வலைப்பதிவில் தேட..

Sunday, March 9, 2008

தங்கத்திலே ஒரு குறை

முஸ்லிம் ஆண்கள் தங்கம் அணிவதற்கு ஏன் அனுமதியில்லை. மாற்றுமத சகோதரர் இதைப்பற்றி என்னிடம் கேட்கிறார். தெளிவாக விளக்கவும்.

Name: Syed Mansoor
email: alshifas@...
Location: Abu Dhabi
Subject: Question
...................

ஆண்களுக்கு தங்கம் ஹராம் என்று இறைத்தூதர் தடுத்தது உண்மைதான். எல்லா நிலைகளிலும் ஆண் ஆணாகவும் - பெண் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்ற இயல்பை இஸ்லாம் விரும்புகின்றது. நடை - உடை - பாவனை - பேச்சு - செயல்பாடு என்ற அனைத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.

பெண்ணை பெண் என்று எடுத்துக் காட்டும் உடைகளை ஆண்களோ, ஆண்களை அடையளாப்படுத்தும் உடைகளைப் பெண்களோ அணியக் கூடாது என்றும் இஸ்லாம் சொல்லியுள்ளது.

அதே போன்று தான் அணிகலன்களும். தங்கம் என்பது பொதுவாக, காலாகாலமாக, பெண்களுக்கான ஆபரணம் என்று வழக்கில் உள்ளது. தங்க நகை அணியும் போது ஒரு பெண் கூடுதல் அழகைப் பெறுகிறாள். அவளுக்கென்று, அவள் அழகை மேம்படுத்தும் ஆபரணமாக இருப்பதை ஆணும் தனக்காக்கிக் கொள்ளக் கூடாது என்ற கருத்து இதில் அடங்கி இருக்கலாம். ஆண் தங்கம் அணிவதால் அவன் அழகு மேம்படப் போவதில்லை. அது வெறும் 'பந்தா' தோரணையை மட்டுமே ஏற்படுத்தும்.

மைனர் சைன் என்று போட்டுக் கொள்ளும் சிலர் தங்கள் சட்டையின் சில பொத்தான்களை திறந்து விட்டுக் கொண்டு, தெருக்களில் பெண்களுக்கு முன்னால் உலவுவதைப் பார்க்கலாம். ஆண்கள் தங்கம் அணிவது இத்தகைய செயல்களுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

தேவைக்கு ஆண்கள் தங்கம் அணிவதை இஸ்லாம் தடுக்கவில்லை. உடைந்துப் போன, அல்லது பிடுங்கி எடுத்த பற்களுக்கு பதிலாக இன்றைக்கு நவீன சிகிட்சை முறை பிரபல்யமாகி புதிய செயற்கைப் பற்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் பற்களுக்கு தங்கத்தைப் பயன்படுத்தி வந்தனர். அத்தகைய தேவைக்கா ஆண் தங்கத்தைப் பயன்படுத்தினால் தடையில்லை. நவீன அறுவை சிகிட்சையில் இன்றைக்கு பொருத்தப்படும் உடல் உறுப்புகள் போன்ற வளர்ச்சியில்லாத காலத்தில் போரில் மூக்கு வெட்டப்பட்ட ஒருவர் தங்கத்தால் மூக்கை வடிவமைத்துக் கொண்டார் அதை இறைத்தூதர் அனுமதித்தார்கள்.

சிறிய அளவிளான இத்தகைய தங்கங்களை தேவைக்கேற்ப ஆண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கம் - பட்டு - வெள்ளிப் போன்றவை பெண்கள் பிரத்யேகமாக பயன்படுத்துபவையாகும். அதில் ஆண்கள் போட்டிப் போடக் கூடாது என்பதால் அவை ஆண்களுக்கு தடுக்கப்பட்டிருக்கலாம். ஆரம்ப வரிகளைப் படியுங்கள். "ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் (எல்லா நிலைகளிலும்) இருக்க வேண்டும் என்று இஸஸ்லாம் விரும்புவதைப் புரிந்துக் கொண்டால் இந்தத் தடைக்காண அர்த்தம் புரிந்து விடும்.

Monday, March 3, 2008

இந்த விருந்துக்கு செல்லலாமா..?

அஸ்ஸலாமு அலைக்கும். "விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது" நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டிதந்த வழிமுறையாகும். ஆனால் ஒருவரது வருமானம் ஹராமான முறையில் பெறப்பட்டதாக இருக்கும்போது அவருடைய அழைப்பை ஏற்றுகொள்ளலாமா?

Name: Azeezudheen
email: skn_azeesudeen@....
Location: Dubai
Subject: Kelvi

அனுமதிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஹராமான வழியில் பெறுகிறார் அதை அவர் பிறருக்கு கொடுக்கிறார் என்றால் அதைப் பெற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் தடையொன்றும் இல்லை.

பணம் என்பது ஹலாலான ஒன்று. அதை லஞ்சமாக பெற்ற ஒருவர் தன் குடும்பத்திற்காக செலவு செய்கிறார் அல்லது நற்பணிகளுக்கு கொடுக்கிறார் என்றால் லஞ்சம் பெற்றதற்கு அவர் குற்றவாளியாவாரே தவிர அவரிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளும் எவரும் மார்க்கம் அனுமதிக்கப்பட்டவழியில் அதைப் பெறுவதால் அவர்களுக்கு அது ஹராமாகாது.

நபி(ஸல்) அவர்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தர்மப் பொருளை ஹராமாக்கிக் கொண்டார்கள். ஹலாலான பொருளை ஒருவர் தரமமாக நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கினால் அது அவர்களுக்கு ஹராமாகும்.

பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2576

அல்லாஹ்வின் தூதரிடம் உணவுப் பொருள் கொண்டு வரும் போது இது அன்பளிப்பா? தருமமா? என்று அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார்.
.............................

இதை கவனத்தில் கொண்டு கீழுள்ள நபிமொழியைப் பாருங்கள்.

பாகம் 2, அத்தியாயம் 24,எண் 1495 அனஸ்(ரலி) அறிவித்தார்.

தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்' என்றார்கள்.
...........................

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5279

பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் 'பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)' என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் 'ஆம்! (இருக்கிறது)ஆனால், அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள் தாம் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு' என்றார்கள்.
....................

பரீரா என்ற நபித்தோழியருக்கு ஆட்டிறைச்சி தர்மமாக கிடைக்கின்றது. தர்மம் என்ற நிலையில் அது பரீராவுக்கு ஹலாலாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு ஹராமாகவும் இருந்தது. தனக்கு கிடைத்த தர்மத்தை பரீரா நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கின்றார். அதை நபி(ஸல்) பெற்றுக் கொண்டு (பிறருக்கு விளக்கமளித்து விட்டு) உண்கிறார்கள்.

இதிலிருந்து நமக்கு கிடைக்கும் வழி அனுமதிக்கப்பட்ட வழியா என்பதை மட்டும் பார்த்து விருந்தையோ - இதர எதுவொன்றையோ பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்கலாம்.

இதை இன்னும் சற்று விளக்கமாக சொல்வதென்றால் யுதர்கள் பற்றிய விளக்கத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

யுதர்கள் மீது வட்டி ஹராமாக்கப்பட்டது ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வட்டியில் மூழ்கினார்கள்.

وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُواْ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அல் குர்ஆன் 4:161)

பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2224
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.

யுதர்களைப் பொருத்தவரை அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது என்பதற்கு இந்த வசனமும் நபிமொழியும் சான்றாக உள்ளது.

இவர்களோடு நமக்குள்ள உறவைப் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது,

وَطَعَامُ الَّذِينَ أُوتُواْ الْكِتَابَ حِلٌّ لَّكُمْ
வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. (அல்குர்ஆன் 5:5) என்று குறிப்பிடுகின்றது. வேதக்காரர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்களைப் பற்றி குர்ஆன் 'அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது' என்று கூறிவிட்டு அவர்களின் உணவு உங்களுக்கு ஹலால் என்றும் குறிப்பிடுகின்றது.

இதிலிருந்து நமக்கு வரும் வழி அனுமதிக்கப்பட்ட வழியாக இருந்தால் நாம் சாப்பிடலாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்க முடிகின்றது.

எனவே ஹராமான வழியில் பொருள் திரட்டுபவர்கள் நம்மை விருந்துக்கு அழைத்தால் அதில் கலந்துக் கொள்வது பற்றி தடையொன்றும் இல்லை. அதே நேரம் அவர்களின் தவறை சுட்டிக்காட்டும் கடமையும் நமக்கு இருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Wednesday, February 27, 2008

முதலை - உடும்பு எதை சாப்பிடுவது?

ஒரு எகிப்து சகோதரர் முதலைக்கறி சாப்பிடலாம் என்று கூறுகிறார். இஸ்லாம் இதை அங்கீகரித்துள்ளது என்று கூறினார். நான் அவருக்கு இதை குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்க வேண்டும். இவர் ஒரு அரபியாக இருப்பதால் இவர் சொல்வதில் எனக்கு இன்னும் சந்தேகமாகவே உள்ளது. ஏன் எனில் உடும்பும், முதலையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகவே உள்ளது. இருப்பினும் வெவ்வேறு இடத்திலேயே வசிக்கின்றது. முதலையோ தண்ணீரில் வசிக்கின்றது. உடும்போ தண்ணீரில் இல்லாமல் நிலத்திலும் மரத்திலும் வசிக்கின்றது.

Name: abdul azeez
email: azeez1729@.....
Location: abudhabi habshan
Subject: Question

உயிரினங்களில் பறவையினங்களாகட்டும், மிருகங்களாகட்டும் இவைகளில் உண்ண அனுமதிக்கப்பட்டது அனுமதிக்கப்படாதது என்பதை ஒரு ஹதீஸின் துணையுடன் முழுவதுமாக விளங்கி விடலாம். அந்த ஹதீஸை விளங்கிக் கொண்டால் நமக்கு சந்தேகம் ஏற்படும் எந்த ஒரு உயிரினத்தையும் அது ஹலாலா அல்லது ஹராமா என்று நாமே தீர்மானித்துவிடலாம்.
............................

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5530 அபூ ஸஅலபா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.
........................
பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5780 அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ளவற்றை உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
........................

எந்த உயிரினத்திற்கு (குறிப்பாக விலங்குகளுக்கு) கோரைப் பற்கள் (இடது மற்றும் வலது புறங்களில் நீளமாகவும் கூர்மையாகவும் உள்ள இரு பற்கள்) உள்ளதோ அந்த உயிரினத்தை உண்ணக் கூடாது.

தண்ணீரிலும் தரையிலும் வாழும் சில உயிரினங்களைப்பற்றி முடிவு செய்யவும் நாம் இந்த அளவுகோலை எடுத்துக் கொள்ளலாம். முதலை கோரைப் பற்களுடன் பயங்கரமாக காட்சியளிக்கும் ஒரு உயிரினமாகும். அது தண்ணீரில் வாழ்ந்தாலும் அது கோரைப் பற்களைப் பெற்றுள்ளதால் அதை சாப்பிடக் கூடாது.

கடல்வாழ் உயிரினத்தைப் பொருத்தவரை முஸ்லிம் உம்மத்துக்கு ஹராமாக்கப்பட்டது என்று எதுவும் இல்லை. சுரா, திமிங்கலம் உட்பட எந்த மீனினத்தையும் சாப்பிடலாம். சிலர் அவற்றின் உருவங்களை காரணம் காட்டி சாப்பிடக் கூடாது என்று கூறுகிறார்கள். இவை அவர்களின் சொந்தக் கூற்றாகும். மார்க்கம் அவற்றை தடைசெய்யவில்லை.
.........................................

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2983 ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் முந்நூறு பேர் எங்கள் பயண உணவை எங்கள் பிடரியில் சுமந்து கொண்டு (புனிதப் போருக்காகப்) புறப்பட்டோம். எங்கள் பயண உணவு (நாளாக, ஆகக்) குறையலாயிற்று. எந்த அளவிற்கென்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பேரீச்சம் பழம் மட்டுமே உண்ண வேண்டிய நிலைக்கு ஆளாம் விட்டோம்... இதை ஜாபிர்(ரலி) அறிவித்துக் கொண்டிருந்தபோது ஒருவர், 'அபூ அப்தில்லாஹ்வே! (ஒரு நாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் ஒருவருக்கு எப்படிப் போதுமாகும்?' என்று கேட்டார். நாங்கள் பயண உணவை இழந்தபோது மிகவும் கவலையடைந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது திமிங்கல வகை மீன் ஒன்றைக் கண்டோம். கடல் அதை (கரையில்) எறிந்து விட்டிருந்தது. நாங்கள் அதிலிருந்து பதினெட்டு நாள்கள் நாங்கள் விரும்பியவாறு உண்டோம்.
.........................

கடல் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 5:96)

பசுமையான மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (திருக்குர்ஆன் 16:14).

இந்த வசனம் கடல் வாழ் உயிரினங்கள் எதுவும் தடை செய்யப்பட்டதல்ல என்பதை தெளிவாக விளக்குகின்றது. அதனால் தான் நபித்தோழர்கள் திமிங்கலத்தை உணவாக்கிக் கொண்டார்கள்.

நீரில் வாழும் உயிரினங்களைப் பொருத்தவரை பொதுவாக அனைத்தும் ஹலால் என்று எடு்த்துக் கொள்ள முடியும் என்றாலும் மற்றொரு குர்ஆன் வசனத்திலிருந்து ஒரு விதிவிலக்கைப் பெற்றுக் கொள்ளலாம்.

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன் 2:195)

இந்த வசனத்திலிருந்து எது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகின்றதோ அதை சம்பந்தப்பட்ட நபர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மீனினத்தில் ஒருவகை மீன் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றது என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அந்த மீனினத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.
கடல்வாழ் உயிரினத்தில பாம்பு போன்ற விஷஜந்துக்கள் இருந்தால் மேற்கண்ட வசன அடிப்படையில் அனைவருக்கும் அது ஹராமாகி விடும். முதலையை சாப்பிடக் கூடாது என்பதற்கு கூடுதலாக இநத வசனம் பொருந்தி விடும்.

உடும்பை பொருத்தவரை விரும்பியவர்கள் அதை சாப்பிட்டுக் கொள்ளலாம் தடையில்லை.
.....................
பாகம் 6, அத்தியாயம் 70, எண் 5391

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹ¤ஃபைதா பின்த் ஹாரிஸ்(ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா(ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் 'நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் 'உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
.........................

உடும்பு, வெட்டுக்கிளி போன்றவை உண்ணுவதற்கு ஏற்றதாகும்.

Wednesday, February 20, 2008

யானைகளைப் பார்க்காத அரபு சமுதாயம்

அன்பு சகோதரருக்கு

முஸ்லிம் சமுதாயத்தை சரியான விளக்கங்களுடன் நேர்வழி செல்ல உதவி புரிய, அல்லாஹ் தங்களை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அருள்புரிவானாக.

கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது "அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்" என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.

இதற்கான தகுந்த விளக்கங்கள் வேண்டும், நான் அவருக்கு தெளிவாக புரியவைக்க.

Name: ansar
email: hssnansar@...
Location: srilanka
Subject: Question

....................................

Sunday, February 17, 2008

இப்படி ஒரு ஸலவாத் உண்டா..?

அஸ்ஸலாமு அலைக்கும்

சலாத்துந்நாரியா என்ற ஸலவாத்தை ஒதலாமா அது ஒதுவது தவறா? சரியா? தாங்கள் இதற்கு நல்ல பதில் தரவேண்டும்.

Name: rahaman
email: rahamank_69@...

Location: porto novo
Subject: Kelvi
...................


ஆடியோவாக பதில் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சகோதரர் 'ளாபிர்' அவர்கள் கொடுத்த விளக்கம்



சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அளித்த விளக்கம்



Monday, February 11, 2008

இணைவைக்கும் இமாம்

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா...?

Name: meera hussain
email: nkmmeera@......
Location: india
Subject: Kelvi
.........................

Sunday, February 10, 2008

இறைத்தூதரும் குழந்தைத் திருமணமும்

அவர்களின் கேள்விகள்:

1) என்னிடம் நிறைய கேள்விகள் தங்களது பதிலுக்காக காத்திருக்கின்றன. எனக்கு எப்போது நேரம் கிடைக்கும்போது தங்களிடம் கேட்கிறேன். தயவு செய்து பதில் அளிக்கவும். அது பிறருக்கு பயனளிக்குமாயின் அதை தங்களது இணையதளத்தில் பதிப்பிக்கவும்.

கேள்வி: ஒரு கிறிஸ்தவர் கூறினார்…, அல்லாஹ், முஸ்லிம்கள் திருமணம் செய்துகொள்வதற்கு அதிலும் ஒரு வயதுள்ள குழந்தைகளையும் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளான் என்று ஒரு இமாம் அவருக்கு கூறியதாக கூறினார். ஏனெனில் நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் 54 வயதுடயவர்களாக இருக்கும் போது 9 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டார்கள். இதனடிப்படையில் அவர் இந்த கேள்வியை கேட்கிறார். இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை எனக்கு தரவும் ஏனெனில் நான் அவருக்கு இதைப்பற்றி தெளிவாக விளக்குவதற்கு ஏதுவாக இருக்கும்.
Name: ansar

email: hssnansar@……
Location: srilanka
Subject: Question
--------------------------------------------------------------------------------
2) எனக்கு இஸ்லாத்தைப் பற்றி நிpறைய கேள்விகள் உண்டு. அதற்கு போகுமுன் என்னுடைய நிலைமையைத் தெரிவிக்கிறேன். எல்லா முக்கியமான மதங்களைப்பற்றியும் எனக்கு தேவைப்படும் அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகு எல்லா மதங்களுமே மனிதனால்தான் இயற்றப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.


கடவுள் இருந்தாலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் எந்தவிதத்திலேயும் ஒரு மதம் மற்றவற்றை விட உயர்ந்தாக இருக்க முடியாது. எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் எல்லா மதங்களிலும் நல்லதைச் சொல்வதுபோல் கெட்டதையும் சொல்கிறது. நீங்கள் இந்த கருத்தில் மாறுபடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் உங்களிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
குர்ஆனை நான் பார்ப்பதற்கு முன்னால் எனக்கு நபிகளைப் பற்றியும் அவர்களுடைய நபித்துவத்தைப் பற்றியும் சந்தேகம் உள்ளது. மேலும்

ஏன் அவர் வன்முறையை பரப்பினார்?

ஏன் தனது 54வது வயதில் ஆறு வயது சிறுமியை மணந்து 9 வயதில் அவருடன் உறவு வைத்துக் கொண்டார்? 1400 வருடங்களுக்கு முன் உள்ள கலாச்சார முறையாக இருப்பினும் நபி என்பவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா?மேலும்,

ஏன் இஸ்லாமிய மதம் எந்த விதமான கேள்விகளுக்கும் இடம் கொடுக்காமல் நம்பவேண்டும் என்கிறது. மேலும் கேள்வி கேட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்பது சர்வாதிகார முறையில் அமைந்திருக்கிறது.

உங்களை குறைசொல்ல வேண்டும் என்று இதை நான் கேட்கவில்லை மாறான உண்மையாக இந்த கேள்விகள் என்னுள் எழுகின்றபடியால் கேட்டிருக்கிறேன். பதில் தரவும்.
annapala@…..au


சிந்தனை மற்றும் பகுத்தறிவு ரீதியாக எதையும் அலசிப் பார்க்கும் மனோ பக்குவத்திற்கு தடைப் போடும் எந்த சித்தாந்தத்தின் மீதும் (அது இஸ்லாமாக இருந்தாலும் சரி) எங்களுக்கு நம்பிக்கையில்லை என்ற கொள்கையுடன் உங்களை இதுதான் இஸ்லாம் இணையத்திற்குள் வரவேற்றுக் கொள்கிறோம்.தேவையான அளவு அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மதங்களை அணுகுவது ஒரு ஆரோக்யமான நிலையாகும். அறிந்துக் கொண்டதை பகிர்ந்துக் கொள்வதும், அறிந்துக் கொண்டதில் வரும் சந்தேகங்களை மேலும் தெளிவுப்படுத்திக் கொள்வதும் அதன் மீது நமக்குள்ள ஈடுபாட்டின் அடையாளம் என்பதால் அந்த மனநிலை ஒரு பரந்த சிந்தனையாளனுக்குரியதாகவே இருக்கும்.

இதில் நீங்கள் மூன்று கேள்விகளை வைத்துள்ளீர்கள்.

1) நபி ஏன் வன்முறையைப் பரப்பினார்?

2) 6 வயது சிறுமியை ஏன் திருமணம் செய்தார்?

3) இஸ்லாம் கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் சர்வாதிகாரத்துடன் எதையும் நம்பச் சொல்வது ஏன்?

இவற்றில் மூன்றாவது கேள்வியை முதலில் எடுத்துக் கொண்டால் தான் மற்ற இரண்டிற்கும் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இஸ்லாம் கேள்விகளுக்கே இடம் கொடுக்காது என்பது உண்மை என்றால் மற்ற இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டு விடும். அதனால் மூன்றாவது கேள்வியை முதலில் பரிசீலிப்பது தான் பொருத்தமானதாகும்.

விருப்பு - வெறுப்பு இன்றி நீங்கள் திறந்த மனதுடன் மதங்களை அணுகுவீர்கள் என்றால் கேள்விகளால் நிறைந்த மார்க்கமும் வளர்ந்த மார்க்கமும் இஸ்லாம் ஒன்றுதான் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துக் கொள்வீர்கள். ‘நாங்கள் இப்படித்தான் பதில் சொல்வோம்’ என்று அவசரப்பட்டு எங்களைப் பற்றி முடிவெடுத்து விடாமல் சற்று நிதானத்துடன் தொடருங்கள்.
ஹிந்துத்துவம் - கிறிஸ்த்துவம் - இஸ்லாம் இந்த மூன்றும் பெரிய மதங்களாகும். (கேள்விகளுக்கு இடங்கொடுக்கும் பக்குவம் கம்யூனிஸத்தில் இருந்தாலும் அது தன்னை மதம் என்று அறிமுகப்படுத்தாததால் அதை இங்கு சற்று தள்ளி வைப்போம்) இந்த மூன்று பெரிய மதங்களில் அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், செயலாக்கங்கள், வழிகாட்டிகள் (வேதங்கள் - அதை விளக்குபவர்கள்) இவற்றின் மீது உலகில் நடக்கும் வாதங்களையும் அந்த வாதங்களை சந்திப்பவர்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது,ஹிந்துத்துவத்திலும் - கிறிஸ்த்துவத்திலும் (நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி) கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டும் என்ற நிலை இருப்பதை உணர்வீர்கள்.

இஸ்லாத்தில் அந்த நிலை இல்லை. இதற்கு மிக சிறிய அளவில் ஓர் உதாரணம் சொல்ல முடியும். இதுதான் இஸ்லாம் என்ற இந்த இணையத் தளம் உட்பட தமிழில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பல இணையங்கள் உள்ளன. அவற்றில் பல தளங்கள் ‘மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்’ என்ற வசதியை செய்து வைத்துள்ளன. இது போன்ற வசதி பிற மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த மதங்கள் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்).

ஹிந்து மதத்திற்கென்று ஆன்மிக பிரச்சாரவாதிகள் (காஞ்சி பெரியவாள்) உட்பட எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் கேள்விக் கேட்கலாம். ஆனால் அந்தக் கேள்விகள் அவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர விவாதித்து மேலும் தெளிவுப் பெறும் வகையில் அமைந்திருக்கக் கூடாது. (சிலை வணக்கம் - பெண்ணியம் - மறுஜென்மம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்).

பால் தினகரன் உட்பட அதே அடிப்படையில் அமைந்த பல குழுக்கள் கைகளில் பைபிளை வைத்துக் கொண்டு ‘கர்த்தரை விசுவாசியுங்கள்’ என்ற பிரச்சாரத்தை முன் மொழிந்துக் கொண்டிருக்கின்றன. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு அற்புதங்கள் பற்றிக் கூறவும் அவர்களில் பலவீனமானவர்களை அழவைக்கவும் தான் இவர்களால் முடியுமே தவிர ”எவரும் கிறிஸ்த்துவம் பற்றி, பைபிள் பற்றி இங்கு பகிரங்கமாகக் கேள்விக் கேட்கலாம்” என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. (அவர்களின் பணிகளை குறைச் சொல்வதற்காக இதை நாம் இங்கு குறிப்பிடவில்லை. கேள்விகளுக்கு இடங்கொடுக்காத நிலையை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் குறிப்பிடுகிறோம்).

இஸ்லாத்தை குர்ஆனிலிருந்தும் நபியின் வாழ்விலிருந்தும் கற்றுணர்ந்த அடிப்படைவாதிகள் மாற்றுக் கொள்கையுடையவர்களிடமிருந்து கேள்விகளை சந்திப்பதில் சற்றும் சலைத்தவர்களல்ல. ஏனெனில் இஸ்லாம் வளர்ந்தது அந்த அடிப்படையில் தான்.

‘நீங்கள் அறியாதவற்றை வேதஞானம் உள்ளவர்களிடம் கேள்விக் கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்’ என்கிறது குர்ஆன். (16:43)

கேள்வி ஞானம் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள மார்க்கத்தில் போய் ‘கேள்வி ஞானத்திற்கு இடமில்லை’ என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்?

‘இறைவனின் வசனங்கள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டால் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் அதன் மீது அடித்து விழ மாட்டார்கள்.(மாறாக அந்த வசனம் குறித்து சிந்தித்து செயல்படுவார்கள்) (அல் குர்ஆன் 25:73).

சிந்தனையின் வாசல் திறந்தே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் இந்த வசனமும்,கேள்விகளின்றி மத போதகர்கள் சொல்வதை அப்படியே ஏற்பது மனிதனை கடவுளாக்கும் பாவச் செயலாகும் என்று இறைத்தூதர் எச்சரித்துள்ளதும் ‘இஸ்லாம் கேள்விகளுக்கு இடமிளிப்பதில்லை’ என்ற கருத்தில் இருப்பவர்களின் சிந்தனைக்குரியதாகும்.

அது மட்டுமின்றி குர்ஆனை நீங்கள் மேலோட்டமாகப் படித்தால் கூட ‘அது மூன்று கொள்கையுடையவர்களை சந்தித்ததையும் - அவர்களின் கொள்கைத் திரித்தல்கள், அதில் ஏற்படுத்திய இடற்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டி விமர்சித்துள்ளதையும் காண்பீர்கள்.அந்த மூன்றுக் கொள்கையாளர்கள்.

1) மக்கா நகரில் வாழ்ந்து வந்த சிலை வணக்கக் கொள்கையுடையவர்கள்.
2) மதீனாவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழ்ந்து வந்த யூதர்கள்.
3) கிறிஸ்த்துவர்கள்.

விமர்சனங்களை வெளிப்படுத்துவதும் - விமர்சனங்களை சந்திப்பதும் கேள்வி ஞானம் உள்ள இடங்களில் மட்டும் தான் நிகழும் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால் உலக அளவில் உள்ள மாற்றுக் கொள்கையுடையவர்களை கொள்கை ரீதியாக துணிச்சலுடன் விமர்சிக்கும் குர்ஆனில் - இஸ்லாத்தில் எத்துனை கேள்வி ஞானத்திற்கு இடமிருக்கும் என்பதை புரிந்துக் கொள்வீர்கள்.

எனவே ‘இஸ்லாம் கேள்விகளுக்கு இடங்கொடுப்பதில்லை’ என்ற வாதம் தவறானது என்பதை முதலில் கூறிக் கொள்கிறோம்.இரண்டு கேள்விகள், அது குறித்த சர்ச்சைகளில் மட்டும் தான் ஈடுபடக் கூடாது என்று தடை வந்துள்ளது அவை,
ஒன்று - விதி,
இரண்டு - இறைவனின் பிறப்பு.

இவை விடைகளுக்கு அப்பாற்பட்ட கேள்விகள். இவை இரண்டைத் தவிர வேறு எது பற்றி வேண்டுமானாலும் - எத்தகைய கேள்விகளையும் - விமர்சனங்களையும் இஸ்லாத்தின் மீது வைக்கலாம். அவற்றிற்கு முறையான பதில் இஸ்லாத்தில் உண்டு.

நீங்கள் சில முஸ்லிம்களிடம் கேள்விக் கேட்டு அவர்கள் பதில் சொல்லாமல் போயிருக்கலாம். அத்தகைய முஸ்லிம்களை நீங்கள் சந்தித்தால் ‘அது அவர்களின் கல்வியின் குறைப்பாடு’ என்று விளங்கிக் கொள்ளுங்கள். அவர்களின் குறைப்பாட்டை இஸ்லாத்தின் குறைப்பாடாக முடிவு செய்ய வேண்டாம். இதுவே உங்கள் மூன்றாவது கேள்விக்குரிய பதிலாகும்.

2) நபி ஏன் வன்முறையைப் பரப்பினார்?

தனி மனிதருக்கும் - ஆட்சியாளருக்கும் உள்ள வித்தியாசத்தையும்,கலகத்துக்கும் - போருக்கும் உள்ள வித்தியாசத்தையும் அறியாதவர்கள் மட்டுமே இது போன்ற வாதத்தை எடுத்து வைப்பார்கள்.இயேசு போர் செய்யவில்லை என்பது உண்மை. சமாதான வாழ்வையே அவர் விரும்பினார் என்பதும் உண்மை. இதை காரணம் காட்டி ஒரு கிறிஸ்த்துவர் இயேசுவிடம் இல்லாத முரட்டுக் குணம் முஹம்மதிடம் இருந்தது என்று கூறினால் (அவ்வாறு பரவலாக கூறத்தான் செய்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தக் கேள்வி) நிச்சயம் அவரது அறியாமைக்கு நாம் அனுதாபப்படுவோம்.

தம்மைத் தாக்க வருபவர்களை - தமக்கு சொந்தமான ஒன்றை அபகரிக்க வருபவர்களை ஓர் ஆட்சியாளர் எதிர்த்துப் போராடுவது வன்முறை என்றால் ‘போர்’ என்ற சொல்லை நாம் தமிழ் மொழியிலிருந்து எடுத்து விடத்தான் வேண்டும். முதலாம் உலக (ப்போர்) வன்முறை, இரண்டாம் உலக (ப்போர்) வன்முறை, கார்கில் வன்முறை, வளைகுடா வன்முறை என்று போர்கள் அனைத்தையும் வன்முறையாக மாற்றியாக வேண்டும்.ஒரு நாட்டுடைய ராணுவம் தங்களுடைய எதிரிகளை களத்தில் சந்திப்பதை ‘வன்முறை’ என்று நீங்கள் கருதுவீர்களா..? சுதந்திரப் போராட்டத்தில் போராடி மடிந்தவர்களையும் - கார்கிலில் போராடி உயிர் நீத்தவர்களையும் ‘வன்முறையாளர்கள் ஒழிந்தார்கள்’ என்று பாராட்டுவீர்களா..? வெள்ளையர்களுக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஒருங்கிணைத்த தேசிய ராணுவத்தை ‘வன்முறையார்கள்’ என்று வர்ணிப்பீர்களா..?

இதுவெல்லாம் வன்முறை என்பது உங்கள் எண்ணம் என்றால் முஹம்மத் வன்முறையாளர் என்ற உங்கள் கருத்தும் உண்மைதான். ராணுவமும் - போரும் வன்முறையல்ல என்று நீங்கள் வாதித்தால் முஹம்மத் என்ற ஓர் ஆட்சியாளர் தலைமையில் இயங்கிய இஸ்லாமிய ராணுவத்தையும் அவர்கள் சந்தித்தப் போர்களையும் மட்டும் எப்படி வன்முறை என்று கருதுகிறீர்கள்?

மதீனா என்பது இஸ்லாமிய ஆட்சியாளர் ஆட்சிப் புரியும் ஒரு நாடு. இங்கு இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்னால் அந்த ஆட்சியாளரும் அவரைச் சார்ந்த கனிசமான மக்களும் தமது சொந்த பூமியிலிருந்து (மக்காவிலிருந்து) நாடு துறந்து வெளியேறுகிறார்கள். பத்தாண்டு காலம் பெரும் துன்பங்கள் அனைத்தையும் சகித்து - இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்து - கொள்கை ஒன்றுதான் முக்கியம் என்ற உறுதியுடன் அகதிகளாக அந்நிய மண்ணுக்குச் செல்கிறார்கள். இவர்களின் கொள்கையும் வாழ்க்கையும் பரிசுத்தமானது என்பதை உணர்ந்த - விளங்கிய அந்த மண்ணின் மக்கள் தங்களின் ஆளுமைக்குரியவராக இறைத்தூதரை நியமித்துக் கொள்கிறார்கள்.
இறைத்தூதர் ஆட்சியாளராக ஆன பிறகு எல்லா நாடுகளும் (இன்றைக்கும்) சந்திக்கும் அச்சுறுத்தல்களை அந்த நாடும் சந்தித்தது, எதிரிகளின் கூடுதல் வெறித்தனத்துடன். எதிரிகளிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக ஓர் ஆட்சியாளர் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் முஹம்மத் என்ற அந்த இறைத் தூதரும் செய்தார்கள். இதைத்தான் நீங்கள் வன்முறை என்கிறீர்களா..?

மனிதத்துவத்திற்கும் - மனித நேயத்திற்கும் எதிராக முஹம்மத் நடந்தார் என்பதற்கு வரலாற்றிலிருந்து ஒரேயொரு சம்பவத்தைக் கூட யாராலும் காட்ட முடியாது. காரணம் அவர் சாதாரண மனிதரல்ல. அவர் ஓர் இறைத்தூதர்.

முஹம்மத்(ஸல்) அவர்கள் சந்தித்தவைகள் அனைத்தும் போர்கள் தான் என்றாலும் இதர ஆட்சியாளர்களின் போர் குணங்களுடன் எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் சந்தித்தப் போர்களில் அனேக நியாயங்கள் இருந்தன.

நாடு பிடிக்கும் பேராசையுடன் உலகை வளம் வந்த நெப்போலியனை ‘மாவீரன் நெப்போலியன்’ என்கிறது உலகம். அக்கம் பக்கம் ஆட்சிப் புரிந்த சிற்றரசர்களையெல்லாம் கருவறுத்து - பெண்களை நாசமாக்கி - யானைப் படை, குதிரைப் படைகளால் விளைச்சல் நிலங்களையெல்லாம் அழித்தொழித்து உலா வந்தவர்களையெல்லாம் வரலாற்று வீர நாயகர்களாக எழுதி வைத்துள்ளோம். (தேவைப் பட்டால் விபரங்கள் வெளியிடுவோம்) ஆனால் முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் சந்தித்தப் போர்களில் இத்தகையப் பேராசையில் - வரம்பு மீறலில் ஒன்றையாவது காட்டமுடியுமா..? போர்களங்கள் தவிர இதர நேரங்களில் அந்தத் தலைவரும் இதர ராணுவ வீரர்களும் ‘வாளெடுத்த’ சம்பவம் ஒன்று உண்டா..?

ஓர் ஆட்சித் தலைவராக அவர் சந்தித்த தற்காப்புப் போர் - மற்றும் சில அவசியப் போர்களைத் தவிர அந்த சகிப்புத் தன்மை மிக்க மாமனிதரிடம் வேறென்ன வன்முறை இருந்தது? அவர் ஈடுபட்ட வன்முறையை ‘இது’ என்று குறிப்பிட்டு சுட்டிக் காட்டுங்கள். அது பற்றி விவாதிப்போம்.

3) உங்களின் அடுத்த சந்தேகம் நபி ஏன் 6 வயது சிறுமியை திருமணம் செய்து ஒன்பது வயதில் உறவு வைத்துக் கொண்டார்? நபி என்பவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா?

இந்த சந்தேகத்தில் உள்ள நியாயத்தை நாம் மறுக்க மாட்டோம். இது நியாயமான சந்தேகம் என்பதால் இது பற்றிய கூடுதல் தெளிவை நாம் பெற்றுதான் ஆக வேண்டும்.

பால்ய விவாகம் தவறு என்பது இன்றைய சிந்தனையே!

பால்ய விவாகம் தவறு என்பது சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சிந்தனையாகும். அதற்கு முன் இது குறித்த சிந்தனையே மக்களிடம் இருக்கவில்லை என்று கூறலாம். இந்த சிந்தனை ஏற்பட்டப் பிறகும் கூட பால்ய வயது என்பதில் ‘வயதை’ தீர்மாணிப்பதில் இன்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும் வேறுபாடு இருந்தது.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கூட 8 வயது பெண்ணை மணக்கலாம் என்ற சட்டம் இந்தியாவில் இருந்தது. புகழ் பெற்ற பாரதியார் கண்ணம்மாவை திருமணம் முடிக்கும் போது கண்ணம்மாவிற்கு வயது 8 என்பதை இங்கு நினைவுக் கூறலாம். திருமண வயது 13 என்றும் 16 என்றும் 18 என்றும் 21 என்றும் மாற்றங்கள் நடந்தது கடந்த 25 - 30 ஆண்டுகளுக்குள் தான்.

பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத - தவறாகக்கூட கருதப்படாத - ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.

கம்யூனிஸ சிந்தனையே முன்வைக்கப்படாத ஒரு காலகட்டத்தைப் பற்றி இன்றைக்கு ஒரு கம்யூனிஸவாதி ‘அவர்கள் ஏன் கம்யூனிஸ சிந்தனையைப் பின்பற்றவில்லை?’ என்று கேட்டால் அது எப்படி பொருத்தமற்றதோ அது போன்றதுதான் இதுவும். ஒரு காரியம் தவறு என்று தெரிந்த பிறகு அந்தக் காரியத்தை செய்தால் தான் அது தவறு என்ற நிலையைப் பெறும். இறைத்தூதர் ஆய்ஷாவை திருமணம் செய்தது தவறு என்றே கருதப்படாத காலத்தில் நடந்ததாகும். இது முதலாவது பதிலாகும்.

உறவு முறையை வலுப்படுத்திக் கொள்ளுதல்.

மனதிற்கு பிடித்த நல்லவர்களுடனான உறவை பலப்படுத்திக் கொள்வதற்கு விருப்பமில்லாதவர் என்று உலகில் யாரும் இருக்க முடியாது. உறவை எந்த வகையிலெல்லாம் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதை நடைமுறைப் படுத்துபவர்களும் உலகில் ஏராளமாக உள்ளனர். உறவு முறையை வலுப்படுத்துவதில் உலகில் முக்கியப் பங்கு வகிப்பது திருமண பந்தமாகும்.

பல மாதங்களுக்குப் பின் - பல வருடங்களுக்குப் பின் நடக்கவிருக்கும் திருமணங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் பிறந்தக் குழந்தையைக் கூட இன்னாருக்கு என்று முடிவு செய்யப்பட்டு விடுவதை பரவலாகப் பார்க்கலாம்.

‘அக்காள் மகள் மாமனுக்குத் தான்’ என்ற ஹிந்து பாரம்பரியம் நீடிப்பதை நாம் கண்டு அனுபவிக்கிறோம். தம்பியோடு - சகோதரனோடு உள்ள குடும்ப உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே இத்தகைய திருமண உறவுகள் நீடிக்கின்றன. இவைகளையெல்லாம் மனதில் நிறுத்திக் கொண்டு ‘முஹம்மத் - ஆய்ஷா’ திருமணத்தை அணுகுவோம்.

வேறு எவரும் விஞ்ச முடியாத அளவிற்கு முஹம்மத் அவர்களின் மீது பாசத்துடன் இருந்தவர் அபூபக்கர் என்ற நபித்தோழர். சுக துக்கம் அனைத்திலும் தோளோடு தோள் நின்று இறைத்தூதரோடு தன் வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொண்டவர். இந்த உறவு இன்னும் வலுப்பட விரும்பியே தனது மகளை இறைத்தூதருக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்கள்.

திருமணம் என்ற ஒப்பந்தத்துடன் அன்றைக்கு அது நடந்தாலும் இன்றைக்கு நிச்சயதார்த்தத்தின் நிலை என்னவோ இதேதான் அன்றைக்கு நடந்த அந்த திருமணத்தின் நிலையுமாகும். பெயருக்கு அது திருமணமாக இருந்தது.

ஒரு பெண் பருவமடைதல் (வயதுக்கு வருதல்) என்பது அவள் தாய்மையடையும் பக்குவத்திற்குரிய அடையாளமாகும். அதன் பின்னரே அன்றைக்கு இல்லறம் துவங்கியது.

முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் - சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.

இல்லறம் மட்டுமே குறிகோளல்ல.

என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே.. என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

அந்தத் தேவை என்ன?

இறைவன் புறத்திலிருந்து மனித சமுதாயத்திற்காக வந்துக் கொண்டிருந்த தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் நபி அவர்கள். அவர்கள் மொத்த மனித சமுதாயத்திற்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அதனால் அவர்களின் பணி விசாலமானதாகவும் - விரிவானதாகவும் இருந்தது. அவர்களின் முழு வாழ்க்கையும் அகில உலகின் முன்னும் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகியது. அவர்களின் வெளியுலக வாழ்க்கையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் இருந்தார்கள். வீட்டிற்குள் வாழும் வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டுமானால் மனைவி என்ற அந்தஸ்த்தில் வாழ்பவரால் மட்டும் தான் முடியும். அந்த வகையில் சுறுசுறுப்புமிக்க கண்காணிப்புத் திறனும், நினைவாற்றலும் - மிக்க மனைவி தேவைத்தான் என்பதால் அதற்கு பொருத்தமானவராக ஆய்ஷாவை அவர்கள் கண்டதால் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

முஹம்மத் - ஆய்ஷா இவர்களுக்கு மத்தியில் நடந்த வாழ்க்கையை வெறும் திருமணம், இல்லறம் என்று மட்டும் பார்க்காமல் அதில் பொதிந்துள்ள இந்த உண்மைகளை விளங்கினால் அந்த உறவின் அவசியத்தில் யாரும் குறைக் காண முடியாது. காரணம், இந்த உலகில் - நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடந்த தனது இல்லற வாழ்க்கையின் நல் அமசங்களைக் கூட மனித சமுதாயத்திற்கு பயனளிக்கக் கூடிய வகையில் பகிரங்க பிரகடனம் செய்ய வேறு எந்தத் தலைவராலும் முடியாது. இறைவனின் இறுதித் தூதரைத் தவிர.
--------------------------------------------------------------------------------
பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன. திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.ஆனாலும் பால்ய வயது என்னவென்பதை தீர்மானிப்பதற்கு உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

Friday, February 8, 2008

இந்தக் காதலுக்கு என்ன பதில்?

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாம் காதல் திருமணத்தை அனுமதிக்கின்றதா? ஏன் என்றால் நான் ஒரு மாற்றுமத பெண்ணை விரும்புகிறேன். அவள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் நிச்சயமாக நான் அவளை திருமணம் செய்து கொள்வேன். இருப்பினும் இதுவரை நான் அவளை இஸ்லாத்தை ஏற்குமாறு சொல்லவில்லை. இது போன்ற சூழ்நிலையில் இஸ்லாம் என்ன சொல்கின்றது? அந்த பெண்ணின் கவர்ந்த பார்வையிலிருந்து / அழகிலிருந்து விலகிக்கொள்ள ஏதேனும் துஆ உள்ளதா?

Name: riyaaz
email: riy_z@.....
Location: chennai
Subject: ques..
.................................

ஆண்களும் பெண்களும் இரண்டற கலந்து - அதிலும் பெண்கள் கவர்ச்சி மிகு ஆடைகளை உடுத்திக் கொண்டு உலவும் - சமூகங்களில் வாழக் கூடிய முஸ்லிம்கள் இறை நம்பிக்கையும் கட்டுப்பாடும் நிறைந்தவர்களாக வாழ வேண்டும். இதில் இடற்பாடோ குறைப்பாடோ ஏற்படும் போது 'இத்தகைய' காதலும்? வரும். காதலைக் கடந்த நிலைகளும் வரும்.

கால மாற்றங்களால் காதலும் மாறிப்போய் விட்டதை நாம் சொல்லி்த் தெரிய வேண்டியதில்லை. கணடதும் காதல் என்பதும், காதலின் அர்த்தம் கலவிக்கு இடம் தேடுவதுதான் என்பதும் இன்றைய பெரும்பாலான காதல்களின் பொதுவிதியாகி போய் விட்டது.

உலகெங்கும் அங்கீகரிக்க்ப்பட்டு விட்ட ஒரு திறந்த நிலை விபச்சார நாளுக்கு 'காதலர்தினம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த நாளுக்காக திரையரங்குகளும், ஹோட்டல் ரூம்களும், பார்க், கடற்கரையின் ஒதுங்குப்புறங்களும், பிறரின் தொந்தரவு இல்லாத ஒதுங்குப்புறங்களும் காதலரர்களால் 'புக்' பதிவு செய்யப்படுகின்றன.

டிஸ்கோதேக்கள், பார்கள், கிளப்கள் அன்றைய தினம் நிறைந்து வழியும். விடிய விடிய குடி கூத்து கும்மாளம் என்று பொழுது நகரும். அன்றய தினம் இங்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தால் வந்துள்ள அவ்வளவு பேருமே 'காதலர்களாக?ஸ இருப்பார்கள்.

அழகுப் பெண்ணின் தாயார் என்றால் அத்தையாக்கிக் கொள்ளும் காதலையும், பாவாடை தாவணி கிடைக்கலைன்னா சுடிதார் பொண்ணை லவ் பண்ண தூண்டும் காதலையும் திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கின்றன. திரைப்படங்கள் சொல்லும் காதல்கள்தான் உண்மையான காதல் இலக்கணம் என்றே இன்றையக் காதலர்கள் நம்புகிறார்கள். அதுவே அவர்களின் காதல் உணர்வாக இருக்கின்றது.

அதன் விளைவுதான் யார் யாரை வேண்டுமானாலும் 'லவ்' பண்ணலாம் என்ற நிலைக்கு இளைஞர்களையும், இளைஞிகளையும் தள்ளுகின்றது.

இஸ்லாம் காதலுக்கு எதிரானதல்ல. காதல் என்றால் என்னவென்று தீர்மானிப்பதில் இஸ்லாம் வேறுபடுகின்றது.

திருமண வாழ்க்கை என்பது சந்தோஷி்ப்பதற்குதான். சந்தோஷம் வேண்டுமானால் மனதிற்கு பிடித்த துணை வேண்டும். அதனால் தான் 'மன விருப்பமான' திருமணங்களையே இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

فَانكِحُواْ مَا طَابَ لَكُم (உங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்துக் கொள்ளுங்கள், அல்குர்ஆன் 4:3) என்ற உரிமையையே இஸ்லாம் வழங்குகின்றது.

பிடித்தமானவர்கள் என்று இறைவன் சொல்லி இருந்தாலும், பிடித்தமானவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறான். திருமண வாழ்க்கை என்பது சந்தை வாழ்க்கையாக, கூடி களையக் கூடிய வாழ்க்கையாக ஆகிவிடக் கூடாது. அது பாரம்பரியத்தையும் பிறருக்கு நல்லப் பாடத்தையும் உணர்த்த வேண்டும். அதற்கு தேவையான, பிடித்தமான பெண் வேண்டுமானால் இறைவன் சொல்லும் இலக்கணத்துக்குரியவர்களே பொருத்தமாக அமைவார்கள்.

وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ (இறைவனுக்கு இணைத்துணை, மனைவி மக்கள் என்று நம்பி) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் ஓரிறை நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். (அல் குர்ஆன் 2:221)

இந்த வசனத்திலிருந்து பிற மதப்பெண்களால் நாம் கவரப்படுவோம் என்பது விளங்குகின்றது. (சகோதரர் ரியாஸ் போன்றவர்களின் காதல் சொல்லும் பாடம்). ஆனாலும் ஒரு முஃமின் அந்தக் கவர்ச்சியில் மயங்கி தன்னை அந்த நிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது.

அவர்கள் ஓரிறைக் கொள்கையால் கவரப்பட்டு மனமாற்றம் அடைந்தால் அப்போதுதான் அவர்களுடனான திருமண உடன்படிக்கையை இஸ்லாம் அங்கீகரிக்கும். அதுவரை அவர்கள் எத்துனைப் பேரழகியாக, படித்தவர்களாக, பணக்கார்களாக, பண்புள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்களுடனான வாழ்க்கைத் துணைக்கு பொருந்தாதவர்கள் என்பதை முஸ்லிம் இளைஞர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

விழியில்விழுந்து
இதயம் நுழையும் காதல்
உயிரில் கலந்த
உறவாக ஆக வேண்டுமானால்
அது உயர்வான இறைவனின்
வழிகாட்டுதலில் வந்தால்தான் நடக்கும்.

சகோதரர் ரியாஸ் போன்றவர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை. நீங்கள் விரும்பும் பெண்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், ஓரிறைக் கொள்கைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். அந்தக் கடமை நமக்கு உண்டு. இறைவன் நாடி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாம் சொல்லும் வரைமுறையில் நின்று பழகி திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.

முடியாத பட்சத்தில், நம் பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டு ஒதுங்கிச் செல்வதுதான் நமக்கு மேல்.

Thursday, January 31, 2008

ஆன்மீக உறுதிமொழி (பைஅத்) பிறரிடம் எடுக்கலாமா..?

பையத் என்றால் என்ன? சில சகோதரர்கள் மற்ற சிலருக்கு பையத் கொடுக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள் நாம் வலியுல்லா, சூபி, தேவதைகள் (Angels)...ஆகியோர்களை பின்பற்றவேண்டும் என்று. இதற்கு தங்களது பதில் தேவை. பிளீஸ்...

Name: Mohamed Salman
email: salman.mhmd@yahoo.co.in
Location: Chennai
Subject: Question

பைஅத் என்ற அரபு பதத்திற்கு உடன்படிக்கை என்றுப் பொருள். இந்த உடன்படிக்கையை நாம் இரண்டு விதமாக பிரிக்கலாம்.

ஒன்று உலகத்திற்கான, உலகம் சார்ந்த உடன்படிக்கை.
மற்றொன்று இறைவனுக்கான, ஆன்மீகம் சார்ந்த உடன்படிக்கை.

நீங்கள் ஆன்மீக உடன்படிக்கை (பைஅத்) பற்றிக் கேட்டுள்ளீர்கள். ஆன்மீக உடன்படிக்கையை இன்று யாரும் யாரிடமும் செய்ய முடியாது, செய்யக் கூடாது. இது பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

இறைவனின் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் விஷயத்தில், அவனைப் பற்றி சிந்திக்கும் விஷயத்தில், அவனை புரிந்துக் கொள்ளும் விஷயத்தில் மனிதர்களுக்கு - முஸ்லிம்களுக்கு - மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு காரணம் மனித அறிவின் பலவீனங்களேயாகும். எல்லா மனிதர்களும் சமமான அறிவுள்ளவர்களாகத்தான் படைக்கப் படுகிறார்கள். அதை பயன்படுத்தும் முறையை பொருத்து, பக்குவப்படுத்தும் முறையை பொருத்து மனிதர்கள் பெரும் வேறுபாட்டை அடைகிறார்கள் என்பதை நாம் கண்டு அனுபவித்து வருகிறோம். இந்த வேறுபாடுகளை அவர்கள் கற்கும் கல்வி, கிடைக்கும் அனுபவம், இருக்கும் சூழ்நிலை, சுற்றி வாழும் சமூகங்கள் ஆகியவையே தீர்மானிக்கின்றன.

இறைவனையும், இறைத்தூதர்களையும், இஸ்லாத்தையும் புரிந்துக் கொள்ளும் விஷயத்திலும் மனிதர்களுக்கு மத்தியில் பாகுபாடு நிலவுவதற்கு நாம் மேலே குறிப்பிட்டவையே காரணங்களாகும். இந்த சாதாரண விஷயத்தை விளங்க முடியாதவர்கள் தான் முரீது என்ற அத்வைத கோட்பாட்டில் தன் ஈமானை இழந்து நிர்ப்பவர்கள்.

பாதை தெரியாமல் பயணிக்கும் தளமாகவே இந்த உலக வாழ்க்கையுள்ளது. மனிதன் சுயமாக சிந்தித்து விளங்க முடியாத பெருத்த இடற்பாடுகளும் குறுக்கீடுகளும் இந்த தளத்தில் உள்ளன. எனவே அவனை வழி நடத்தவும் போய் சேரக்கூடிய இலக்கை அறிவித்துக் காட்டவுமே இறைவன் புறத்திலிருந்து வேதங்கள் வந்தன. அதன் படி வாழ்ந்துக் காட்டவும் வழி நடத்தவும் தான் இறைத்தூதர்கள் வந்தார்கள். இறைவனை விளங்கி புரிந்துக் கொள்வதற்குறிய சரியான அளவு கோலை நம்மைப் போன்ற மனிதர்களாக இருந்த இறைத்தூதர்களிடமிருந்துதான் பெற முடியும். அவர்களல்லாத வேறு வழியில் பெறுவதற்கு எந்த வித சாத்தியக் கூறும் இல்லை.

அந்த இறைத் தூதர்களில் யாருமே,

நாங்கள் இறைவனைக் காட்டுகிறோம் என்று கூறவில்லை.

இறைவனும் மனிதனும் இரண்டற கலந்து விட முடியும் என்று கூறவில்லை

இறைவனுக்கும் எங்களுக்கும் அந்தரங்க தொடர்பு உண்டு என்றுக் கூறவில்லை.

நாங்கள் இறைத் தூதர்கள் என்பதால் நீங்களும் நாங்களும் வேறுபட்டவர்கள் என்று குரு - சீடர்கள் முறையை உருவாக்கவில்லை.

ஆனால், முரீது கொடுக்கிறோம் என்று புறப்பட்டு மிக சொற்ப மனித மனங்களை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் ஷேக்குகள் இவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ரகசிய ஞானம் என்று ஒன்று இஸ்லாத்தில் உண்டு என்றுக் கூறுவது, இறைவனுக்கும், அவன் வேதத்திற்கும், இறைத்தூதர்களுக்கும் எதிராக செய்யக் கூடிய பெரும் அநீதியாகும்.

மக்களுக்கு தெளிவான வழி காட்டுவதற்காகவும், அவர்கள் எளிதாக புரிந்துக் கொள்வதற்காகவும் இந்த குர்ஆன் இறக்கப்பட்டதாக தன் வேதத்தில் பல இடங்களில் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.

பாதுகாக்கப்பட்ட நபிமொழிகளில் இறைத்தூதரின் வாழ்க்கை முறை திறந்த புத்தகமாக இருக்கிறது. இவை இரண்டிலும் இல்லாத - சொல்லப்படாத - ரகசிய ஞானத்தை இந்த ஷேக்குகள் எங்கிருந்து கற்றனர்?

ஞானம் பெறுவதற்காக பைஅத் கொடுக்கிறேன் என்பதெல்லாம் பெரும் மோசடியாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருந்தால் அந்த நாட்டுக் குடி மக்கள் அந்த ஆட்சியாளரிடம் நான் உங்கள் ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் என்பதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய இன்றைக்கும் நடை முறை படுத்த வேண்டிய ஒப்பந்தமாகும் அதாவது பைஅத் ஆகும். இதுவல்லாத ஆன்மீக பைஅத் முறை எதுவும் இஸ்லாத்தில் இல்லை.

மற்ற மார்க்கங்களில் போலி சாமியார்கள் இருப்பது போன்று இங்கும் ஷேக்குகள் என்ற பெயரில் பல போலிகள் அவ்வப்போது உருவாகும். தமது முரீது வியாபாரத்தை மக்களிடம் நல்ல விலைக்கு விற்க சமூகத்தில் தம்மை மேம்பட்டவர்களாக காட்ட நபி (ஸல்) அவர்கள் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக பொய்யை ஹதீஸ் என்ற பெயரில் ரெடிமேடாக உருவாக்கி வைத்துக் கொண்டார்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஹதீஸ்களில் ஒன்று மகா பயங்கரமானதாகும்.

ஒரு கூட்டத்திற்கு ஷெய்க்காக இருப்பவர் ஒரு உம்மத்திற்கு அனுப்பப்பட்ட நபியை போன்றவராவார் என்று நபி (ஸல்)சொன்னதாக ஒரு செய்தி உள்ளது. இப்னு உமர் (ரலி) அறிவிக்க, இப்னு ஹிப்பான் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி மூலமாக ஷெய்க்குகள் தங்களை நபிக்கு ஒப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன? இறைவன் எப்படி வஹி மூலமாக நபிமார்களோடு தொடர்பு வைத்திருக்கிறானோ அதே போன்று எங்களோடும் இறைவனுக்கு தொடர்பு உண்டு. நபிமார்கள் எப்படி இறைவனிடம் அந்தஸ்து மிக்கவர்களாக இருக்கிறார்களோ அதே போன்று நாங்களும் இறைவனிடம் அந்தஸ்து மிக்கவர்கள். சில நேரம் சில நபிமார்களுடன் இறைவன் பேசியது போன்று எங்களோடும் பேசுவான் என்றெல்லாம் மக்களை நம்பவைத்து மூளை சலவை செய்வதற்காகத்தான் இந்த செய்தியை உருவாக்கி இருக்கிறார்கள்.

தனி மனித வழிபாட்டுக்கு இஸ்லாத்தில் துளியும் அனுமதியில்லை என்பதை தனது தெளிவான வாழ்க்கையின் மூலமாக நிரூபித்து விட்டு போன நபி (ஸல்), இப்படி தனி மனித வழிபாட்டை ஊக்குவிக்க வழிவகுத்திருப்பார்களா..?

இந்த செய்தி நபியின் பெயரை பயன்படுத்தி புனையப்பட்டதாகும். இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு காஸிம் என்று ஒருவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர் அதனால் இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ள முடியாது என்று இதை பதிவு செய்த இப்னு ஹிப்பான் அவர்களே அடையாளம் காட்டி ஒதுக்கி விட்டார்கள்.

இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்று இப்னு ஹஜர் அஸ்கலானி குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்தான் முரீது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களுக்கு ஆதாரமாக்கப் படுகிறது.

இவர்களுக்கு மறைவான ஞானம் உள்ளது என்று கூறுவது அடுத்த திட்டமிட்ட பொய்யாகும். இதை பொய் என்று நிருபிக்க பெரிய ஆதாரமெல்லாம் தேவையில்லை. மறைவான ஞானம் உண்டு என்று சொல்லக்கூடிய இந்த ஷைக்குகளிடம் சென்று முன்னெச்சரிக்கை இல்லாமல் ஓங்கி ஒரு அறை அறையுங்கள். மறைவான ஞானம் இருந்தால் அதை தடுத்துக் கொள்ளட்டும் பாரக்கலாம்!

மறைவான ஞானத்திற்கு சொந்தக்காரன் இறைவன் ஒருவனே, அவன் அறிவித்துக் கொடுக்காத எது ஒன்றையும் எவரும் சொந்தமாக அறிந்துக் கொள்ள முடியாது என்பதற்கு நபிமார்கள் வாழ்வில் ஏராளமான அத்தாட்சிகள் உண்டு.

நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்தால் எந்த துன்பமும் என்னை தீண்டியிருக்காது. நான் நிறைய நன்மையை பெற்றுக் கொண்டிருப்பேன் என்று நபியே நீர் கூறும் என்கிறான் இறைவன். (அல் குர்ஆன்)

இந்த குர்ஆன் வசனத்திற்கு விரிவுரையே நடத்துகின்ற மாதிரி நபி ஸல் அவர்கள் வாழ்வில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன.

உஹது போர் களத்தில் அவர்களின் கன்னம் கிழிக்கப்பட்டு பல் உடைக்கப்பட்டு மூர்ச்சையாகி கீழே விழுகிறார்கள். வயதான காலத்தில் இந்த தாக்குதல் அவர்களுக்கு பெறும் துன்பமாக இருந்தது. நபியை தாக்கி இரத்தம் சிந்த வைத்தவர்கள் உருப்பட மாட்டார்கள் என்று சபிக்கும் அளவுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்படுத்தியது அந்த தாக்குதல். நபி ஸல் அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் தம்மை பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும்.

யூத பெண்ணொருத்தி ஆட்டிறைச்சியில் விஷம் கலந்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைக்கிறாள். அவள் அழைப்பை ஏற்று அவளை கண்ணியப்படுத்த அவளிடம் சென்று விருந்துண்ட நபிக்கு விஷத்தின் தாக்கம் உடம்பில் ஏறி அவர்கள் மரணிக்கும் வரை தொந்தரவுக் கொடுத்தது. அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

தன் அருமை மனைவி ஆய்ஷா அவர்கள் மீது, அவர்களின் கற்பு மீது சில நயவஞ்சகர்கள் களங்கம் சுமத்தியபோது நபி (ஸல்) உண்மை நிலவரம் புரியாமல் துவண்டு போனார்கள். ஆய்ஷாவுக்கு தலாக் கொடுத்து விடுவோம் என்று அவர்கள் நினைக்கக் கூடிய அளவிற்கு, பிறரிடம் ஆலோசனை செய்யக் கூடிய அளவிற்கு நிலமை மோசமாகியது. அன்னை ஆய்ஷாவின் கற்புக்கு இறைவன் உத்திரவாதம் கொடுத்து வசனங்களை இறக்கும்வரை இதே நிலைதான் நீடித்தது. நபி (ஸல்) அவர்களுக்கு ரகசிய ஞானம் இல்லை என்பதை ஆயிரக்கனக்கான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி நிரூபித்துக் கொண்டே செல்லலாம் பதில் மிக நீளமாகிவிடும் என்பதற்காக சுருக்குகிறோம்.

மறைவானவற்றின் திறவுகோல் அவனிடமே இருக்கிறது அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:59)

அல்லாஹ்வைத் தவிர வானங்கள் பூமியிலுள்ள எவரும் மறைவானவற்றை அறிய மாட்டார்கள். (அல் குர்அ10ன் 27:65)

இறை வேதத்தின் போதனைகளை உண்மை என்று நம்பக் கூடிய எந்த முஸ்லிமும் இந்த வசனங்களை விசுவாசித்து இதற்கு மாற்றமாக பொய் கூறி திரியும் போலி ஷைக்குகளை புறக்கணித்து மக்களுக்கு இனங்காட்டுவார்கள். இனங்காட்ட வேண்டும்.

ஆன்மீக பைஅத்திற்கு குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டப்படும் வசனம். அதன் விளக்கத்தையும் தெரிந்துக் கொள்வோம்.

60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும், அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக, நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

ஆன்மீகத் தலைவராக இருந்த நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள் பைஅத் செய்ய வேண்டும் என்று இந்த வசனம் குறிப்பிடுவதால் இன்றைக்கும் ஆன்மீக பைஅத் உண்டு என்பது சிலரது வாதம்

இந்த சந்தேகத்தில் இருக்கும் சகோதரர்களுக்கு புரியும் விதத்தில் இதை தெளிவாக விளக்குவோம்.

நீங்கள் ஒரு வியாபார தளத்தின் நிர்வாகியாக இருக்கிறீர்கள் அந்த அதிகாரத்தில் எங்களுக்கு நீங்கள் வேலை கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் நாங்கள் எந்த தவறும் செய்யாமல் நிர்வாகத்திற்கு மாறு செய்யாமல் கட்டுப்பட்டு நடப்போம் என்று நாங்கள் உங்களிடம் பைஅத் (உறுதி மொழி) செய்யலாம். நீங்கள் எங்களிடமிருந்து பைஅத் பெறலாம். இதில் அர்த்தம் இருக்கிறது என்று உங்களுக்குப் புரியும்.

இன்னொரு பைஅத் பற்றி கூறுகிறோம் அர்த்தம் புரிகிறதா என்று பாருங்கள். நீங்கள் வெளிநாட்டில் பணி புரிகிறீர்கள். நாங்கள் அரபகத்தின் பல பகுதிகளில் பணி புரிகிறோம். இப்போது நாங்கள் அனைவரும் சேர்ந்துக் கொண்டு 'இன்னாரே... நாங்கள் அரபகத்தில் நேர்மையாக நடப்போம் இதற்காக உங்களிடம் பைஅத் செய்யப் போகிறோம்' என்று கூறினால் 'ஆம் என்னிடம் பைஅத் செய்வது சரிதான்' என்று நீங்கள் கூறுவீர்களா... அல்லது 'உங்களிடம் பைஅத் வாங்குவதற்கு நான் யார்? இது கிறுக்குத் தனமாக இருக்கிறது' என்று புறக்கணிப்பீர்களா...

அல்லது இப்படி சிந்தித்துப் பாருங்கள் 'இதுதான் இஸ்லாம்.காம் குழுவினர்களே... நீங்கள் அனைவரும் இந்தப் பணியில் ஒழுங்காக செயல்பட வேண்டும் என்று என்னிடம் பைஅத் செய்யுங்கள்' என்று நீங்கள் கூறுவதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பின் பொருள் வெறும் உளறலாகத்தானே இருக்க முடியும்.

பைஅத் செய்ய வேண்டுமென்றால் பைஅத் செய்பவருக்கும் அல்லது பைஅத் கேட்பவருக்கும் நமக்கும் மத்தியில் உள்ள தொடர்பு என்ன என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும். ஆன்மீகவாதிகளிடம் பைஅத் செய்வது அறிவுக்கு பொருத்தமானதா என்பதற்கு இப்போது வருவோம்

ஆன்மீகத்தை போதிப்பதாக சொல்லும் உண்மையான ஷேக்குகளிடம் போய் பைஅத் செய்கிறார்கள். எப்படி? நான் தவறாமல் ஐந்து வேலையும் தொழுவேன், நோன்பு வைப்பேன், ஜகாத் கொடுப்பேன் என்று. இப்போது சிந்தித்துப் பாருங்கள் இந்த வணக்கங்களுக்கும் ஷேக்குகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? தொழுகை அவருக்குரியதா.. நோன்பு அவருக்குரியதா.. அல்லது ஜகாத்து தான் அவருக்குரியதா... இதில் எதுவுமே அவருக்குரியதல்ல எனும் போது இவற்றை சரியாக செய்வேன் என்று அவரிடம் போய் எப்படி உறுதி மொழி எடுக்க முடியும்?

இன்னும் சொல்லப் போனால் இந்த வணக்கங்கள் அவர் மீதும் கடமையாகிறது. இந்த வணக்கங்களுக்காக ஷேக்குகளிடம் - முரீதுகளிடம் - பைஅத் செய்ய வேண்டுமென்றால் இதே கடமைகளை செய்ய வேண்டிய அவர்கள் யாரிடம் பைஅத் செய்வார்கள்? அவர்கள் பைஅத் செய்வதற்கு இன்னொரு ஷேக் வேண்டுமே... அவரைவிட பெரிய ஆன்மீகவாதி இருந்தால் அந்த ஆன்மீகவாதி மீதும் இந்த வணக்கங்கள் கடமையாக நிற்கும் அப்போது அவர் பைஅத் செய்வதற்கு இன்னொரு ஆன்மீகவாதி வேண்டும். இப்படியே ஆயிரம் ஆன்மீகவாதிகள் கிடைத்தாலும் கடைசியில் உள்ளவர் பைஅத் செய்வதற்கு ஆளில்லாமல் போய்விடும். அதாவது பைஅத் முற்றுப்பெறாமல் விபரம் புரியாமல் தடைப்பட்டு நின்றுவிடும். எனவே ஆன்மீகவாதிகளிடம் செய்யக் கூடிய பைஅத் என்பது தற்போது இஸ்லாத்தில் இல்லை. வணக்கங்கள் அனைத்தும் இறைவனுக்குரியது என்பதால் அவனிடம் நாம் பைஅத்(ஒப்பந்தம்) செய்துக் கொள்ளலாம்.

இப்போது நாம் சுட்டிக் காட்டிய வசனத்திற்கு வருவோம். அதில் ஆன்மீகவாதியிடம் செய்ய சொன்ன பைஅத்தும் இருக்கிறது. ஆட்சியாளரிடம் செய்ய வேண்டிய பைஅத்தும் இருக்கிறது.

முஃமினான பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை என்று கூறினால்... என்று துவங்குகிறது வசனம்.

இணைவைத்தல் பெரும் கெடுதியான காரியம் என்பது இறைவனின் அதிகாரத்திற்குட்பட்ட விஷயம் எனவே அவனிடம் தான் இது பற்றி பைஅத் செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆன்மீக பைஅத்தை மக்கள் ஏன் நபி(ஸல்) அவர்களிடம் செய்தார்கள்? இன்னும் சொல்லப் போனால் இணைவைக்கக் கூடாது என்பது நபிக்கும் பொருந்தக் கூடிய அவரும் கட்டுப்படக் கூடிய, அவர்களும் இறைவனிடம் பைஅத் செய்ய வேண்டிய ஒரு விஷயம். நிலமை இப்படி இருக்க நபி(ஸல்) பைஅத் பெற்றதன் காரணமென்ன?

பதில் மிகவும் இலகுவானது. நபி(ஸல்) அவர்கள் இறைவனால் நியமிக்கப்பட்ட தூதராக இருந்தார்கள். தூதர்களிடம் செய்யப்படும் ஒப்பந்தம் அதிகாரத்திடம் செய்யப்படும் ஒப்பந்தமாகவே கருதப்படும்.

இந்தியா, தொழில் துறையை வளப்படுத்த ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஜப்பானில் நடக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய பிரதமர் போய்தான் கையொப்பம் இடவேண்டும் என்கிற அவசியமில்லை. அந்தத் துறைக்காக அரசால் நியமிக்கப்பட்ட தூதர் கையோப்பமிட்டால் போதும். அவர் நியமிக்கப்பட்ட தூதராக இருப்பதால் அந்த கையோப்பம் இந்தியாவின் கையோப்பமாகவே உலகம் அங்கீகரித்துவிடும்.

நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததால் அவன் அனுமதிப்படி அவன் சார்பாக பைஅத்தை - ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களுக்கு அந்த அதிகாரத்தை இறைவன் கொடுத்திருந்தான். அவர்களுக்கு பிறகு இறைத்தூதர்கள் மட்டுமே வகிக்க வேண்டிய அந்த ஆன்மீக தலைமை என்பது வேறு எவராலும் பூர்த்தி செய்யப்படாமல் - பூர்த்தி செய்ய முடியாமல் காலியாக இருக்கிறது. மறுமைநாள் வரை அப்படியே தான் இருக்கும்.

எனவே ஆன்மீகவாதியாக இருந்து அவர்கள் பெற்ற பைஅத்தை அவர்களுக்கு பிறகு யாரும் பெற முடியாது, பெறக்கூடிய அதிகாரமும் யாருக்கும் இல்லை. அதனால்தான் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த நன்மக்களான அவர்கள் யாரும் இறைவனுக்கு செய்யும் வணக்கங்கள் சம்பந்தமாக மக்களிடம் பைஅத் பெறவில்லை. அதே சமயம் ஆட்சிக்குரிய காரியங்களுக்கு பைஅத் பெற்றுள்ளார்கள்.

அதே வசனத்தில் தொடர்சியாக வரும் 'திருட்டு' 'கொலை' 'விபச்சாரம்' 'அவதூறு' போன்ற பாவங்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழியை - பைஅத்தை இன்றும் செய்யலாம். ஆனால் பெறுபவர்கள் ஆட்சியாளராக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் இந்த குற்றங்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள்.

இன்று ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பைஅத்கள் பல மோசடித் தனத்திற்கும், மார்க்கத்திற்கு எதிரான பல பாவமான காரியங்களுக்கும் வழிவகுத்துக் கொண்டிருப்பதால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பைஅத்களை நாம் கட்டாயம் எதிர்த்து மக்களுக்கு இனங்காட்ட வேண்டும்.
..................................

masdooka said...
முரீது வாங்க வேண்டுமா?பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர்.'ஆன்மீகப் பாட்டை' என்பார்கள், 'ஆத்மீகப் பக்குவம்' என்பார்கள், 'அந்தரங்கக் கல்வி' என்பார்கள், 'ரகசிய ஞானம்' என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள்.எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள்.இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள்.இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தௌ;ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் 'ரகசிய ஞானம்' என்று ஏமாற்றுகிறார்கள்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் 'நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?' என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் 'ஆம்! அல்லாஹ்வின் தூதரே' எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நீயே சாட்சி!' என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)இவ்ளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு - போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள்.ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீதகளின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே!எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு, இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம்.இஸ்லாத்திற்கு விரோதமான - குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள். மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்த மாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதை யெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள், அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும்.அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.அப்துஸ்ஸலாம் மஸ்தூக்காhttp://masdooka.blogspot.com
February 1, 2008 12:19 AM

Friday, January 25, 2008

காப்பீடு நிறுவனத்திற்கு லட்டர்

அஸ்ஸலாமு அலைக்கும். நான் ஒரு வணிக நிறுவனத்தில் உதவி கணக்கராக(Assistnt Accountant) பணிப் புரிகின்றேன். அது ஒரு ஏற்றுமதி (Export) நிறுவனம். சரக்குகளை கடல் வழியாக ஏற்றுமதி செய்யும்போது அதற்கு காப்பீடு (Insurance)செய்வது இன்றியமையாத ஒன்று. சில சமயங்களில் எனது மேலாளர் (Manager)ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு காப்பீடு செய்யக்கோரி காப்பீட்டு நிறுவனத்திற்கு என்னை கடிதம் அனுப்ப பணிக்கிறார். எனது கேள்வி என்னவெனில் இவ்வாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு கடிதம் எழுதுவதால் எனது அனைத்து வருமானமும் ஹராம் ஆகுமா?

Name: Naser
email:
md_naser68@...
Location: DUBAI
Subject: Question

வஅலைக்குமுஸ்ஸலாம்.
அன்புச் சகோதரருக்கு, சில நாட்களுக்கு முன் ''நிறுவனத்தில் கணக்கெழுதுவது' பற்றி துபையிலிருந்து ஒரு சகோதரர் கேட்டிருந்த கேள்வியை ஒட்டியே உங்கள சந்தேகமும் அமைந்துள்ளது. எனவே அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் உங்களுக்கும் பொருந்தும். கீழுள்ள லிங்கிலிருந்து நீங்கள் பதிலைப் பெற்றுக் கொள்ளலாம.

கணக்கெழுதும் போது
.........................

உறையூர்காரர் கேட்டிருந்த 'அரபுமொழி' பற்றுப்பற்றிய சந்தேகத்திற்கு விரிவான விளக்கம் கீழுள்ள சுட்டியில் கொடுத்துள்ளோம்.

அரபு மொழி பற்று அவசியம் தான்.
...............................

Sunday, January 20, 2008

ஸஹாபாக்கள் நட்சத்திரங்களா?

அஸ்ஸலாமு அலைக்கும். நபி (ஸல்l) அவர்கள் \" என்னுடைய சகாபாக்கள் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை போன்றவர்கள், அவர்களில் நீங்கள் எவறைப்பின்பற்றினாலும் வெற்றி அடைவீர்கள்\" என்று கூறி இருக்கும்போது நாங்கள் அவர்களை பின்பற்ற மாட்டோம் நபி (ஸல்) அவர்கள் செய்தவற்றை மட்டுமே பின்பற்றுவோம் என்று சில சகோதர்கள் கூறுகின்றனர். மேலும் கண்ணியமிக்க \"சகாபாக்களை நானும் பொருந்திக் கொண்டேன் \" அவர்களும் என்னை பொருந்திக் கொண்டார்கள்\" என்று அல்லாஹ்வே சான்று தரும்போது சில மூடர்கள் சகாபாக்கள் அறியாமல் செய்த சில தவறுகளை சொல்லி காட்டி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்ற்படுத்துவதை பற்றி தங்களின் கருத்து என்ன?


AZEEZUDDHEEN
skn_azeesudeenஅட்gmail.com
Dubai



நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள நபித்தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் என்ற செய்தி இரண்டு விதத்தில் பலவினப்படுகின்றது.

ஒன்று: அதன் அறிவிப்பாளர் தொடர்:

இரண்டு: அதன் கருத்து.

'அஸ்ஹாபீ கன்னுஜூமி பிஅய்யிஹிம் இக்ததைத்தும் இஹ்ததைத்தும்',

அறிவிப்பாளர் வரிசையில் உள்ள குறைபாடுகள். இந்த ஹதீஸை இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் தமது 'அல் இஹ்காம்' என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இந்த ஹதீஸைப்பற்றி 'இது ஏற்கத் தகாத ஹதீஸாகும்' என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய ஸலாம் இப்னு ஸூலைம் என்பவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவராவார். 'இந்த ஹதீஸூம் அத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றாகும்' என்றும் இமாம் இப்னுஹஸ்மு அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஹதீஸை இமாம் 'இப்னு அல்தில்பர்' (ரஹ்) அவர்களும் தமது 'ஜாமிவுல் இல்மி' என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இதன் அறிவிப்பவர்களில் இடம்பெறுகின்ற 'ஹாரிஸ் இப்னு குஸைன்' என்பவர் ஹதீஸ்கலையில் அறியப்படாதவர். இது ஏற்றத்தக்க ஹதீஸ் அல்ல என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இந்த 'ஸலாம் இப்னு ஸூலைம்' என்பவரைப்பற்றி இமாம் இப்னு ஹர்ராஷ் அவர்கள் 'இவர் பெரும் பொய்யர்' என்றும், இமாம் 'இப்னு ஹிப்பான்' அவர்கள் 'இவர் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவர்' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கருத்துத் தவறு:

சில நட்சத்திரங்களை வைத்து நேரம், காலம், வழி அறியப்படுகின்றது. சில நட்சத்திரங்களிலிருந்து தான் இந்த படிப்பினை கிடைக்கின்றதே தவிர எல்லா நட்சத்திரங்களும் மக்களுக்கு வழிகாட்டுவதில்லை. பொருத்தமில்லாத உவமைகளை நபி(ஸல்) கூற மாட்டர்கள்.

நபித்தோழர்கள் அனைவரின் அறிவும், ஆற்றலும், தகுதியும் ஒரே விதத்தில் அமைந்தவையல்ல. இறைவனால் வழங்கப்பட்ட சிறப்பில் கூட அவர்களுக்கு மத்தியில் வேறுபாடுகள் இருக்கின்றன.

1)உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் எவரும் சமமாகமாட்டார். (மக்காவின்) வெற்றிக்குப் பின் செலவு செய்து போரிட்டவர்களை விட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்': எனினும் அல்லாஹ் எல்லோருக்கும் அழகானதையே வாக்களித்திருக்கிறான். மேலும்; அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (57:10)

மக்கா வெற்றிக்கு முன்னுள்ளவர்களின் நிலையும், மக்கா வெற்றிக்கு பின் செலவிட்டவர்களின் நிலையும் சமமல்ல என்று இறைவன் தரத்தைப் பிரிக்கிறான்.

2)பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அவர்களிலும் சொர்க்கத்தின் நற்செய்திப் பெற்ற பத்து நபித்தோழர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அந்தப் பத்துப் பேர்களிலும் நாற்பெரும் கலீபாக்களின் நிலை மிகவும் உயர்ந்தது. நான்கு கலீபாக்களிலும் முதலிருவரின் நிலை பன்மடங்கு மேலானது. அந்த இருவர்களிடம் கூட அபூபக்கர் (ரலி) அவர்கள் மிகமிக மேலான தகுதியை பெற்றவர்களாவார்கள்

எந்த நபித்தோழரையும் பின்பற்றலாம் என்ற உவமை இப்படி பல வழிகளில் முரண்படுவதால் அந்த செய்தியை ஒதுக்கித் தள்ளியாக வேண்டும்.

குர்ஆனும் சுன்னாவும் மட்டுமே மார்க்கத்தின் ஆதாரங்களாகும். நபி(ஸல்) அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்த செயல்களே மார்க்கமாகாது எனும் போது (உதாரணம் தலைப்பாகை அணிதல்) நபித்தோழர்களின் செயல்களை எப்படி மார்க்க ஆதாரமாக்க முடியும்?

இது அல்லாஹ்வின் மார்க்கம், இந்த மார்க்கத்தில் எதுவொன்றிற்கும் அல்லாஹ்வின் வழிகாட்டல் வேண்டும். அல்லது அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெற்ற நபியுடைய வழிகாட்டல் வேண்டும். இதுவல்லாத எதுவும் மார்க்க ஆதாரமாகாது.

நபித்தோழர்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்பது வேறு. அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது வேறு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும். நபித்தோழர்களுக்கு மத்தியில் சிறப்பில் ஏற்றத் தாழ்வு இருந்தாலும் அவர்களுக்கு பின்பு இன்று வரை வந்த கோடான கோடி முஸ்லிம்களுடன் ஒப்பிடும் போது அவர்களின் சிறப்பும் அந்தஸ்த்தும் மகத்தானவை. அதற்காக அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தவில்லை.

நபித்தோழர்களுக்கு மத்தியிலேயே இஸ்லாமிய சட்டங்களை விளங்குவதில் சில - பல கருத்து வேறுபாடுகள் நிலவின. ஹதீஸ் கிதாப்களுடன் தொடர்புள்ளவர்களுக்கு இது தெரியும்.

எனவே பின்பற்றத் தகுதியானவர்கள் நபி(ஸல்) அவர்கள் மட்டுமே.

நபித்தோழர்களை யாரும் திட்டமாட்டார்கள் அதிலும் குர்ஆன் சுன்னாவை விளங்கியவர்கள் நிச்சயம் திட்ட மாட்டார்கள். அவ்வாறு திட்டுபவர்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தால் ஒதுக்கித் தள்ளப்படுவார்கள்.
...............................

Friday, January 18, 2008

உள்ளுரில் குறைத்துத் தொழுதல்!

சகோதரருக்கு,

நாம் (ஜம்மு) தொழுகையை நம் வசதிக்கேற்ப எளிதாக்கிக்கொள்ள சேர்த்து தொழலாமா? சஹிஹ் ஹதீஸ் தங்கள் பார்வைக்கு...

நூல் மாலிக்... முவத்தா வால்யிம் vol 1, பக்கம் 161, இப்னு அப்பாஸ் கூறியதாவது... நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர் சேர்த்து தொழுதுள்ளார்கள். மற்றும் மக்ரிப், இஷா சேர்த்து தொழுதுள்ளார்கள் எந்த காரணமும் இல்லாமல்.

சஹிஹ் முஸ்லிமில் கூட்டுத்தொழுகை என்ற தலைப்பின்கீழ்...இப்னு அப்பாஸ் அறிவிப்பதாவது... எந்த கூட்டதாருடைய (எதிரி) பயமும் இல்லாத நேரத்திலும், பிரயாணம் இல்லாத நேரத்திலும் லுஹர், அஸர் சேர்த்து தொழுதுள்ளார்கள். மற்றும் மக்ரிப், இஷா சேர்த்து தொழுதுள்ளார்கள். (சஹிஹ் முஸ்லிமில் (ஆங்கில மொழியாக்கம்) பாகம் CCL, Tradition #1515.

இதைப்பற்றி தங்களுடைய விளக்கம் தேவை.

hssnansarஅட்yahoodotcom

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுப் போன்று ஆதாரப்பூர்வமான செய்திகள் பல நூல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது உண்மைதான். மேலும் நூல்கள் அஹ்மத் 3152 திர்மிதி 172 அபுதாவூத் 1025.

جمع رسول الله ‏ ‏ صلى الله عليه وسلم ‏ ‏ بين الظهر والعصر والمغرب والعشاء في ‏ ‏ المدينة ‏ ‏ من غير خوف ولا مطر

நம்முடைய அனைத்துத் தொழுகைகளையும் தீர்மானிப்பதற்கு இந்த ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நபி(ஸல்) காலாகாலத்துக்கும் இப்படி சேர்த்து (ஜம்வு) குறைத்து (கஸ்ர்) தொழுதுக் கொண்டிருக்கவில்லை. 'பயமோ மழையோ இல்லாத நேரத்தில் நபி(ஸல்) அவ்வாறு செய்துக் காட்டியுள்ளார்கள் என்பதிலிருந்து சில அவசரங்களுக்கு அவ்வாறு செய்துக்கொள்ளலாம் என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இந்த ஒரு செய்தியை மட்டும் ஆதாரமாகக் கொண்டு எப்போதும் அவ்வாறு செய்துக் கொள்ளலாம் எனறு முடிவெடுத்தால்,

إنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

இந்த வசனத்துக்கு விளக்கமாக இநைத்தூதவர்கள் தம்முடைய வாழ்நாள் முழுவதும் தொழுகையின் நேரங்களை விளக்கி அதற்குரிய நேரங்களில் தொழுதுக் காட்டியுள்ளார்கள்.

எனவே உள்ளுரில் இருக்கக் கூடியவர்கள் தொழுகையை அதற்குரிய நேரங்களில் தான் தொழ வேண்டும். தவிர்க்க முடியாத சில நேரங்களில் சேர்த்து - குறைத்து தொழுதால் அதை கூடாதென்று சொல்ல முடியாது. ஏனெனில் அதற்கும் நபியிடம் வழிகாட்டல் இருக்கின்றது.

பிரயாணிகளாக இருந்தால் அவர்கள் எப்பொழுதும் சேர்த்து குறைத்துத் தொழுதுக் கொள்ளலாம்.
......................................................

Monday, January 14, 2008

பொது மையவாடிக்கு பெயர்?

நான் பொதக்குடி என்ற ஊரை சேர்ந்தவன். என்னுடைய கேள்வி, எங்கள் ஊரில் உள்ள மையவாடி முகப்பில் தமிழில் 'முஃமின்களின் பூங்கா' என்று எழுதப்பட்டுள்ளது. மையவாடியில் அடக்கப்படுபவர்களை முஃமின்கள் என்று நாம் அழைக்கலாமா..? எங்க ஊரில் எல்லாம்??? தெரிந்த மத்ஹப் ஷேக் உள்ளார். அவரின் உத்தரவின் பேரில் இது செய்யப்படுகின்றது. இது சம்மந்தமாக விளக்கம் தேவை.

பொதக்குடி சலீம் (ஜித்தா)

nhsaleemஅட்gmailடாட்com
..................................................

படிப்பாளி said...
பொது மையவாடிக்கு பெயர் வைப்பதெல்லாம் ஒரு பிரசசனையல்ல. மதீனாவில் உள்ள பொது மையவாடிக்கு நபி(ஸலல்) காலத்திலிருந்தே 'ஜன்னத்துல் பகி' என்று பெயருள்ளது. அது மாற்றப்படவில்லை.பொது மையவாடியில் அடக்கப்பட்டுள்ளவர்களை முஃமின்கள் என்று குறிப்பிடுவதும் தவறாக தெரியவில்லை. ஏனெனில் பொதுக் கப்ரஸ்தான்களுக்கு நாம் செல்லும் போது அவர்களுக்குக்காக பிரார்த்திக்கும் அந்த பிரார்த்தனையில்

'عن ‏ ‏أبي هريرة ‏ أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أتى المقبرة فقال ‏ ‏ السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون

'முஃமினான மண்ணறைவாசிகளே...உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.. என்று மண்ணறைவாசிகளை பொதுவாக முஃமின் என்று சுட்டிக் காட்டியுள்ளதால் முஃமின்களின் பொதுமையவாடி என்று குறிப்பிடுவது தவறல்ல என்று விளங்கலாம்................
January 17, 2008 10:02 PM

Thursday, January 3, 2008

ஷேர்மார்க்கட் ஹராமா..?

அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் நான் வணிக மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவன். (ஷேர் மார்க்கட்) பங்கு வர்த்தகத்ததிலிருந்து கிடைக்கும் பணம் ஹராமா... ஹலாலா... என்ற விளக்கம் வேண்டும்.
பங்கு சந்தை என்பது பொருளின் மீது முதலிடு செய்து பொருளின் விலைக் கூடும் போது முதலீட்டை விற்று லாபம் பெறுவதாகும்.

டைடன் கம்பெனி புதிதாக ஒரு வாட்சை அறிமுகப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் மொத்த முதலீட்டுக்கான தொகையில் பாதியை வெளியில் பங்குதாரர்களிடமிருந்து பெறுவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது. நூறு பங்குதாரர்கள் இதில் சேரலாம் ஒரு பங்கின் விலை ரூ 1000 (புரிந்துக் கொள்வதற்காக குறைந்த தொகையைக் குறிப்பிட்டுள்ளோம்) என்று வகுக்கிறது.

இப்போது நூறு பங்குதாரர்கள் இந்த வியாபாரத்தில் இணைகின்றார்கள். உதாரணமாக 10 பங்குக்குரிய பணத்தை (10,000) நீங்கள் செலுத்தி பத்து பங்குதாரர் ஆகின்றீர்கள். இதேபோல் கூடுதலாகவோ - குறைவாகவோ நூறு பங்கு அந்த கம்பெனிக்கு கிடைத்து விடுகிறது. வாட்ச் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தவுடன் அதன் தரம் சிறப்பாக இருந்து நல்ல விற்பனையைக் கண்டால் அதன் மீது முதலீடு செய்த தொகை கூடுதல் லாபத்தைப் பெற்று உங்கள் பங்கின் தரம் உயரும். இந் நிலையில் உங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது அல்லது நீங்கள் இந்த பங்கு தேவையில்லை என்று முடிவு செய்தால் நீங்கள் பெற்றுள்ள 10 பங்கையும் நீங்கள் பிறருக்கு விற்பனை செய்து விடலாம். நாம் முதலீடு செய்த பொருளின் மார்க்கெட் நிலவரத்தைப் பொருத்து நம் பங்கின் மீது கூடுதல் லாபம் வைத்து விற்கலாம்.

நீங்கள் ஒரு பங்கை ரூ 1000, என்ற கணக்கில் எடுத்தீர்கள் இப்போது அதை ரூ 2000 என்று கூட நீங்கள் தீர்மானிக்கலாம். இதை தீர்மானிப்பதற்கு - அதாவது விலையை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் என்று - ஏராளமான ஏஜண்டுகள் இருக்கிறார்கள். (இவர்களில் அனேகருக்கு ஹர்ஷத் மேத்தா தான் குரு என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது)

உங்களது 10 பங்கையும் ரூ 20,000 க்கோ அல்லது கூடுதல் குறைவாகவோ நீங்கள் விற்று விட்டால் உங்களுக்கும் அந்த வியாபாரத்திற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடும். உங்களிடமிருந்து பங்கை வாங்கியவர் அதைத் தொடர்வார்.

தேர்தல் களம், ஆட்சி மாற்றங்கள், சர்வதேச நெருக்கடி போன்ற நிலைகள் உள்நாட்டிலோ அகில உலகிலோ ஏற்படும் போது பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் அல்லது பங்கு சந்தையின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்கு தடைப்படும்.

தற்போது இந்தியாவின் பங்கு சந்தை நிலவரம் அவ்வளவாக சொல்லும் படியாக இல்லை என்ற தகவல்கள் வருகின்றன.

சற்று பின்னோக்கி சென்று உதாரணம் தேடினால், ரிலையன்ஸ் பட்ட பாட்டை குறிப்பிடலாம்.

அதன் தரம் ரூ 474 என்ற அளவிற்கு கீழிறங்கியது. தேர்தல் நிலவரங்களின் அறிவிப்பு வர வர கிடுகிடு என்று மேலேறி 524 ஆகியது. பின்னர் பேரங்கள் முடிந்தவுடன் 511 என்று முடிவுக்கு வந்தது.

தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் பங்கு பெரும் வீழ்ச்சி அடையும் என்று பலரும் கருதினார்கள். காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியவுடன் 'பங்குச் சந்தைக்கு வாழ்விருக்கு' என்று பலர் நிம்மதியடைந்தார்கள்.

இதுவே பங்குச் சந்தையின் நிலவரம்! எனவே இதைக் கூடாது என்று சொல்வதற்குரியய முகாந்திரங்கள் எதுவுமில்லை.

நாம் முதலீடு செய்யும் நிறுவனங்களை ஆராய்ந்து பார்த்துக் கொள்வது இறையச்சத்திற்கு உகந்ததாகும்.

நிறைய லாபத்திற்காக வாய் பிளந்து காத்திருக்காமல் பங்கின் விலை உயரும் போது நம் பங்கை விற்று விடுவதே ஷேர்மார்ககெட் சூத்திரர்களின் சூட்சுமத்தின் அடையாளமாகும். இது கூடுதல் 'அட்வைஸ்'

Tuesday, December 25, 2007

நிறுவனத்தில் கணக்கெழுதும் போது..

நான் எம் காம் முடித்து விட்டு வேலை தேடி கொண்டு இருக்கிறேன். அனைத்து நிறுவனங்களும் தனது இருப்புத்தொதையை வங்கியில் தான் இட்டு வைத்திருக்கின்றன. அப்படி இருக்கையில் வங்கியிடமிருந்து பெரும் வட்டி பணத்தை கணக்கில் எழுதுவது இன்றியமையாத ஒன்று. எனது கேள்வி என்னெவெனில் நான் ஒரு நிறுவனத்தில் கணக்கராக பணி புரியும்போது வங்கியிடமிருந்து பெரும் வட்டி பணத்தை கணக்கில் எழுதியே தீரவேண்டும். இது மார்க்கத்தில் கூடுமா ?கூடாதா?. விளக்கம் தரவும்.
skn_azeesudeenatyahoodotcom
வட்டிக்குத் துணைப் போகக் கூடாது என்ற எண்ணத்தில் நீ்ங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறோம். இறைவன் உங்களின் இஸ்லாமிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தட்டும்.
வட்டிக்கு துணை போகுதல் என்பதை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
1) நாம் விரும்பி வட்டியின் வளர்ச்சிக்கு துணை புரிதல்.
  • வங்கியில் முதலீடு, வங்கியில் வேலை, வட்டிக்கடை நடத்துதல், வட்டிக்கடையில் வேலைப் பார்த்தல், கந்து வட்டிச் சிந்தனை என்று இதை பலவாறாக குறிப்பிடலாம்.

2) சிறு சிறு பிரச்சனைகளுக்குக் கூட வட்டிக் கடையை - வங்கியை நோக்கி ஓடி தன் தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள முயலுதல்.

  • சற்று முயற்சித்து அல்லது கொஞ்சம் பொருமையாக இருந்து பிரச்சனையை சரி செய்துவிட முடியும் என்ற நிலை இருந்தும் அவசர உலகத்தை விட அவசரமாக தன் நிலையை மாற்றிக் கொள்பவர்களால் வட்டி வளர்கின்றது.

இந்த இரண்டு நிலைக்கு உட்படாத எதுவும் வட்டிக்கு துணைப் போகுதல் என்ற நிலையைப் பெறுவதாக நமக்குப் புலப்படவில்லை.

உலக அளவில் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் முதல் தேசிய - மாநில சிறு நிறுவனங்கள் வரை உள்ள கோடான கோடி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், வணிக மையங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் என்று அனைத்து இயக்கமும் வங்கியுடன் தொடர்புள்ளதுதான். வங்கியில் முதலீடு அல்லது வைப்புத் தொகையும் வங்கியிலிருந்து எடுக்கப்படும் தொகையும் அந்தந்த நிறுவனங்களில் கணக்கெழுதப்படுகின்றன.

இப்படி எழுதப்படும் கணக்குகள் அந்தந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்காக இருக்குமே தவிர வட்டிக் கணக்கு எழுதுவதாக ஒரு போதும் ஆகாது.

வங்கியில் தொடர்புள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து கணக்கெழுதுவதெல்லாம் வட்டிக்கு துணை போகும் என்று யாராவது கருதினால் 'கணக்கியல்' கல்வியிலிருந்து முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்த வேண்டி வரும். ஏனெனில் கணக்கியல் கல்வி என்பது வங்கியின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ தொடர்புள்ளதாகவே இருக்கும்.

இப்படி ஒரு விதியை இஸ்லாம் விதிக்கவில்லை. இஸ்லாமிய பொருளாதார சிந்தனையும் - வட்டிப்பற்றிய ஒரு பரந்த ஆய்வும் தமிழக முஸ்லிம்களிடம் இல்லாததுதான் இத்தகைய சந்தேகங்களுக்கு வழி வகுக்கின்றது.

வட்டியுடன் நமக்கு நேரடியான தொடர்பு இல்லாத நிலையில் நாம் எழுதும் எந்த கணக்கும் வட்டிக் கணக்காக ஆகாது. 'வட்டிக்கு எழுதுபவரை நபி(ஸல்) சபித்துள்ளார்கள் என்ற சபிப்பில் இந்த கணக்கர் அடங்க மாட்டார்.

Wednesday, December 5, 2007

பெண்கள் பிரச்சனை

பெண்கள் தங்களின் தொழுகையின்போது இயற்கை உபாதையான வெள்ளைப் படுதல் மற்றும் காற்றுப்பிரிதல் போன்ற சம்பவங்களால் தொழுகையை நிறைவேற்ற முடியாமல் போகிறதே.. என்ன செய்வது..? இது ஏராளமான பெண்களுக்குரிய பிரச்சனை. தாஹிரா - அபுதாபி

Thursday, November 29, 2007

சுய இன்பம்

இஸ்லாத்தில் சுயஇன்பம் அனுபவித்தல், ஓரிணச்சேர்க்கை கூடுமா..? தகுந்த திருக்குர்ஆன் வசனம், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும். இங்கு அதிகமான நண்பர்கள் இந்த ஹதீஸ்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள்..
..........................

Thursday, November 22, 2007

வங்கியின் வட்டி என்னசெய்வது

என்னுடைய வங்கிக் கணக்கில் (Savings account) என் இறுப்புத் தொகைக்கு வட்டி வருகிறது. நான் அதை உபயோகிப்பதில்லை..அந்த தொகையை தர்மமாக கொடுக்கலாமா... அல்லது என்ன செய்வது.? நான் வேலை பார்க்கும் கம்பெனயில் சம்பளமோ, முன் பணமோ கொடுக்கவில்லை.. இங்கு நிறைய சாமான்கள் உள்ளது. எனக்கு வரவேண்டிய தொகைக்கு உள்ள சாமான்களை நான் எடுத்துக் கொள்ளல் கூடுமா..?
வட்டி - வங்கி - முஸ்லிம்கள் என்ற தலைப்பில் விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்று இரண்டு இடங்களில் பதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடுப்பை கீழே கொடுத்துள்ளோம்.
படியுங்கள் மேலதிக விளக்கங்கள், விபரங்களுக்கு கருத்தை எழுதுங்கள்.

காக்க..காக்க

நான் வேற்று மதத்தை சார்ந்தவன். உணமையான இறை வார்த்தை எது என அறிந்து அதன்படி வாழவேண்டும் என்ற வாஞ்சை உடையவன். அதற்காக திருக்குரானை படித்தபோது,

இறைவன் தொழுகை பற்றி குறிப்பிடும் வசனமாகிய 4:102 போர் நேரங்களில் தொழுபவர்கள் பாதி பேர் தொழவேண்டும் மீதிபேர் காவல் நிற்கவேண்டும் என்று சொல்வதோடு திரும்ப திரும்ப எச்சரிக்கையாக இருங்கள் ஆயுதத்தை கீழே வைக்காதீர்கள் என்றெல்லாம் கூறுவது ஒரு சாதாரண பயந்தாங்கல்லி மனிதன் சொல்வது போல் உள்ளது.

தன்னை தொழுபவர்களைகூட அந்த நேரத்தில் காக்க திறமை இல்லாதவரா ஒரு சர்வவல்ல இறைவன்? தன்னை தொழும் போதுகூட காக்க முடியாத இறைவன் நம் வாழ்வின் மாற்ற நேரங்களில் நம்மை எப்படி பாதுகாப்பார்?
சற்று விளக்கவும்.


sundararajdotp(att)gmail.com

முஸ்லிம் said...

நண்பர் சுந்தரராஜ் அவர்கள் சந்தேகக் கேள்வியாக வைக்கும் குர்ஆன் வசனங்களிலேயே அதற்கான விளக்கங்கள் இருக்கின்றன.
தன்னை வணங்குபவர்களைக் கூட இறைவனால் காப்பாற்ற முடியவில்லை எனும் அளவுக்கு இறைவன் பயந்தாங்கோழையா? என்ற கேள்வியை நண்பர் வைத்திருக்கிறார். இது பொதுவாக ஆத்திகவாதிகள் அனைவரையும் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. எனினும் மொத்தமாக ஆத்திவாதிகள் என்ற வட்டத்திற்குள் நாம் செல்ல வேண்டாம்.

தொழுது கொண்டிருக்கும் தன்னுடைய அடியார்களைக் காப்பாற்ற இயலாத கோழையா இறைவன்? என்று நண்பர் சுந்தரராஜ் சொல்லும் இறைவனைப் பற்றியே இங்கு விளக்கமளிப்போம். முதலில் 4:102வது வசனத்தை முழுமையாக இங்கு காண்போம்.

(நபியே) ''நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தா செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங்களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர்''... (அல்குர்ஆன், 4:102)

இந்த வசனத்தை மேலோட்டமாகப் படித்தாலே, தன்னைத் தொழும் தன்னடியார்களைக் காப்பாற்றும் முழுப் பொறுப்பிலும் இறைவன் ஈடுபாடு காட்டுகிறான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த வழியில் செல்லாதீர்கள் இங்கு புதைகுழி அபாயம் இருக்கிறது என்று பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்வதும் அவர்களைக் காப்பாற்றும் முயற்சி தானே. அது போல் தன்னை வணங்கும் அடியார்களைக் காப்பாற்றும் விதமாகவே இந்த வசனத்தில் இறைவன் எச்சரிக்கை விடுத்து அதற்கான வழிமுறைகளை வகுக்கிறான்.

இங்கு எதிரிகளின் திட்டங்கள் முறியடிக்கப்படுகிறது எப்படி?

''உங்கள் ஆயுதங்களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர்...''

இதுதான் எதிரிகளின் வஞ்சகத் திட்டம்.

போர்க்களத்தில் முஸ்லிம்கள் இறைவணக்கத்தில் ஈடுபடுவார்கள். அந்த இறைவணக்கத்தில் ஸஜ்தாவெனும் நெற்றியை நிலத்தில் வைத்து சிரவணக்கம் செய்வார்கள். இந்த தருணத்தில் திடீரென அவர்கள் மீது பாய்ந்து, அவர்களைத் தாக்கி அழித்து விடலாம் என்பது எதிரிகளின் திட்டமாக இருந்தது. அதைத்தான் இறைவன் இங்கு வெளிப்படுத்தி முஸ்லிம்களை எச்சரிக்கை செய்கிறான்.

அதாவது நீங்கள் சிரவணக்கம் செய்யும் நேரத்தில் உங்களைக் கொல்ல நிராகரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே போர்க்களத்தில் முஸ்லிம்கள் அனைவரும் மொத்தமாக சிரவணக்கம் செய்ய வேண்டாம். ஒரு பகுதியினர் சிரவணக்கம் செய்யும் போது இன்னொரு பகுதியினர் ஆயுதங்களோடு எதிரிகளைக் கண்காணித்துக் கொள்ளுங்கள். பிறகு சிரவணக்கம் செய்தவர்கள் எழுந்து எதிரிகளைக் கண்காணிக்கட்டும். ஏற்கெனவே சிரவணக்கம் செய்யாதவர்கள் தொழுகையில் கலந்து கொள்ளட்டும் என்று முஸ்லிம்களுக்கு இறைவன் எச்சரிக்கை வழங்கி அவர்களைக் காப்பற்றுகிறான்.

இதோ எதிரிகளின் வஞ்சகத் திட்டம்.

''முஸ்லிம்கள் (தொழுகை) நிலையில் இருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களை நாம் தாக்கினால் (வீழ்த்தி விடலாம்'') என்று பேசிக் கொண்டார்கள்.

பின்னர் அவர்களில் சிலர் ''இன்னும் சற்று நேரத்தில் இவர்களுக்கு ஒரு தொழுகை வரும் அது அவர்களுக்கு இவர்களின் மக்களையும், உயிரையும் விட மிகவும் விருப்பமான ஒன்றாகும். (அந்தத் தொழுகையில் அவர்களைத் தாக்கலாம்)'' என்று கூறினர். இந்நிலையில் லுஹ்ருக்கும் அஸருக்கும் இடைப்பட்ட நேரத்தில்(4:102வது) இந்த வசனத்தை வானவர் ஜிப்ரீல் (அலை) கொண்டு வந்தார்கள். (நபிமொழியின் சுருக்கம்: நூல்கள், அபூதாவூத், நஸயீ, முஸ்னது அஹ்மத்)

போர்க்களத்தில் எதிரிகளின் சூழ்ச்சியை அறிந்த இறைவன் அவர்களிடமிருந்து முஸ்லிம்களை எச்சரித்துக் காப்பாற்றுவதற்காகவே 4:102வது வசனத்தை அருளினான் என்பது வரலாறு.

''நம்பிக்கை கொண்டோரே! எச்சரிக்கையுடன் இருங்கள்! தனித்தனிக் குழுக்களாகப் புறப்படுங்கள்! அல்லது அனைவரும் சேர்ந்து புறப்படுங்கள்''. (அல்குர்ஆன், 4:71)

இதுவும், இது போன்ற வசனங்களும் எச்சிரிக்கை விடுப்பது கோழைத்தனத்தால் அல்ல, மாறாக தனியாகச் சென்று எதிரிகளிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்ற அக்கறைதான். அந்த அளவுக்கு அன்றைய நிராகரிப்பாளர்கள், முஸ்லிம்களுக்கு தொல்லைகள் வழங்கிக் கொண்டிருந்தனர்.

''உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள்'' (அல்குர்ஆன், 2:217)

முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே அன்றைய நிராகரிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது, அதுவரை நிராகரிப்பாளர்கள் போர் செய்து கொண்டே இருப்பார்கள் என்று எதிரிகளின் உள்ளங்களை இறைவன் இங்கு வெளிப்படுத்துகிறான். எனவே போர்க்களத்தில் முஸ்லிம்களை நோக்கி எச்சரிப்பதும் அவர்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் நோக்கம் என்று கொள்க!

உள்ளங்களை அறியக்கூடிய இறைவன், எதிரிகளின் உள்ளங்களை அறிந்து, அதற்குத் தக்கவாறு முஸ்லிம்களை தயார்படுத்திக் கொள்ளக் கட்டளையிடுவது சர்வ வல்லமையுள்ள இறைவனின் தகுதியை எந்த விதத்திலும் குறைபடுத்தியதாகாது. போர்க்களத் தொழுகைகளில் ஒரு சாரார் இறைவனை வணங்கிக் கொண்டிருக்க, மற்றொரு சாரார் பாதுகாப்பாக ஆயுதமேந்தி நிற்பதும் காப்பாற்றும் பணியே இங்கு மேற்கொள்ளப்படுகிறது. தன்னை வணங்குபவர்களை இறைவன் காப்பாற்றிக் கொள்ள தொழுகை நிலையில் சில மாற்றங்களை செய்து கொள்ள அனுமதிக்கின்றான்.
அல்குர்ஆன், 4:102வது வசனத்தை முழுமையாக விளங்கினால், போர்க்களத்தில் முஸ்லிம்களை காப்பாற்றுவதில் இறைவனின் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும்!

November 23, 2007 2:36 AM

sundararaj said...

நண்பர் அவர்களே,உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

நான் இறைவனை குற்றவாளி என்றோ கோளைஎன்றோ சொல்கிறேன் என தவறாக நினைக்காதீர்கள். சர்வ வல்ல இறைவனை அப்படி சொல்வதை விட சாவது மேல்.எனது கேள்வி அந்த வார்த்தை ஒரு எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைதானா என்பது பற்றித்தான்.ஒரு வார்த்தை என்ன என்பதைவிட அதை யார் சொல்கிறார்கள் என்பதை வைத்துத்தான் அதன் மதிப்பு உள்ளது.

உதரணமாககை கால்கள் செயலற்று கட்டிலில் கிடக்கும் ஒரு வயதான தகப்பன் தன் இரண்டு மகன்களை பார்த்து. பக்கத்து தெருவில் உள்ள கிணற்றில் போய் இரண்டு குடம் தண்ணீர் கொண்டு வாருங்கள். போகும் போது பார்த்து போங்கள், அந்த தெருவில் நமக்கு எதிரிகள் உள்ளனர், கையில் ஆயுதம் கொண்டுபோங்கள், தண்ணி கோரும் போது எச்சரிக்கைகாய் இருங்கள், ஒருவன் தன்னிற் கோரினால் மற்றவன் காவல் காக்கவேண்டும் எனேற்றால் நீங்கள் குனியும் நேரத்தில் எதிரி உங்களை தாக்கலாம் என்றெல்லாம் சொன்னால் அது நீங்கள் சொல்வது போல் முற்றிலும், நியாயம்.

ஆனால் இங்குள்ள தகப்பன் அப்படிபட்டவர் அல்லபத்துபேரை ஒரே கையில் அடிக்கும் மிகப்பெரிய பயில்வான், எப்பொழுதும் அவர்சொன்ன்னத்தை செய்து முடிக்க அனேக அடியாட்கள் உண்டு. மேலும் ஒருகாலத்தில் அவர் பலபேருக்கு துணையாய் நிற்று பெரிய பெரிய பராக்கிரம செயல்களை செய்தவர். அவர் மேற்கண்டவாறு " போகும் போது பார்த்து போங்கள், அந்த தெருவில் நமக்கு எதிரிகள் உள்ளனர், கையில் ஆயுதம் கொண்டுபோங்கள், தண்ணி கோரும் போது எச்சரிக்கைகாய் இருங்கள், ஒருவன் தன்னிற் கோரினால் மற்றவன் காவல் காக்கவேண்டும் எனேற்றால் நீங்கள் குனியும் நேரத்தில் எதிரி உங்களை தாக்கி அளித்துவிடுவர்கள் என்று சொன்னால் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்.

ஒருகாலத்தில் அவர் பயில்வான் அனால் இப்பொழுது வயதாகி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கவேண்டும் அவரோடு இருந்த அடியாட்கள் எல்லாம் அவரை விட்டு ஓடி விட்டிருக்கவேண்டும் முன்பு பலசாலியாக இன்ருந்தவர் இப்பொழுது கோளையாக மாறியிருக்கவேண்டும். அவருக்கு அவர் மகன்களை காப்பதை விட வேறு எதாவது முக்கிய வேலையிருக்கவேண்டும் (அப்படி என்றால் கூட அடியாட்களை அனுப்பலாம்) அல்லது நான் முன்பு அப்படி செய்தேன் இப்படி செய்தேன் என்பது பொய்யாக இருக்கவேண்டும்.

வேறு எதாவது காரணம் இருந்தால் சொல்லுங்கள். இதில் நான் எதை எடுத்துக்கொள்ள?

கொஞ்சம் துணிந்த தகப்பன் கூட " நீ துணிந்து போடா உன்மேல் யார் கை வைக்கிறார்கள் என்று நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றல்லவா சொல்வான்.இங்கோ இவர் எல்லாம் வல்ல இறைவன், அவர் சொன்னதை செய்ய அனேக தேவ தூதர்கள் உண்டு, ஒருகாலத்தில் மூசா நபி போன்ற நபிகளுக்கு உதவி செய்து பெரிய பெரிய காரியங்களை செய்தவர்.
இங்கு அவர் இடும் கட்டளையை நிறைவேற்றும்போது நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் நான் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல என்பதுபோல் சொல்வது சரியா நண்பரே.

இது ஒரு எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தை தானா?

November 23, 2007 9:17 PM

world contributer said... god wants us to try and be carefull, god also can protect in magic but he doesn't like that way.

dont work, sit in home food and water would come to you as if he gave to Mosus people and Mariam but god doesn't like that way he encourage us to try.
god created this world in six day but he could also creat it in one secound, he doesn't like this style, however he like he do.

what ever you ask in this religion we have clear anwser, but you have just a sculpture and a name.

November 24, 2007 3:28 AM

முஸ்லிம் said...

நண்பர் அவர்களே!
இதில் தவறாக எண்ணுவதற்கு எதுவுமில்லை. நீங்கள் எழுதிய கேள்விக்குத்தான் நாம் பதில் எழுதினோம்.

//தன்னை தொழுபவர்களைகூட அந்த நேரத்தில் காக்க திறமை இல்லாதவரா ஒரு சர்வவல்ல இறைவன்? தன்னை தொழும் போதுகூட காக்க முடியாத இறைவன் நம் வாழ்வின் மாற்ற நேரங்களில் நம்மை எப்படி பாதுகாப்பார்? சற்று விளக்கவும்.//

தன்னை தொழுபவர்களை கூட காப்பாற்ற இயலாதவன் சர்வ வல்லமையுள்ள இறைவனாக எப்படி இருக்க முடியும்? என்ற உங்களின் கேள்விக்கு, போர்க்களத்தில் தொழுகையை நிறைவேற்றும் முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காகவே அல்குர்ஆன் 4:102வது வசனம் அருளப்பட்டது என்ற வரலாறு ஆதாரங்களை எழுதினோம்.

கேள்விக்கு நேரடியான விளக்கங்கள் அந்த வசனத்தில் உள்ளது என விளக்கிய பின்னும், ''இப்படிச் சொல்வது இறைவனின் வார்த்தைகள்தானா? என உங்கள் விமர்சனம் தற்போது வேறு பாதையில் பயணிக்கிறது.

அல்குர்ஆன் முழுவதும் இறைவனின் வார்த்தைகள் என்பதில் முஸ்லிம்களிடம் அணுவளவும் சந்தேகமில்லை.

பொதுவாக, இறைவன் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று இறைவனை தமது இஷ்டத்துக்குப் படைத்துக் கொள்கிறார்களே அவர்களுக்குத்தான் இறைவன் இப்படி இருக்கக் கூடாது நான் விரும்புகிற மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்வது பொருந்தும்.

இறைவழியில் போரிட்டு செத்து மடிந்து போ!
பெரும்படையே வந்தாலும் துணிந்து எதிர்த்து நில்!
போரில் புறமுதுகு காட்டி ஓடாதே!
போரில் நயவஞ்சகத்தனம் செய்யாதே!
இப்படி பல வசனங்கள் இறைவனின் பாதையில் துணிந்து போர் செய்யும்படி வலியுறுத்துகிறது. சத்தியத்துக்கு மட்டும் பணிந்து நட! அசத்தியத்திற்கு பணிந்து விடாதே என்றெல்லாம் முஸ்லிம்களுக்கு இறைவசனம் அறிவரை வழங்குகிறது!

''எத்தனையோ நபிமார்களுடன் சேர்ந்து எவ்வளவோ படையினருடன் போரிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்) துக்காக அவர்கள் தளர்ந்து விடவில்லை, பலவீனப்படவுமில்லை, பணிந்து விடவுமில்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.'' (அல்குர்ஆன், 3:146)

வரலாறு சிறப்புமிக்க பத்ருப்போரில் எதிரிகளின் படையை விட நான்கில் ஒரு பங்குதான் முஸ்லிம் படை வீரர்கள் இருந்தனர். ஆனாலும் துணிந்து போர் செய்யுங்கள் என வானவர்களைக் கொண்டு இறைவன் உதவினான்.
பத்ருப்போரில், இறைவன் வானவர்களைக் கொண்டு உதவியது போல் எல்லாப் போர்களிலும் வானவர்களைக் கொண்டு உதவினால் பிறகு மனித தியாகத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது! முஸ்லிம்கள் போரில் ஒப்புக்கு நின்று கொண்டு, வானவர்கள் போர் செய்தால் அது எப்படி முஸ்லிம்களின் தியாகமாகும்.

எனவே, சர்வ வல்லமையுள்ள இறைவனின் தனி அதிகாரத்தை நிலைநாட்டும் ஏராளமான வசனங்கள் அல்குர்ஆனில் உள்ளன. அதற்கு எந்த வகையிலும் முரண்பட்டதல்ல 4:102வது திருவசனம்.

இந்த வசனத்திலும் இறைவனின் தனித்தன்மை நிலைநாட்டப்படுகிறது. எதிரணியினர் செய்த சூழ்ச்சியை இறைவனைத் தவிர வேறு எவரும் அறிந்திருக்க முடியாது.

போர்க்களத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் மெய்மறந்து இறைவணக்கத்தில் வழக்கம் போல் ஈடுபட்டு விடக்கூடாது என்பதாலேயே அங்கு உடனடியாக தொழுகையின் நிலையை மாற்றி அமைத்துக்கொள்ள இறைவன் கட்டளையிடுகிறான். இறைவனின் இந்த கட்டளை இல்லாமல் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழக்கம் போல் தொழும் இறைவணக்கத்தை மாற்றி அமைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இறைவன் உடனடியாக மாற்று ஏற்பாட்டுக்கு உத்தரவிட்டு இறைச் செய்தி அனுப்புகிறான், அவன்தான் சர்வ வல்லமையுள்ள இறைவன்!

போர்க் காலங்களில் இறைவன் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வதால் அது இறைவனின் வார்த்தைகள் அல்ல என்று உங்களுக்குத் தோன்றுவது போல், அப்படி எச்சரிப்பதுதான் விவேகம் என்று முஸ்லிம்களுக்கு தோன்றுகிறது. இதுதான் நியாயமும் கூட, முஸ்லிம்களுக்கு வழிகாட்டி அல்குர்ஆன் என்பதால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவும் குர்ஆன் வழிகாட்டுகிறது!

குறிப்பு: கட்டிலில் கிடக்கும் தகப்பன், கிணற்றுக்கு தண்ணீர் கோரச் சென்ற உவமை, பயில்வான் இது போன்ற உதாரணங்களெல்லாம் நீங்கள் வைத்த கேள்விக்கும், இங்கு வைத்த விளக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதால் அவைகள் கண்டுகொள்ளப்படவில்லை நன்றி!

November 24, 2007 7:12 AM

sundararaj said...

அன்பு நண்பர் அவர்களே:-ஒரு இறைவன் என்றால் இப்படி இப்படி எல்லாம் இருப்பார் என்று எல்லோருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும். அதன் அடிப்படையில் தான் அவர் இப்படிபட்டவரா இப்படி சொல்வரா என கேள்வி கேட்டேன்.

இறைவனின் வார்த்தைகள் படி நாம் நடந்தால் அவர் நம்மை எல்லா தீங்கிற்ற்கும் விலக்கி நம்மை பாதுகாப்பார் என்று நான் நினைத்தேன் அது போல பல வார்த்தைகள் நான் பைபிள் படித்தபோதும் சொல்லப்படிருந்தது.
ஆனால் இங்குள்ள வார்த்தைகள் நான் அட்வைஸ் பண்ணுவேன் நீங்கள்தான் எல்லாம் பார்த்து செய்ய வேண்டும் என்பது போல இருந்ததால் இந்த கேள்வி கேட்டேன். நீங்களும் எனக்கு அட்வைஸ் பண்ணினால் அதுவே பெரியது என்று சொல்கிறீர்கள் நல்லது.

மேலும் உங்களிடம் எதற்கும் பதில் இல்லை என நினைக்கவில்லை, இங்கு பலரிடம் கேட்ட கேள்விகளில் சரியான பதில் கிடைக்காத கேள்விகள் மட்டுமே இந்த இணையத்தளம் இருப்பதை அறிந்து கேட்கிறேன்.
உங்கள் பதிலுக்கு நன்றி.

November 25, 2007 10:41 PM

அபூ முஹை said...

This post has been removed by the author. November 26, 2007 11:39 AM

அபூ முஹை said...

அருமையான பங்களிப்புகள்!

November 26, 2007 11:48 AM

முஸ்லிம் said...

நண்பர் சுந்தரராஜ் அவர்களே நன்றி.

''அவன் செய்பவை பற்றி அவனை எவரும் கேட்க முடியாது'' (அல்குர்ஆன், 21:23)

இறைவனுக்கும் மனித குலத்துக்கும் உள்ள தொடர்பு: இறைவன், அடியார்கள் என்பதே இஸ்லாத்தின் ஏகத்துக் கொள்கையின் அடிப்படையாகும்.

மீண்டும் நன்றியுடன்.

November 26, 2007 11:52 AM

Saturday, November 17, 2007

பிஜே குர்ஆன் மொழியாக்கம்

மௌலவி பி.ஜெ அவர்கள் மொழியாக்கம் செய்த குர்ஆன் தர்ஜூமாவில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.
1. அவரது மொழியாக்கத்தில் 2:102 ல் ஹாரூத் மாரூத் இருவரையும் சைத்தான்கள் என்கிறார்.. உண்மையா.?
2. திருக்குர் ஆனில் ஸஜ்தா வரக்கூடிய வசனங்கள் மொத்தம் 4 மட்டுமே என்கிறார்..அத்தாட்சியாக உஸ்மான் ரழி அவர்களால் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ள திருக்குர்ஆனை எடுத்து வைக்கிறார்.. அந்த குர்ஆன் படிவம் இப்போது உள்ளதா..? மொத்தம் எத்தனை ஸஜ்தாக்கள்..? விளக்கவும்
mmazizurrahman(att)gmaildotcom
..........................................