்களுக்கு நமது பொருளாதாரத்தை செலவழிக்கலாம்.

தேவையிருந்தும் செலவு செய்யதவர்களுக்குரிய எச்சரிக்கையும் குர்ஆனில் உள்ளது.

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். (அல்குர்ஆன் 63:10)

தேவை இருந்தும் தான தர்மம் செய்யாமல் கைகளை இறுக்கிக் கொள்பவர்களின் மரணத் தருவாயின் புலம்பலை இறைவன் முன் கூட்டியே சுட்டிக் காட்டுகிறான். ஆனால் அந்த புலம்பலால் எந்தப் பலனும் இல்லை.
பிற மதத்தவர்கள் தான தர்மம் செய்கின்றார்கள் அதற்கு பலனுண்டா என்று கேட்டுள்ளீர்கள்.

இஸ்லாத்தைப் பொருத்தவரை ஓரிறைக் கொள்கையைத் தழுவிதான் மற்ற அனைத்து நற்பணிகளும் தீர்மானிக்கப்பட்டுளளன. ஓரிரைக் கொள்கையை ஏற்காத நிலையில் செய்யப்படும் நற்பணிகளுக்கு இஸ்லாத்தில் மதிப்பில்லை.

பிறராக முன் வந்து இஸ்லாமிய நற்பணிகளுக்கு உதவினால் அந்த உதவியை புறக்கணிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் சொல்லவில்லை. அது அவர்களின் விருப்பத்தை சார்ந்ததாகும்.

Tuesday, June 10, 2008

யாருக்கு சொத்து?

நான் இறந்த பின் எனது சொத்துக்களை (வங்கி இருப்பு, சொத்துக்கள், மரணக்காப்பீடு) இது போன்றவற்றை நான் என் மனைவிக்கும் என் சகோதரிக்கும் கொடுக்கலாமா? எவ்வாறு செய்வது? சிலர் கூறுகிறார்கள் இஸ்லாத்தில் இது அனுமதியில்லையென்று. நான் அவற்றை ஒருவருக்கே கொடுக்க மணமில்லை. தங்களிடமிருந்து தெளிவான பதில் தேவை.

Name: Mohamed Ibrahim
email:
ibrm@.....
Location: Dubai
.....................................

எந்த ஒரு முஸ்லிமும் தான் இறந்த பிறகு தனது சொத்தை இந்த வகையில் பிரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்ல முடியாது. சொத்துக்கு யாரெல்லாம் வாரிசுதாரர்களாவார்களோ அவர்களையும் அவர்களுக்குரிய அளவையும் இறைவன் தெளிவாக பட்டியலிட்டு விட்டதால் அவர்களுக்கு நாம் உயில் எழுதி வைக்க முடியாது. எழுதி வைத்தாலும் இஸ்லாமிய நீதிமன்றங்களில் அவை செல்லாது.
ஒருவர் இறந்த பின் அவரது வாரிசுதாரர்கள் யார் யார் என்பதை குர்ஆன் அடிப்படையில் நீதிமன்றம் அணுகி அவர்களுக்கு பிரித்துக் கொடுக்கும். (அதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால்).
பாகப்பிரிவினைப் பற்றிய வசனங்களைப் படியுங்கள்.
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிரைவேற்றிய பின்னர்தான்;. உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்;. ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்:4:11)
இறந்துப் போனவர் விட்டு சென்றது என்று இறைவன் சுட்டிக் காட்டுவதை நாம் கவனிக்க வேண்டும். விட்டு செல்லக் கூடிய சொத்து எதுவாக இருந்தாலும் - நிலங்கள், பத்திரங்கள், வீடுகள், வருமானம் வரும் பிற கட்டிடங்கள், வங்கி வைப்புகள் உட்பட - அனைத்துக்கும் இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள அவர்கள் வாரிசுதாரராகி விடுவார்கள்.
இவர்களல்லாத பிறருக்கு வேண்டுமானால் 'மரணசாசனம்' எழுதி செல்லலாம். உண்மையில் உங்கள் சொத்தை பிறருக்கு ஓரளவு கொடுக்க வேண்டு்ம் என்று நீங்கள் விரும்பினால் அதை நீங்கள் உயிருடன் இருக்கும் போதே எழுதி அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். அதாவது அது அவர்களின் சொத்தாகி விட வேண்டும்.
விபரம் போதவில்லையென்றால் எழுதுங்கள்.

வங்கி - எதிரி

வங்கி - வட்டி - எதிரி

முஸ்லிம்களை கருவறுப்பதற்கும் - முஸ்லிம் பெண்களை எழுத கூசும் விதத்தில் படு கேவலமாக மானப்பங்கப்படுத்தி கொலை செய்வதற்கும் வங்கி வட்டி பணம் தான் பயன்படுத்தபடுகிறது என்பதற்கு ஏதாவது தகுந்த ஆதாரம் உண்டா? நம்முடைய மக்களுக்கு புரியவைப்பதற்காக இதைவிளக்கவும் விளக்கவும்....

Name: Thajudeen
email: m.thajudeen@....
Location: Dubai
Subject: Question

சின்ன - பெரிய ஷிர்க்

எனது கேள்வி.
சின்ன ஷிர்க் என்றால் என்ன? பெரிய ஷிர்க் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Name: ansar a rahman
email:
abdul.ansar@......
Location: sri lankan
Subject: Kelvi

இணைவைப்பு என்ற ரூபத்தில் வந்தாலும் அது கொடியதாகும். இணைவைப்பு குறித்து முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடனும், அதன் விளைவுகள் குறித்த அறிவு - பயத்துடனும் இருக்க வேண்டும்.

பெரிய இணைவைப்பு.

பகிரங்கமாக, வெளிப்படையாக, அறிந்தோ அறியாமலோ செய்யும் சில காரியங்கள்.
இறைவனைத் தவிர பிற அவனது படைப்புகளை அல்லது இறைவனுடன் அவனது படைப்புகளை வழிபாட்டுக்குரியதாக - வணக்கத்துக்குரியதாக ஆக்கிக் கொள்வது.
மனிதர்கள் (அது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களாக இருந்தாலும் சரியே).
வானவர்கள் (மலக்குகள்),
ஜின்கள், (தேவதைகள்)
சிலைகள் (அது கடவுள் என்ற அர்த்தத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சரி, மரியாதைக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சரி)
மிருகங்கள், பசு வழிபாடு போன்றவை
இடங்கள் (பூமியின் பல்வேறு இடங்கள் புனிதமாக கருதப்படுவது - பூமித்தாய் என்று போற்றி அதை வணங்குவது)
மனிதப்படைப்புகள் (ஆயுதபூஜை போன்றவை)
சமாதிகள், தர்காக்கள், மடங்கள்

இப்படி வெளிப்படையாக வழிபடப்படும் அனைத்தும் 'பெரிய இணைவைப்பு' என்ற கொடிய செயலில் அடங்கி விடும். இது 'லாஇலாஹ இல்லல்லாஹ்' 'வணக்கத்துக்குரியவன் ஏகனைத் தவிர வேறொன்றும் இல்லை' என்ற இஸ்லாத்தின் ஆணிவேரான கொள்கைக்கு முற்றிலும் மாற்றமானதாகும். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் இந்த கொடிய செயலுக்கு எதிராகவே தனது முதல் பிரச்சாரத்தை துவக்கினார்கள். இந்த இணைவைப்பு குறித்து போதுமான விளக்கங்கள் பல வழிகளில் மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டு வருகின்றன.

சிறிய இணைவைப்பு

முஸ்லிம்கள் அதிகமாக அஞ்சி தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் செயலாகும். அரபியில் 'ரியா' என்று குறிப்பிடப்படும் சிறிய இணைவைப்பு குறித்து நபி(ஸல்) மிகுந்த எச்சரிக்கையுணர்வை ஊட்டி சென்றுள்ளார்கள்.

எங்கள் மத்தியில் இறைவனின் தூதர் அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் 'மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது" என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) 'அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?" என்று வினவினார்கள். அப்போது நபி அவர்கள், 'அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று (பிரார்த்தனை செய் என்று) சொன்னார்கள். அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அஹ்மத்.

'அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார். என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.அபூதாவூத், இப்னு மாஜா.

'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தெரிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்கரித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள். அபூஸயீத்(ரலி) இப்னுமாஜா.

அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் விரும்பியதை நாம் விரும்பியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவருக்காக நரகத்தைத் தயார்படுத்துவோம். இழிந்தவராகவும் அருளுக்கு அப்பாற்பட்டவராகவும் அதில் அவர் நுழைவார்.

நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு, கூலி கொடுக்கப்படும்। அல்குர்ஆன் 17:18-19

உங்களில் அழகிய செயலுக்குாியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தோன், மன்னிப்போன். (திருக்குர்ஆன் 67:2)

பேருக்காக, புகழுக்காக, பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக, இன்னபிற உலக அற்ப நோக்கங்களுக்காக செய்யப்படும் எந்த காரியமும் - அமலும் - சிறிய இணைவைப்பு என்ற அந்த பாவத்தை ஏற்படுத்தி விடும்.

முஸ்லிமின் நோக்கம் மறுமையாக இருக்க வேண்டும். உலகின் எந்த நோக்கத்தையும் பிரதானமாக கருதாமல் மறுமைக்காக வாழும் வாழ்க்கை ஒன்றே சிறிய இணைவைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

இறைவன் நம் எண்ணங்களை தூய்மையாக்கி வைப்பானாக.

மதுவும் - வட்டியும்

1. என்னுடைய முதலாளி வட்டி வாங்குகிறர் நான் அவரிடம் வேலை செய்யலாமா? மற்றும் அவர் இன்னும் பிற தவறான செயல்களை செய்கின்றர்கள் என்று உடன் வேலை செய்பவர்கள் கூறுகிறர்கள் அதனை ஈர்ர்கலாமா?

2. என்னுடன் வேலை செய்பவர்கள் அனைவரும் ஒர் வீட்டில் இருந்து வருகிறோம். வேலை செய்யும் நபர்கள் மது அருந்தும் வழுக்கம் உள்ளவர்கள் மாதத்தின் கடைசியில் அந்த தேவைக்காக பணம் கேட்கிறார்கள் கொடுக்கலாமா? இந்த இரண்டு கேள்வி பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Name: Thahir
email:
thahirmd53...
Location: India
Subject: Kelvi
...........................


வட்டிக்கடை நடத்துபவராக இருந்தால் நீங்கள் பிற வேலையைத் தேடிக் கொள்வதுதான் நல்லது. ஏனெனில் வட்டிக்கு எதிரான கடுமையான எச்சரிக்கைகள் இருப்பதால் அந்தப்பக்கத்தை விட்டு நாம் ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது. வட்டி வாங்குபவர் என்பதை எந்த அர்த்தத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று புரியவில்லை. வங்கியில் கணக்கு வைத்துள்ள அநேகர் கூட வட்டி வாங்கத்தான் செய்கிறார்கள். அந்த அர்த்தத்தில் குறிப்பிட்டால் இன்றைக்கு உலகில் பெரும்பாலான இடங்களில் - நாடுகளில் -வேலை செய்யவே முடியாது ஏனெனில் அனைத்து தொழில் நிறுவனங்களும் வங்கியோடு தொடர்பில் தான் இருக்கின்றன.

வங்கியோடு தொடர்பில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா என்றால் இது குறித்து ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய இடங்களில் வேலை செய்வதால் நாம் குற்றவாளியாக மாட்டோம்.

உங்கள் முதலாளி தவறான செயல் செய்கிறார் என்று பிறர் கூறுவதை அலட்சியப்படுத்துங்கள். நீங்கள் நேரடியாக காணும் வரை பிற செய்திகளை முழுமையாக அலசி தெளிவு பெறாதவரை யாரைப் பற்றியும் தப்பெண்ணம் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில தவறான எண்ணங்கள் பாவமாகி விடும் என்று குர்ஆன் எச்சரிக்கின்றது.

உடனிருப்பவர்கள் ஹராமான காரியத்தை செய்வதற்கு உங்கள் உதவியை நாடினால் - பணம் மட்டுமல்ல கடையில் போய் மது வாங்கி வர சொன்னாலும் - அதற்கு உடன்படாதீர்கள்.

முஸ்லிம்கள் தீமைகளை பலவழிகளில் தடுக்கக்கடமைப்பட்டவர்கள். தடுக்க முடியாத பலவீனமான நிலை நம்மிடம் இருந்தால் குறைந்த பட்சம் உதவி செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள், பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் (அல்குர்ஆன்: 5:2)

உடனிருப்பவர்களிடம் நளினமாக 'தனக்கு இதில் உடன்பாடில்லை, என் மார்க்கம் இதை தடுக்கின்றது" என்று கூறிவிடுங்கள். உடனிருப்பதால் அவர்களால் உங்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடியும். இறைவனின் உதவியை நாடுங்கள். பாவத்துக்கு துணைப் போக வேண்டாம்.

Wednesday, May 14, 2008

ஸ்பிரே சென்ட்

நாம் உபயோகிக்கும் வாசனைத் திரவியங்களில் குறிப்பாக ஸ்பிரே சென்ட் போன்றவற்றிலும் சமையலில் உபயோகப்படும் வினிகர் போன்றவற்றிலும் ஆல்கஹால் கலந்திருப்பதாக சொல்கிறார்கள் எனவே இவற்றை நாம் உபயோகப்படுத்தலாமா?

Name: அப்துஸ்ஸலாம்
email: masdooka@.....
Location: சவூதி அரேபியா
Subject: Kelvi

........................

ஆல்கஹால் என்பது இரண்டு வகையானது. எத்தில் ஆல்கஹால், மெத்தில் ஆல்கஹால் என்று அவற்றை வகைப்படுத்துகின்றனர். இதில் மெத்தில் ஆல்கஹால் போதைத் தரக்கூடியது. இந்த ஆல்கஹாலைத்தான் ஸ்ப்ரே சென்ட் உட்பட பல்வேறு மருந்து மாத்திரைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல், குறைவாக பயன்படுத்துகிறார்கள்.

சிலர் ஸ்பிரே சென்ட் பயன்படுத்தும் போது தும்மல் போன்ற அலர்ஜிக்கு ஆட்படுவதற்கு அதில் கலக்கப்பட்டுள்ள ஆல்கஹாலே காரணமாகும். வீடுகளில் வாசனைக்காக உபயோகிக்கப்படும் ஸ்பிரேக்களிலும் இந்தக் கலவை உள்ளது.

ஆல்கஹால் என்ற போதைப் பொருள் கலக்கப்பட்டுள்ளது என்று தெரிந்த நிலையில் அத்தகைய ஸ்பிரேக்களை பயன்படுத்தலாமா என்பது நமக்கு எழும் கேள்வி.

'போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4343,பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4344,பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5586.

நபி(ஸல்) காலத்தில் வாசனைத் திரவியமாக இத்தகைய போதைப் பொருள்கள் கலக்கப்பட்ட எதுவொன்றும் இருந்ததில்லை. எனவே உபயோகித்தால் போதைத் தரக் கூடிய - போதைத் தர வாய்ப்பிருக்கும் பொருட்களை பயன்படுத்துவதையே நேரடியாக அந்த ஹதீஸ்கள் தடுக்கின்றன. எந்த ஒரு பொருளும் அதன் தன்மையை இழந்து விடும் போது நேரடியானத் தடைகளை அந்த பொருளுக்கு பொருத்திப் பார்க்க முடியாது.

ஆண்களுக்கு தங்கம் ஹராம் என்பது நமக்கு தெரியும். ஆனால் தங்கம் பிற உலோகங்களோடு கலந்து தங்கத்தின் அளவு குறைந்து பிற உலோகங்களில் அளவு அதில் அதிகமாக இருந்தால் தங்கம் தடை என்ற குறிப்பிட்ட செய்தியை எடுத்துக்காட்டி மற்ற உலோகங்களின் கலவையையும் நாம் தடுக்க முடியாது.

அதேபோன்று, ஸ்பிரே சென்ட்களில் ஆல்கஹாலை விட பிற திவரங்கள் அதிகமிருக்கின்றன. மருந்துகளில் பிற மருத்துவ குணங்களோடு ஒப்பிடும் போது ஆல்கஹால் குறைவாக இருக்கும். போதையே ஏற்படாத அளவிற்கு பிற கலவிகள் இருந்தால் அதை பயன்படுத்துவதை தடுக்க முடியாது. அந்த வகையில் ஸ்பிரே சென்ட்களை உபயோகிக்கலாம்.

இதை பயன்படுத்தும் போதும் அலர்ஜி போதை போன்ற நிலையை உணர்ந்தால் அவர்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் மிக்க அறிந்தவன்.

இஸ்லாமிய திருமணம் எப்படி?

இஸ்லாமிய திருமணத்தைப்பற்றி தெளிவாக விளக்கவும். இன்று நடக்கக்கூடிய திருமணங்கள் இஸ்லாமிய சிந்தனையற்றதாகவே இருக்கின்றது. பிரமாண்டமாக நடக்கின்றது. மணமக்களை வாயில் சீனி (சர்க்கரை) கொட்டும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தங்களது தெளிவான விளக்கம் தேவை.

Name: Deen
email: rilvan0030@.....
Location: Malaysia
Subject: Question
.............................

இஸ்லாமிய திருமணம் பற்றி விரிவான தகவல் அறிய செல்லுங்கள்.

Sunday, May 4, 2008

பிஜெ

சகோதரர் பிஜே அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். அவர் சொல்லும் சில கருத்துக்களை சில காலங்களுக்குப் பிறகு வாபஸ் வாங்கி்க் கொள்கிறார். அப்படி இருக்கும் போது தற்போது அவர் கூறும் கருத்துக்களை எவ்வாறு நம்புவது?

Name: Mohamed Yaseer
email: awm.yaseer@....
Location: Doha Qatar
Subject: kelvi

தாம் செய்யும் அல்லது தாம் கூறும் ஒரு கருத்து தவறு என்று தெளிவாகும் போது தனது முந்தையக் கருத்தை மாற்றிக் கொள்வது தான் நல்லப் பண்பு. அப்படிப்பட்டவர்களிடம் தான் நியாயமிருக்க முடியும். முதலில் ஒன்றைச் சொல்லி விட்டு பிறகு அதை மாற்றிச் சொல்வது என்பது இன்றைக்கல்ல இஸ்லாமிய அறிஞர்களின் வரலாற்றில் காலந்தோரும் நடக்கக் கூடிய ஒன்றாகும். இதில் மிக பிரபல்யமானது அறிஞர் ஷாஃபி இமாம் அவர்களின் 'கவ்ல் கதீம்' 'கவ்ல்ஜதீத்' என்றத் தொகுப்பாகும்.

தமக்கு முன்னர் கிடைத்தவற்றை வைத்து அவர்கள் வெளியிட்ட, மக்களிடம் சொன்ன கருத்துக்கள் பிறகு அதற்கு மாற்றமான ஆதாரம் கிடைக்கும் போது ஆதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது முந்தையக் கருத்தை வாபஸ் வாங்கியது என்று அவர்கள் குறிப்பிடுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

நாம் ஒரு கருத்தை வெளியிடுகிறோம், அதற்கு மாற்றமான ஒரு தெளிவான ஆதாரம் கிடைக்கின்றது என்றால் ஆதாரத்துக்கே முதலுரிமைக் கொடுத்து நம் கருத்தை பின்னுக்குத் தள்ளி விட வேண்டும். ஆனால் சில முரட்டு அறிஞர்களிடம் இந்தப் பண்பு இருப்பதில்லை. தாம் வெளியிட்ட கருத்தை எப்படியாவது சுற்றி வளைத்து நியாயப்படுத்தத்தான் முயல்கிறார்களேத் தவிர இறைவனின் மார்க்கத்தில் நம் சுய கருத்துக்கு இடமிருக்கக் முடியாது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

தர்கா வழிபாடு, தரீக்கா வழிபாடு, தனிமனித வழிபாடு, இயக்க வழிபாடு என்று எல்லா வழிபாடுகளுக்கும் இந்த மனநிலையே காரணமாகும்.

முந்தைய கருத்தை மாற்றும் போது அக்கருத்தை நம்பியவர்களின் நிலை என்னவென்ற சிந்தனை என்றக் கேள்விக்கு பதில் மிகவும் எளிது.

முந்தையக் கருத்தும் ஒரு ஆதாரத்தின் மீதே அமைந்ததாக இருந்தால் அக்கருத்தை அன்றைக்கு ஏற்றுக் கொண்டவர்கள் சரியானதையே செய்துள்ளார்கள் என்று பொருள். அதற்கு மாற்றமான வேறொரு ஆதாரம் கிடைக்கும் போது முந்தைய ஆதாரம் தளர்த்தப்பட வேண்டும். பிடிவாதம் பிடிப்பது நம்மை வேறு திசையில் திருப்பி விடும்.

பிஜே தன் கருத்தை மாற்றிக் கொள்கிறாரா...!

சந்தோஷம் தான்

மோதிரம் அணியும் விரல்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)மோதிரத்தை நடுவிரல் மற்றும் ஆள் காட்டி விரலில் அணியக்கூடாது என்று சமீபத்தில் ஒர் இதழில் படித்ததாக நண்பர் எங்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது கூறினார்.இதற்கு ஆதாரம் உள்ளதா? மோதிரத்தை எப்படி அணிய வேண்டும் தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

Name: Jageer
email: jageer.ali@.......
Location: UAE S
ubject: Kelvi
.......................