Date: 2009/2/17
To: fromgn@googlegroups.com
|
From: Abufaisal <jmbaasha@>
Date: 2009/2/18
To: fromgn@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....
சகோதரர் ஜுபைர் அவர்களுக்கு
இவ்வகையான வழக்கில் சட்டப்படி இந்தப்பெண் "காணாமல் போனவரின் மனைவி" என்று கருதப்படுகிறார், இதன்படி அப்பெண்ணின் கணவன் தொலைந்துவிட்டதாகவே கருதப்பட்டு அவனின் திரும்புதலுக்கான காத்திருப்பு காலமும் முடிந்துவிட்ட நிலையில் அவன் இறந்து போனவனாகவே கருதப்படுவான்.
இந்நிலையில் ஏற்கனவே இப்பெண்ணின் கணவன் ஓடிப்போய் இரண்டாண்டு காலம் முடிந்துவிட்டதாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை என்பதாலும் ஷரீயத் முறைப்படி நீதிபதியை (ஊர் ஜமாத்தை)அணுகி இத்திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள இந்த பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. பிறகு முறைப்படி (இறந்த கணவனுக்கு) இத்தா இருப்பதுபோல் இருந்துவிட்டு வேறு திருமணம் செய்துகொள்ளலாம்.
ஆதாரம்: ஷேய்க் பின் உத்தைமீன் அவர்களின் ஃபத்வாவிலிருந்து.
Book: Selected Fatawa for Women (page#40) by Muhammad bin Abul-Aziz Al-Musnad
அன்புடன்,
சகோ. அபூஃபைஸல்
----------
From: Mohamed Abbas <moham@>
Date: 2009/2/21
To: fromgn@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்.........
ஹசன் அல்பஸரி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்
ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டால் அவள் அவருக்கு விலக்க பட்டவளாக ஆயி விடுவாள் என்று அறிஞர் கூறுவதுடன் அதனை ஹரமுடன் பித்தலாக் அல்லது ஹராமுன் பில்பராக் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.ஆனால் இது உணவைஒருவர் ஹராமாக்கி போன்ற தன்று.ஏனெனில், அனுமதிக்கப்பட்ட உணவைஒருவர் தமக்கு விளக்கி கொள்வதால் 'ஹரமான உணவு சொல்லப்பட்டது" மனவிலக்கு செய்யப்பட்ட பெண்ணை விலக்கப்பட்டவள் என்று சொல்வதுன்டு மூன்று கட்ட விசயத்தில் அல்லாஹ் கூறினான்; பின்னர் அவன் (மூன்றாவது தவனையில்) அவன் தலாக் சொல்லிவிட்டால்,பிறகு அவனில்லாத வேறொரு கணவனை மணக்கிறவரை அவள் மணக்கும் வரை அவனுக்கு அவள் அனுமதிக்கப்பட்டவள். திருகுரான் (2:230) நூல் புகாரி 5263
இதிலிருந்து மூன்று தலாக் சொல்ல ப்பட்ட பின் தான் அவளுக்கு அடுத்த கணவரை மணக்க ஹலால் என்று அனுமதிக்கப்படும்.
மனிதன் தன் மனைவியை ஹராமாக்கி கொண்டால் அது ஒரு பொருட்டல்ல( அது தலாக் ஆக கருத முடியாது) என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறி உண்மையில் அல்லாவின் தூதரரிடத்தில் தான் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது என்று கூறினார்கள் புகாரி 5266
அதனால் அவர் அவளை ஹராமாக்கி சென்றாலும் (விட்டு தனித்து சென்றாலும்)அது தலாக் ஆக முடியாது. நிச்சயம் அவன் அவளுக்க்று மூன்று தலாக் கூறியே ஆக வேண்டும்.
எந்த பொருளுக்கு தான் உரிமையானில்லையோ, அந்த பொருளுக்கு நேர்ச்சை செய்ய ஆதமின் மகனுக்கு உரிமையில்லை, எந்த அடிமைக்கு அவன் உரிமையாளனில்லை அந்த அடிமையை விடுதலை செய்யவும் அவனுக்கு உரிமையில்லை.எந்த பெண்ணுக்கு(மணபந்ததின் வாயிலாக) உரிமையாளானாக இல்லை அவளை தலாக் செய்யவும் அவனுக்கு உரிமையில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷீஐபு(ரலி) அவர்களின் பாட்டனர் வாயிலாக அறிவிக்கிறார். நூல் திர்மதி, அபுதாவுது, திர்மதியில் ஸஹிஹ் வான தரத்தில் அமைந்துள்ளது. இப்னு கதிர் ஹதிஸ் கித்தாபு 1120
அதனால் யாருக்கும் அவளை தலாக் அல்லது விடுவிக்க அதிகாரமும் அல்லது தலாக் சொல்ல உரிமையில்லை... அது ஊர் தலைவராக இருந்தாலும் சரி, வேற யாராக இருந்தாலும் சரி..அவளுடைய கணவன் தவிர..
உண்மையில் கணவர் மனைவி மத்தியில் உள்ள திருமண ஒப்பந்தம் கணவன் இருந்தால் அல்லது அவனால் முறிந்தால் தான் முடியும் வேறு எவராலும் சாதரணமாக முறிக்க முடியாது. ஆனால் கணவன் மறைந்துவிட்டானோ? உயிருடன் இருக்கின்றானோ என்ற சந்தேகம் இருக்கும் போது வேறு யார்? இந்த பந்தத்தை முறிக்க முடியும்? முறிப்பதாக இவர்கள் தீர்ப்பு செய்தபின் மறுபடி கணவன் வந்து விட்டால் என்னவாகும்? அல்லாஹ் அவனுக்கும் மட்டும் அளித்த் உரிமையில் கை வைக்க அதிகாரம் பெற்றவர் யார்?என்று கலிபா ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும் '' அல்லாஹ்வினாள் சோதிக்கப்பட்ட பெண்'' என்று கூறினார்கள். நூல் தாரகுத்னி 3/313. இது ஸஹிவான ஹதிஸ் என்று தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.
இருவரது திருமண உறவைப் பிரிக்க கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழித்த பின்னரே அவன் இறந்து விட்டதாக முடியு செய்யப்படும். அவனது மனைவி அது வரை அவனது மனைவி இத்தா இருப்பாள்
நூல் கன்ஸீத்தகாயிக் பாகம் 1 பக்கம் 220
சில இமாம்கள் 120 ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
சிலர் 70 ஆண்டுக்கு பிறகு என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்
இதை அவர்கள் நபி(ஸல்) அவர்கள் எனது உம்மத்தின் வயது 60 முதல் 70 வரை இருக்கும் என்ற ஹதிஸிலிருந்து தொகுத்தார்கள்..
அவன் இறந்துவிட்டால் அல்லது மூன்று தலாக் சொல்லும் வரை அவர்களின் திருமண பந்தம் பிரியாது.. யாரலும் பிரிக்க இயாலது என்று மார்க்க அறிஞர்களான் நல் இமாம்கள் கூறியுள்ளார்கள்..
இதற்கு மாற்றமாக திருமண செய்து கொள்ளலாம் இருந்தால் நபி(ஸல்) அவர்கள் கூறி இருந்தால் தாரளாமாக எடுத்து கொள்ளங்கள். இதில் ஏதெனும் குறை இருந்தால் அல்லாவுக்காக என்னை மன்னித்து விடுங்கள்..
----------
From: நமக்குள் இஸ்லாம் <togee@>
Date: 2009/2/22
To: fromgn@googlegroups.com
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
http://tamilmuslimgroup.blogspot.com